Redmi 12 இந்திய பதிப்புக்கான டீசர் வெளியானது; டிரிபிள்-கேமரா, MediaTek Helio G88 SoCயோடு வருகிறது.

Highlights

  1. Redmi 12 ஆனது 50MP டிரிபிள் கேமரா அமைப்புடன் அறிமுகப்படுத்தப்படும்.
  2. இந்த போன் தாய்லாந்தில் 6.79 அங்குல அளவில், 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது.
  3. இதில் 5000mAh பேட்டரி உள்ளது.

Xiaomi துணை பிராண்டான Redmi புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. நிறுவனம் இந்த மாத இறுதியில் புதிய நம்பர் சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. மொபைலின் பெயர் வெளியிடப்படவில்லை என்றாலும், Xiaomi மற்றும் Redmi அதிகாரிகள் Redmi 12 இன் வெளியீட்டைக் குறிக்கும் டீஸர் வீடியோக்களை பதிவேற்றி வருகின்றனர். அதிகாரப்பூர்வ ரெட்மி இந்தியா ட்விட்டர் கணக்கு வழியாக பதிவேற்றப்பட்ட மற்றொரு டீஸர் வரவிருக்கும் மொபைலின் பின்புற பேனல் வடிவமைப்பை வெளிப்படுத்துகிறது. இந்த டீஸர்கள் ரெட்மி 12 விரைவில் இந்தியாவிற்கு வரவுள்ளதாக தெரிவிக்கின்றன.

Xiaomi ஏற்கனவே சில உலகளாவிய சந்தைகளில் Redmi 12 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மொபைல் 4ஜி ஸ்மார்ட்போன் ஆகும். மேலும் இதன் விலை இந்தியாவில் ரூ.12,000 ஆக இருக்கும். இந்தியாவில் Redmi 12 எதிர்பார்க்கப்படும் விலை, விவரக்குறிப்புகள் மற்றும் அதன் அறிமுகத்திற்கு முன்னதாக மற்ற விவரங்களைப் பார்ப்போம்.

Redmi 12 இந்தியா வெளியீடு

Redmi 12 ஆனது Xiaomi இன் மற்றொரு பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இந்தியாவில் ரூ.15,000க்குக் கீழான விலையில் வெளியாகும். இந்த போன் ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. Xiaomi, தான் அறிமுகப்படுத்த இருக்கும் மொபைலின் அறிமுகத் தேதியை வெளியிடாமல் மொபைலை டீஸ் செய்துள்ளது. சமீபத்திய டீஸர் வரவிருக்கும் ரெட்மி ஃபோனின் பின்புற பேனல் வடிவமைப்பை உறுதிப்படுத்துகிறது. இது டிரிபிள்-கேமரா அமைப்பிற்காக பின்புறத்தில் மூன்று வட்ட வடிவ கட்அவுட்களைக் காட்டுகிறது. ஃபோனில் USB Type-C போர்ட் மற்றும் கீழ் விளிம்பில் ஸ்பீக்கர் கிரில் உள்ளது.

மேலும், Redmi 12 இன் டீஸர் வீடியோ, தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மொபைலின் போலார் சில்வர் வண்ண விருப்பத்தைக் காட்டுகிறது. Xiaomi இந்த மொபைலை மூன்று வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. அவை ஏற்கனவே தாய்லாந்தில் வாங்குவதற்கு கிடைக்கின்றன. இவை மிட்நைட் பிளாக், ஸ்கை ப்ளூ மற்றும் சில்வர் நிறங்களில் இருக்கும்.

மொபைலின் 8 ஜிபி ரேம் விருப்பம் தாய்லாந்தில் TBH 5,299 (தோராயமாக ரூ. 12,400) க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இது 4ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை சேமிப்பகத்துடன் குறைந்த சேமிப்பக டிரிம்களையும் கொண்டுள்ளது. நிறுவனம் Redmi 12 இந்தியா மாறுபாட்டை குறைந்தபட்சம் 4GB ரேம் மற்றும் 64GB சேமிப்பகத்துடன் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். இந்த மொபைல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பகத்துடன் கிடைக்கும். இது பட்ஜெட் போன் என்பதால், மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1TB வரை சேமிப்பக விரிவாக்கத்திற்கான ஸ்லாட்டை ஃபோன் கொண்டுள்ளது.

Redmi 12: விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்

ரெட்மி 12 சற்று தட்டையான பிரேம் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஃபோனில் பஞ்ச்-ஹோல் கட்அவுட், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் மற்றும் பின்புறத்தில் டிரிபிள்-கேமரா அமைப்புடன் கூடிய உயரமான டிஸ்ப்ளே உள்ளது. டிஸ்ப்ளேவின் கீழ் பகுதியில் மிகவும் தடிமனான ’Chin’ உள்ளது. இந்த மொபைல்  MediaTek SoC-ஐ கொண்டுள்ளது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவும் உள்ளது. 

  • டிஸ்ப்ளே : 6.79-இன்ச் டிஸ்ப்ளே, 2460 x 1080 பிக்சல்கள் மற்றும் 396 PPI பிக்சல் அடர்த்தி முழு HD+ தெளிவுவோடு, திரையானது 550 நிட்ஸ் பிரகாசத்தையும் 70 சதவீத வண்ண வரம்பையும் வழங்குவதாகக் கூறப்படுகிறது. இது 90Hz புதுப்பிப்பு வீதத்திற்கான ஆதரவையும் வழங்குகிறது.
  • சிப்செட் : MediaTek Helio G88 SoC உடன் Mali-G52 GPU.
  • ரேம்/ சேமிப்பு : 8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பு (தாய்லாந்து).
  • பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் : 33W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 5000mAh பேட்டரி.
  • பின்புற கேமரா : 50MP முதன்மை கேமரா, 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2MP மேக்ரோ சென்சார்.
  • முன் கேமரா : 8MP.
  • மென்பொருள் : ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI 14.
  • மற்ற விவரக்குறிப்புகள் : பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர், IP53 மதிப்பீடு, AI முகம் திறப்பது, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் போன்றவை.