MediaTek Helio G85 சிப்செட், 5GB வரையிலான விர்சுவல் ரேம் வசதியோடு வெளியானது Redmi 12C

Highlights

  • Redmi 12C மொபைல்  MediaTek Helio G85 சிப்செட்டுடன் வெளியாகி இருக்கிறது
  • இந்த மொபைலின் ரேமை (6+5) 11GB வரை அதிகரித்துக் கொள்ள முடியும்.
  •  இது 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

 

இன்று நடைபெற்று வரும் Mi நிறுவனத்தின் புதிய மொபைல்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் Redmi Note 12 என்ற மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போனுடன் குறைந்த விலை போனாக Redmi 12C மொபைலும் வெளியாகி இருக்கிறது. Xiaomi ஏற்கனவே பல்வேறு உலகளாவிய சந்தைகளில் இந்த Redmi 12C மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது. Redmi 12C மொபைல்  MediaTek Helio G85 சிப்செட், 6.71 அங்குல IPS LCD டிஸ்ப்ளே, இது 5000mAh பேட்டரியோடு வெளியாகி இருக்கிறது. இந்த மொபைலை அமேசான் இணையதளம் மூலம் வாங்கு முடியும் என்று Xiaomi உறுதிப்படுத்தியுள்ளது.

 

டிஸ்ப்ளே

இந்த Redmi 12C மொபைல், 60Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.71அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதன் மேல்பக்க மையத்தில் முன்பக்க கேமராவிற்கான டாட் டிராப் நாட்ச் உள்ளது. திரைக்கு கீழே சற்று தடிமனான சின் பெசல் உள்ளது. போனின் திரை, 720 x 1650 பிக்சல்கள் HD+ ரெசல்யூஷனையும், 500nits பிரகாசத்தையும் கொண்டுள்ளது.

கேமரா

இந்த Redmi 12C மொபைலின் பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் உள்ளது. இது பெரிய கேமரா தொகுதிக்குள் வைக்கப்பட்டுள்ளது. இது தவிர AI Face unlock வசதியும் இருக்கிறது. கேமரா தொகுதி 50MP பிரதான கேமரா மற்றும் டெப்த் மேப்பிங்கிறகாக QVGA லென்ஸ் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கென,  f/2.2 அப்பச்சர் கொண்ட 5MP முன்பக்கக் கேமராவைக் கொண்டுள்ளது. இந்த கேமராக்கள் மூலம் 1080p வீடியோக்களை எடுக்க முடியும்.

 

சிப்செட் & இயங்குதளம்

Redmi 12C மொபைல் MediaTek Helio G85 சிப்செட்டைக் கொண்டிருக்கிறது. இதன் Mali-G52கேமிங் GPU மொபைலின் தங்குதடையற்ற பயன்பட்டிற்கு துணைபுரியும். இதில் ஆண்ட்ராய்டு 12 ரெட்மியின் MIUI 13 ஸ்கின் கஸ்டமைஸ் செய்யப்பட்ட இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு இரட்டை சிம் ஆதரவு கொண்ட 4ஜி மொபைல் ஆகும்.

மெமரி

4GB+64GB,  6GB+128GB என 2 விதமான வேரியண்ட்களில் இந்த ரெட்மி 12சி வெளியாகி இருக்கிறது. 5 ஜிபி வரை மெய்நிகர் ரேம் (Virtual RAM) ஆதரவு வசதியும் உள்ளது. அதாவது, இதன் மூலம் இந்த மொபைலின் 6ஜிபி ரேம் வேரியண்ட் மொத்தமாக 11 ஜிபி வரையிலான ரேமைக் கொண்டிருக்கும். இந்த ரேம் LPDDR4X வகையைச் சார்ந்தது. இது தவிர இதன் நினைவகத்தை 1TB வரை அதிகரிக்க மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டுக்கான ஆதரவும் உள்ளது.

 

நிறங்கள்

இந்த போன் இந்தியாவில் கிராபைட் க்ரே, ஓஷன் ப்ளூ, மிண்ட் கிரீன், லாவண்டர் பர்ப்பிள் என நான்கு வண்ணங்களில் அறிமுகமாகி இருக்கிறது.

பேட்டரி

இந்த மொபைல் 10W சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதற்கான 10W சார்ஜர் மொபைலுடன் வருகிறது. 192 கிராம் எடையில், 168.76 x 76.41 x 8.7 மிமீ அளவில் வெளியாகி இருக்கிறது இந்த Redmi 12C. இந்த மொபைலில் Type C போர்ட் இல்லை. மைக்ரோ USB மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

 

விலை

4GB+64GB = ரூ.8,999

6GB+128GB =ரூ.10,999

 

கனெக்டிவிட்டி

இந்த மொபைலில் ப்ளூடூதி 5.1, Wi-Fi, FM, NFC, GPS, 3.5mm ஆடியோ ஜாக் போன்ற வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.