இந்தியாவில் எப்போது வெளியாகிறது ரெட்மி பட்ஸ் 3 லைட்


சாம்சங் கேலக்ஸி பட்ஸ் ப்ளஸ்ஸில் இடம்பெற்றிருப்பது போல ரெட்மி பட்ஸ் 3யும் இன் இயர் டிசைனை (in-ear design) கொண்டுள்ளது. அதேபோல் ஆப்பிளின் ஏர்பட்ஸ் ப்ரோவை போன்ற தோற்றமுடைய சார்ஜிங் கேஸும் இதனுடன் வருகிறது.

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக விளங்கும் சியோமி, அதன் புதிய சாதனமான ரெட்மி பட்ஸ் 3 லைட் (Redmi buds 3 lite) எனும் இயர்பட்ஸை இந்தியாவில் வருகிற ஜூலை 20-ந் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்த இயர்பட்ஸ் கடந்த ஆண்டு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி பட்ஸ் 3 யூத் மாடலின் ரீ-பிராண்டட் வெர்ஷன் ஆகும். சாம்சங் கேலக்ஸி பட்ஸ் ப்ளஸ்ஸில் இடம்பெற்றிருப்பது போல இதுவும் இன் இயர் டிசைனை கொண்டுள்ளது. அதேபோல் ஆப்பிளின் ஏர்பட்ஸ் ப்ரோவை போன்ற தோற்றமுடைய சார்ஜிங் கேஸும் இதனுடன் வருகிறது. மேலும் இதில் துல்லியமான ஆடியோவை வழங்க 6எம்.எம் டிரைவர்களை வழங்கி இருக்கிறது.

இதுதவிர, 18 மணிநேரம் தாங்கக்கூடிய அளவு பேட்டரி பேக் அப், நாய்ஸ் கேன்சலேசன், டச் கண்ட்ரோல், டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் என பலவிதமான அம்சங்கள் இதில் இருக்கின்றன. ரெட்மி பட்ஸ் 3 யூத் எடிஷன் சீனாவில் ரூ.1,196க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனால் இந்தியாவில் அறிமுகமாக உள்ள ரெட்மி பட்ஸ் 3 லைட்டின் விலையும் இதேபோல் நிர்ணயம் செய்யப்பட வாய்ப்பு இருக்கும் எனத் தெரிகிறது.