எப்படி இருக்கிறது Redmi K50i 5G?


ரெட்மி K-சீரிஸ் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவிற்கு வந்துள்ளது – அதுவும் சக்திவாய்ந்த Mediatek Dimensity 8100 சிப்செட்டுடன் ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது! அது Redmi K50i 5G மொபைல் ஆகும்.

Realme GT Neo 3 மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Oppo Reno 8 Pro போன்ற ஸ்மார்ட்போன்களில் இதே சிப்செட்டை பார்க்க முடிந்தாலும் அந்த 2 போன்களின் விலையும் இந்த மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனை விட விலை அதிகம்! இதனாலேயே Redmi K50i ஆனது, அதன் பிரிவில் உள்ள அனைத்து லேட்டஸ்ட் கேமிங் ஸ்மார்ட்போன்களுக்கும் கடுமையான போட்டியை வழங்குகிறது. ஆனாலும், இன்னமும் சிலர் இதை வாங்கலாமா? வேண்டாமா? என்கிற குழப்பத்திலேயே உள்ளனர்.
வாருங்கள் ரெட்மி கே50ஐ 5ஜி ஸ்மார்ட்போனின் டிசைன், டிஸ்பிளே, பெர்ஃபார்மென்ஸ், ஓஎஸ், கேமரா, பேட்டரி என அனைத்தையும் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வருவோம்!

வடிவமைப்பு

ரெட்மி K50i ஸ்மார்ட்போனின் வடிவமைப்பானது முதல் பார்வையில் உங்களை ஆச்சரியப்படுத்தாது. ஏனெனில் இதன் ட்ரிபிள் கேமரா ஹம்ப் மற்றும் கலர்-கிரேடியன்ட் டிசைனை நாம் பல ஸ்மார்ட்போன்களில் பார்த்திருப்போம். இந்த ஸ்மார்ட்போன் பிளாஸ்டிக் பேக் பேனல் மற்றும் ஃப்ரேம்-ஐ கொண்டுள்ளது, இதனால் இது அவ்வளவு எளிதாக கறை படாது அல்லது தூசியை தக்கவைக்காது. மேலோட்டமாக பார்க்க இது ஒரு நல்ல தோற்றமுடைய ஸ்மார்ட்போன் போல இருந்தாலும், ரெட்மி நிறுவனம் இதன் “உருவாக்க தரத்தில்” இன்னும் கொஞ்சம் அதிகமாக வேலை செய்திருக்கலாம்.

திரை

நாம் ரூ.30,000 பட்ஜெட் போனில், AMOLED டிஸ்ப்ளேவை எதிர்பார்ப்போம். ஆனால் Redmi K50i, 6.6-அங்குல Liquid FFS டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இன்டர்நெட், சோஷியல் மீடியா சர்ஃபிங் மற்றும் வீடியோக்களைப் பார்ப்பது போன்ற தினசரி விஷயங்களுக்கு பயன்படுத்தும் போது இதன் டிஸ்பிளே பிரகாசமாக மற்றும் கூர்மையான வண்ணங்களை தருகிறது. ஆனால் கடுமையான சூரிய ஒளியின் கீழ் அதிகபட்ச பிரைட்னஸிலும் கூட இதன் டிஸ்பிளே பிரகாசமாக இல்லை. ஆனாலும், 144Hz என்கிற அதிகபட்ச ரெஃப்ரெஷ் ரேட்டை, இந்த விலை வரம்பில் கீழ் தரும் மிகவும் குறைவான போன்களில் இதுவும் ஒன்றாகும்.


பெர்ஃபார்மென்ஸ்

Redmi K50i ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 8100 என்கிற சக்திவாய்ந்த சிப்செட் உடன் வருகிறது. இந்த சிப்செட் இன்டர்நெட் ப்ரவுஸிங், மல்டி-டாஸ்கிங், சோஷியல் மீடியா என அனைத்து வகையான தினசரி வேலைகளையும் சிறப்பாகவே கையாள்கிறது. குறிப்பாக, கேமிங்கின் போது சொல்வதற்கு எந்த புகாரும் இல்லை. கேமிங்கின் போது Redmi K50i ஸ்மார்ட்போனில் எந்த தடுமாற்றமும், தாமதமும் இல்லை. இருப்பினும், அரை மணி நேரம் கழித்து, ஸ்மார்ட்போனின் கேமரா ஹம்ப்பின் அருகில் நீங்கள் வெப்பத்தை உணரலாம். ஆனால் இது ஹெவி கேம்களை விளையாடும் போது மட்டுமே நடக்கிறது. இந்த ஸ்மார்ட்போன், ஸ்டீரியோ சவுண்ட் டூயல் ஸ்பீக்கரை வழங்குகிறது, இது தெளிவான மற்றும் நன்கு டியூன் செய்யப்பட்ட ஒலியை வழங்குகிறது என்றே கூறலாம் . சுவாரசியமாக இதில் 3.5மிமீ ஆடியோ ஜாக்கும் உள்ளது.

இயங்குதளம்

மற்ற Xiaomi போன்களை போலவே, இதுவும் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட MIUI 13 உடன் வருகிறது. கஸ்டமைசேஷன் விருப்பங்கள், வால்பேப்பர்கள், விட்ஜெட்களை சேர்ப்பது என எல்லாமே இதில் சாத்தியம் தான். மேலும் சில ப்ரீ-இன்ஸ்டால்டு ஆப்களை காண முடிகிறது. சிலவற்றை அன்இன்ஸ்டால் செய்ய முடிகிறது, சிலவற்றை செய்ய முடியவில்லை.

கேமராக்கள்

இது சிறப்பாகவும் இல்லை. மிகவும் மோசமானதாகவும் இல்லை! Redmi K50i ஸ்மார்ட்போனின் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பில் 64MP முதன்மை கேமரா + 8MP வைட்-ஆங்கிள் கேமரா + 2MP மேக்ரோ சென்சார் உள்ளன. மெயின் சென்சாரின் ‘ஃபைனல்’ போட்டோக்கள் பிரகாசமானதாக, நல்ல விவரங்களை வழங்குகிறது. வைட்-ஆங்கிள் புகைப்படங்கள் மற்றும் மேக்ரோ ஷாட்களில் வண்ணங்கள் நன்றாக இருந்தாலும், இதன் 8MP கேமராவும், மேக்ரோ சென்சாரும், அவ்வளவு சிறப்பாக இல்லை! முன்பக்கத்தில் உள்ள 16MP செல்ஃபி கேமராவை பொறுத்தவரை, இது பிரகாசமான செல்ஃபிகளை எடுக்கிறது. ஆனால் சில சமயங்களில் தோலின் நிறத்தை “மாற்றுவது” போல் தெரிகிறது. இதன் பியூடிப்ஃபை மோட்-ஐ ஆஃப் செய்தாலும் கூட – பகலிலும் கூட – இது சருமத்தின் நிறத்தை ‘ஓவர் மேக்கப்’ செய்தது போல் காட்டுகிறது. ஒட்டுமொத்தமாக, இதன் விலையை கருத்தில் கொள்ளும்போது, சாதாரண புகைப்படங்களை பிடிக்க இது ஒரு ‘நல்ல’ கேமராவாகும். இதில் உயர்நிலை கேமரா செயல்திறனை எதிர்பார்க்க வேண்டாம்.

பேட்டரி

இதில் எந்த புகார்களும் இல்லை! ரெட்மி கே50ஐ 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ள 5,080mAh பேட்டரி, மிக எளிதாக ஒரு நாள் வரை வருகிறது. அதுவும் 144Hz என்கிற அதிகபட்ச ரெஃப்ரெஷ் ரேட்டின் கீழ் வீடியோக்களைப் பார்ப்பது, கேமிங் செய்வது மற்றும் புகைப்படங்களை கிளிக் செய்வது என எல்லாமே செய்தும் கூட, இதன் பேட்டரி லைஃப் முழுவதுமாக ஒரு நாள் நீடிக்கிறது. இதில் 60Hz, 90Hz மற்றும் 144Hz ஆகியவற்றிலிருந்து ஒன்றை தேர்வு செய்யும் விருப்பமும் உள்ளது. மேலும் இதன் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவானது சுமார் 50 நிமிடங்களில் 10 – 100 சதவீத பேட்டரியை சார்ஜ் செய்கிறது.

முடிவு

ரூ.30,000க்கு விலைப்பிரிவில் சமீபத்தில் அறிமுகமான Poco F4 5G போனில் இருந்து iQOO Neo 6 வரை நிறைய கேமிங் ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. ஆனால் Redmi K50i ஆனது மீடியாடெக் டைமென்சிட்டி 8100 சிப்செட்டின் ஆற்றலை மிகவும் மலிவான விலைக்கு வழங்குவதால் பந்தயத்தில் ஒருபடி முன்னே செல்கிறது!
நல்ல செயல்திறன், 144Hz ஹை ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் நீண்ட பேட்டரி ஆயுள் என Redmi K50i செயல்திறன் தொடர்பான அனைத்து விஷயங்களையும் அட்டகாசமாக கையாள்கிறது. இருப்பினும், ரெட்மி நிறுவனம் இதன் கேமராவில் நல்ல மேம்பாடுகளை செய்து இருக்கலாம் மற்றும் அதன் போட்டியாளர்களை போல இன்னும் கூடுதல் வேகத்திலான ஃபாஸ்ட் சார்ஜிங்கை சேர்த்து இருக்கலாம். சில குறைகள் இருக்கும் போதிலும், ரூ.25,999 விலையில் ஒரு சிறந்த பெர்ஃபார்மென்ஸை வழங்கும் ஸ்மார்ட்போனை தேடுபவர்களுக்கு Redmi K50i – ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம்!