Redmi 12 ஆகஸ்ட் 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வரவிருக்கும் ரெட்மி 12 மொபைலானது அமேசானில் பிரத்தியேகமாக கிடைக்கும் என்று ஒரு மைக்ரோசைட் வெளிப்படுத்தியுள்ளது. அதனைப்பற்றிய சில தகவல்களை இப்போது பார்க்கலாம்.
- இந்த மைக்ரோசைட் மூலம் Redmi 12 மொபைலானது, Mi.com மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களுடன் அமேசானிலும் கிடைக்கும் என்பது தெரிய வருகிறது.
- நிறுவனம் Redmi 12 ஐ ஒரு ஸ்டைலான மொபைலாக விளம்பரப்படுத்தி வருகிறது. மேலும் வரவிருக்கும் Redmi நம்பர் சீரிஸ் போனின் தூதராக பாலிவுட் நடிகை திஷா பதானியை தேர்வு செய்துள்ளது.
- ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு கிரிஸ்டல் கிளாஸைக் காண்பிக்கும் என்று மைக்ரோசைட் வெளிப்படுத்தியுள்ளது.
- Redmi 12 பற்றிய கூடுதல் விவரங்கள் மைக்ரோசைட் வழியாக வரும் நாட்களில் வெளியிடப்படும்.
Redmi 12 விவரக்குறிப்புகள்
இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே தாய்லாந்து மற்றும் சில குறிப்பிட்ட நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. எனவே வரவிருக்கும் Redmi 12 இன் விவரக்குறிப்புகள் மற்றும் விலை வரம்பு பற்றி நாங்கள் அறிந்திருக்கிறோம். இருப்பினும், இந்திய மாறுபாடு அதே அம்சங்களுடன் வருமா அல்லது உலகளாவிய மாறுபாடுகளிலிருந்து வேறுபட்டதா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
REDMI 12 விவரக்குறிப்பு | |
டிஸ்ப்ளே | நிலையான 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.79-இன்ச் FHD+ டிஸ்ப்ளே |
பின் கேமரா | 50MP பிரதான கேமரா + 8MP அல்ட்ரா-வைட் சென்சார் + 2MP மேக்ரோ லென்ஸ் |
செல்ஃபி கேமரா | முன்பக்கத்தில் 8MP கேமரா |
சிப்செட் | MediaTek Helio G88 12nm Mali-G52 2EEMC2 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது |
சேமிப்பு | 4ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் |
OS | ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI 14 |
பேட்டரி | 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி |
Redmi 12 விலை
இந்த Redmi 12 ஸ்மார்ட்போனின் 8GB+128GB சேமிப்பு வேரியண்ட் தாய்லாந்தில் TBH 5,299க்கு கிடைக்கிறது. இது தோராயமாக இந்திய மதிப்புக்கு ரூ.12,600க்கு சமம். இதற்கிடையில், இந்தியாவின் விலை ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியீட்டின் போது வெளியிடப்படும். இருப்பினும், ரெட்மி இதை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.