
Xiaomi ஐரோப்பிய சந்தைகளில் Redmi A2 மற்றும் Redmi A2+ என இரண்டு புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது . இந்த மொபைல்கள் ஆண்ட்ராய்டு 12 (கோ பதிப்பு) உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இவை சிறந்த தோற்றம் மற்றும் துடிப்பான வண்ண விருப்பங்களுடன் வருகின்றன. Redmi A2 மற்றும் Redmi A2+ ஆகியவை 6.52 அங்குல எல்சிடி டிஸ்ப்ளே, 3ஜிபி வரை ரேம், 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 8எம்பி முதன்மை கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளன. Xiaomi ஆனது முந்தைய தலைமுறை A தொடர் ஸ்மார்ட்போன்களில் காணப்பட்ட MediaTek Helio A22 சிப்செட்டுக்கு பதிலாக, MediaTek Helio G36 சிப்செட்டை இந்த மொபைல்களில் பயன்படுத்தி இருக்கிறது.
Redmi A2, Redmi A2+ விலை
Redmi A2 மற்றும் Redmi A2+ ஸ்மார்ட்போன்களின் விலையை Xiaomi இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் இந்த மொபைல்கள் பட்ஜெட் விலை போன்கள் பிரிவில் வெளியாகி இருக்கின்றன. Redmi A2 மற்றும் Redmi A2+ ஆகியவை வெளிர் நீலம், வெளிர் பச்சை மற்றும் கருப்பு வண்ண விருப்பங்களில் கிடைக்கும் . தற்போது இந்த மொபைல்கள் ஐரோப்பிய சந்தைகளில் கிடைக்கும். அதேவேளையில் இந்தியாவில் அதன் அறிமுகத்திற்கான எந்த அறிகுறியும் இன்னும் இல்லை.
Redmi A2, Redmi A2+ விவரக்குறிப்புகள் & அம்சங்கள்
Redmi A2 மற்றும் Redmi A2+ ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் வெளியானாலும், நல்ல அம்சங்களைக் கொண்டுள்ளன. இந்த மொபைல்கள் 720 x 1600 பிக்சல் அடர்த்தி கொண்ட 6.52 அங்குல எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், MediaTek Helio G36 சிப்செட், 2GB அல்லது 3GB LPDDR4X ரேம் மற்றும் 32GB வரை eMMC 5.1 சேமிப்புத்திறனுடன் வெளியாகி இருக்கிறது. Redmi A2 மற்றும் Redmi A2+ ஆனது Android 12 (Go Edition) இயங்குதளத்தில் இயங்குகிறது.
கேமரா
பின்புறத்தில், 8எம்பி பிரைமரி ஷூட்டர் மற்றும் எல்இடி ஃபிளாஷ் உடன் QVGA ஷூட்டர் ஆகியவற்றைக் கொண்ட இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, 5MP முன்பக்க ஷூட்டர் உள்ளது. இந்த மொபைல்களில் 5,000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது பழைய மைக்ரோ-USB இணைப்பு வழியாக சார்ஜ் செய்யப்படுகிறது. இரண்டு மொபைல்களும் இரட்டை சிம், 4G, 2.4GHz WiFi, Bluetooth 5.0, GPS, Glonass மற்றும் Galileo போன்ற கனெக்டிவிட்டியைக் கொண்டுள்ளன
வடிவமைப்பு
Redmi A2 மற்றும் Redmi A2+ ஸ்மார்ட்போன்கள் இரண்டும் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை. இரண்டும் பின்பக்கத்தில் டெக்ஸ்சர் வடிவமைப்புடன் வெளிவந்துள்ளன. இருப்பினும், ரெட்மி ஏ2+ ஆனது பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மூலம் பயோமெட்ரிக் முறையில் கூடுதல் பாதுகாப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் 164.9 × 76.75 × 9.09 மிமீ அளவில், 192 கிராம் எடையில் வெளி வருகின்றன.