Redmi K50i ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

Redmi நிறுவனம் அதன் K சீரிஸ் ஸ்மார்ட்போனின் புதிய மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அதன் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி ரெட்மி K50i ஸ்மார்ட்போன் வரும் ஜூலை 20ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது கடந்த மே மாதம் சீனாவில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 11T ப்ரோ மாடலின் ரீ பிராண்டட் வெர்ஷனாக இருக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

Redmi K50i ஸ்மார்ட்போன் 6.6 அங்குல Full HD+ LCD திரையைக் கொண்டிருக்கும் என்றும் 144 ஹெர்ட்ஸ் refresh rate மற்றும் Dolby Vision support உடன் வரும் எனத் தெரிகிறது.

இது Octocore MediaTek Dimensity 8100 புராசஸரைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. அதுமட்டுமின்றி 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மற்றும் 2 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் என மூன்று கேமராக்களுடன் இந்த ஸ்மார்ட் போன் வெளிவர இருக்கிறது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் இருக்கும் என தெரிகிறது.

67W fast charging வசதியுடன் கூடிய 5080mAh பேட்டரி இதில் இருக்கும். Redmi K50i போனின் விலை ரூ.20,000 முதல் இருக்குமெனத் தெரிகிறது.