மார்ச் 30 Redmi 12C அமேசான் இந்தியா வழியாக கிடைக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Highlights

  • Redmi 12C ஆனது MediaTek Helio G85 SoC ஐக் கொண்டிருக்கும்.
  • இது 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
  • இந்த மொபைல் 6.71 அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும்.

 

இந்தியாவில் மார்ச் 30 ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் இரண்டு புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவதை Xiaomi உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Redmi Note 12 5G போனின் 4G வேரியண்டாக Redmi Note 12 4G போன் வெளியாகும். இரண்டாவது அறிமுகமாக இருப்பது  Redmi 12C ஆகும் . Xiaomi ஏற்கனவே பல்வேறு உலகளாவிய சந்தைகளில் 12C ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய வேரியண்ட் அதே ஹார்டுவேரை கொண்டு இருக்க வாய்ப்புள்ளது. இப்போது, ​​வரவிருக்கும் Redmi 12C அமேசான் இந்தியா வழியாக வாங்கு முடியும் என்று Xiaomi உறுதிப்படுத்தியுள்ளது.

வரவிருக்கும் ரெட்மி போனின் சில முக்கிய விவரக்குறிப்புகளை அமேசான் இந்தியா மைக்ரோசைட்  பட்டியலிடுகிறது. இது தவிர, போனின் விலை விவரங்களும் குறியிடப்பட்டுள்ளன. இந்தியாவில் Redmi 12C இன் எதிர்பார்க்கப்படும் விலை, விவரக்குறிப்புகள் மற்றும் இதுவரை அறியப்பட்ட பிற விவரங்களைப் பார்ப்போம்.

 

சிப்செட்

ரெட்மி 12சி, Xiaomi இந்தியா  பிராண்டின் மிகவும் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும்.  Redmi 12C இந்தியாவில் 10,000 ரூபாய்க்குள் இருக்கும் என்பதையும் மைக்ரோசைட் வெளிப்படுத்துகிறது . டீஸர் படங்களில் ஒன்று, இந்தியாவில்  2023 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட போன்களின் ரூ. 10,000க்கு குறைவான விலை பிரிவில் இருக்கும் போன்களில் மீடியா டெக் ஹீலியோ ஜி85 SoC ஐக் கொண்டிருக்கும் போன் இது என்று குறிப்பிடுகிறது.

நிறங்கள்

மற்றொரு டீஸர் படம், போனின் பெரிய டிஸ்ப்ளேவை எடுத்துக்காட்டி.. இது இந்த விலைப்பிரிவில் மிகப்பெரிய டிஸ்ப்ளேவைக் கொண்டது  என்று கூறுகிறது. போன் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது இந்த போன் இந்தியாவில் ஊதா, கருப்பு, பச்சை மற்றும் நீலம் என நான்கு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை Redmi உறுதிப்படுத்தியுள்ளது.

 

விலை

Redmi 12C இந்தோனேசியாவில் IDR 1,399,000 (சுமார் ரூ. 7,600) க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. டிசம்பர் 2022 இன் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட சீன வேரியண்டின் விலை CNY 699 (தோராயமாக ரூ. 8,400) ஆகும். எனவே, 12C இன் இந்திய விலை இந்தியாவில் சுமார் ரூ.9,000 ஆக இருக்கலாம்.

மெமரி

4 ஜிபி + 64 ஜிபி / 128 ஜிபி மற்றும் 6 ஜிபி + 128 ஜிபி ஆகிய இரண்டு சேமிப்பக விருப்பங்களுடன் மொபைல் வெளியாக வாய்ப்புள்ளது. 5 ஜிபி வரை மெய்நிகர் ரேம் (Virtual RAM) ஆதரவும் உள்ளது. இதன் மூலம் இந்த மொபைல் 11 ஜிபி வரையிலான ரேமைக் கொண்டிருக்கும். நினைவகத்தை 1TB வரை அதிகரிக்க மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டுக்கான ஆதரவும் உள்ளது.

 

கேமரா

மொபைலின் பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் உள்ளது, இது பெரிய கேமரா தொகுதிக்குள் வைக்கப்பட்டுள்ளது. கேமரா தொகுதி 50MP பிரதான கேமரா மற்றும் டெப்த் மேப்பிங்கிறகாக QVGA லென்ஸ் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, 5MP முன்பக்கக் கேமராவைக் கொண்டுள்ளது இந்த Redmi 12C

டிஸ்ப்ளே

முன்பக்கத்தில், ஃபோன்  60Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.71அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதில் முன்பக்க கேமராவிற்கு வாட்டர் டிராப் நாட்ச் உள்ளது. திரைக்கு கீழே சற்று தடிமனான சின் பெசல் உள்ளது. போனின் திரை, 720 x 1650 பிக்சல்கள் HD+ ரெசல்யூஷனைக் கொண்டுள்ளது. இந்த மொபைல் 10W சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. 192 கிராம் எடையில், 168.76 x 76.41 x 8.7 மிமீ அளவில் வெளியாக இருக்கிறது Redmi 12C.