
நுபியா ரெட் மேஜிக் தனது புதிய பிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போனை (smartphone) சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் வரிசையில் நிறுவனம் ரெட் மேஜிக் 8 ப்ரோ (Red Magic 8 Pro) மற்றும் 8 ப்ரோ+ (Red Magic 8 Pro+) ஆகியவற்றை சேர்த்துள்ளது. முதல் முறையாக அண்டர் டிஸ்பிளே செல்ஃபி கேமராவுடன் (under display selfie camera) இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது டிஸ்பிளேவில் எங்குமே கேமராவிற்கான துளைகள் எதுவும் இல்லாத டிஸ்பிளேவுடன் (real full size display) இந்த மொபைல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய வடிவமைப்பு
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் கேமிங்கை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. இரண்டு போன்களும் சில சக்திவாய்ந்த மற்றும் திறன் மிக்க வசதிகளைக் கொண்டிருப்பதால், இது அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக இதன் அண்டர் டிஸ்பிளே கேமரா அம்சம் மற்றும் ஸ்னாப் டிராகன் 8 ஜென் 2 சிப்செட் போன்ற அம்சங்கள் ஹைப்பை அதிகரித்துள்ளது.
Red Magic 8 Pro தொடரானது, நிறுவனத்தின் வரலாற்றிலிருந்து இதுவரை இல்லாத அளவில் 2068mm³ மொத்த அளவு கொண்ட VC குளிர்ச்சியின் மிகப்பெரிய அளவைக் கொண்டுள்ளது. அதன் செயலி உட்பட, சாதனத்தின் சில முக்கிய உள் விவரக்குறிப்புகளில் தெளிவான பார்வையைப் பெற இது உதவுகிறது. அதன் கேமிங் அம்சத்தை சேர்க்க RGB இயக்கப்பட்ட பிரத்தியேக குளிரூட்டும் விசிறியைக் கூட நீங்கள் பார்க்க முடிகிறது.
மின்னல் வேகம்
இந்த ஸ்மார்ட்போன்கள் அட்டகாசமான டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது. டிஸ்ப்ளே பேனலுக்கு அடியில் செல்ஃபி கேமரா வைக்கப்பட்டுள்ளதால், இரண்டு மாடல்களிலும் முன்புறம் ஆல் ஸ்கிரீன் பாடி அனுபவம் கிடைக்கிறது. இந்த போன்கள் மிகவும் வேகமான 520Hz கேம் ஷோல்டர் கீகளைக் கொண்டுள்ளது.
ரெட் மேஜிக் 8 ப்ரோ சீரிஸின் இரண்டு போன்களும் பெரும்பாலும் ஒத்த அம்சங்களைக் கொண்டுள்ளன. இரண்டுமே Qualcomm இன் சமீபத்திய மற்றும் சிறந்த ஸ்னாப்டிராகன் 8 Gen 2 SoC உடன் வெளியாகி உள்ளன. 8 Pro இல் 12GB வரை ரேம் மற்றும் 256GB வரை ஸ்டோரேஜை கொண்டுள்ளது. அதேபோல், ஹை-எண்டு மாடல்கள் 16GB வரையிலான ரேம் மற்றும் 1TB வரை ஸ்டோரேஜை கொண்டுள்ளது.
டிஸ்ப்ளே
இந்த இரண்டு மொபைல்களும் 2480 x 1116 பிக்சல் அடர்த்தி மற்றும் அதிக 120Hz ரெப்ரெஷ் ரேட் வீதத்தை வழங்கும் 6.8 அங்குல OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே அதிக 97.3 சதவிகித டிஸ்பிளே மற்றும் பாடி விகிதத்தையும் கொண்டுள்ளது. இந்த போன்கள் 96kHz ஆடியோ மற்றும் 48ms லோ-லேடன்சி ஆதரிக்கும் அல்ட்ரா லீனியர் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வருகின்றன.
கேமரா
இரண்டு மாடல்களையும் வேறுபடுத்தும் அம்சங்களில் ஒன்று பேட்டரி பேக் மற்றும் சார்ஜிங் விகிதங்கள் மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது. இரண்டு ஃபோன்களும் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும், இதில் 50 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் உள்ளது. அது டிஸ்பிளேவுக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
பேட்டரி
ரெட் மேஜிக் 8 ப்ரோ ஒரு பெரிய 6,000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது, இது 80W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இது 47 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்க கூடியது என்று நிறுவனம் கூறுகிறது. அதேவேளையில், Red Magic 8 Pro+ ஒரு 5,000mAh பேட்டரியைக் கொண்டு இருக்கிறது. ஆனால் அதன் சார்ஜிங் வேகம் 165W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இதனை வெறும் 14 நிமிடங்களில் 0 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.
Red Magic 8 Pro போனின் விலை
Red Magic 8 Pro போனின் 8GB + 128GB மாடல் இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 47,515 என்ற விலையிலும், இதன் 8GB + 256GB மாடல் ரூ. 52,226 என்ற விலையிலும், இதன் 12GB + 256GB மாடல் இந்திய மதிப்பில் ரூ. 56,936 என்ற விலையிலும், இறுதியாக ரெட் மேஜிக் 8 ப்ரோ டியூட்டிரியம் டிரான்ஸ்பரன்ட் எடிஷன் 12ஜிபி + 256ஜிபி மாடல் ரூ. 59,332 விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Red Magic 8 Pro+ போனின் விலை
Red Magic 8 Pro+ மொபைலின் 12GB + 256GB மாடல் ரூ. 61,729 விலையிலும், இதன் 16GB + 512GB மாடல் ரூ. 68,836 என்ற இந்திய மதிப்பிலும், இதன் டியூட்டிரியம் டிரான்ஸ்பரன்ட் எடிஷன் 12ஜிபி + 256ஜிபி மாடல் ரூ. 64,043 என்ற விலையிலும், டியூட்டிரியம் டிரான்ஸ்பரன்ட் எடிஷன் 16ஜிபி + 512ஜிபி மாடல் ரூ. 71,232 என்ற விலையிலும், டியூட்டிரியம் டிரான்ஸ்பரன்ட் எடிஷன் 16ஜிபி + 1டிபி மாடல் ரூ. 83,049 என்ற விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல்கள் டிசம்பர் 28, 2022 அன்று சீனாவில் விற்பனைக்கு வருகிறது. இந்த மொபைல்களை தற்போது ப்ரீ-ஆர்டர் செய்ய முடியும்.