Home News கம்மி விலையில் ரெட்மி 5G போன்

கம்மி விலையில் ரெட்மி 5G போன்


ரெட்மி நிறுவனம் தொடர்ந்து குறைந்த விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது புதிய ரெட்மி 10ஏ ஸ்போர்ட் (Redmi 10A Sport) எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது.

ரெட்மி 10A ஸ்போர்ட், MediaTek சிப்செட், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் மற்றும் பெரிய டிஸ்பிளேவுடன் வெளியாகி இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 6.53-அங்குல HD+டிஸ்பிளே, வாட்டர்-டிராப் நாட்ச் (water-drop notch) போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது. 1600 x 720 பிக்சல்ஸ், 20:9 ratio, 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போன்.

இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் தரமான சிப்செட் வசதி உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதாவது மீடியாடெக் ஹீலியோ ஜி25 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது ரெட்மி. குறிப்பாக இந்த சிப்செட் உதவியுடன் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரெட்மி 10ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போன்.

ரெட்மி 10A ஸ்போர்ட் ஸ்மார்ட்போனில் 6GB RAM மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு (memory extension) ஆதரவும் இருக்கிறது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்ம் உள்ளது.

இந்த ரெட்மி 10A ஸ்போர்ட் ஸ்மார்ட்போன் ஆனது 13மெகாபிக்சல் பின்பக்க கேமராவைக் (f2.2 aperture) கொண்டுள்ளது. எனவே இதன் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்ஃபீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் 5மெகாபிக்சல் முன்பக்க கேமராவும் இருக்கிறது.

புதிய ரெட்மி 10A ஸ்போர்ட் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேர பேட்டரி பேக் அப் கிடைக்கும். 10W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி ஸ்மார்ட்போன்.

டூயல் சிம், 4ஜி, வைஃபை 802.11, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி 10ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 194 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி 10A ஸ்போர்ட் விலை ரெட்மி 10ஏ ஸ்போர்ட் விலை 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ரெட்மி 10A ஸ்போர்ட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999-ஆக உள்ளது. மேலும் இந்த புதிய போன் சார்கோல் பிளாக் (charcoal black), ஸ்லேட் கிரே (slate gray) மற்றும் சீ ப்ளூ (sea blue) நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தஸ்மார்ட்போனை MI ஸ்டோர் மற்றும் அமேசான் இந்தியா தளங்களில் வாங்க முடியும். இந்தியாவில் விரைவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என்பதால் பல செல்போன் நிறுவனங்கள் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. அந்த வரிசையில் ரெட்மி நிறுவனமும் தொடர்ந்து பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது.