ரெட்மி K50i போனில் 5ஜி சோதனை செய்த ஜியோ


இந்தியாவில் ஜூலை 20-ந் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் ரெட்மி K50i ஸ்மார்ட்போன் 6.6 அங்குல Full HD+ LCD திரையைக் கொண்டிருக்கும்.
ரெட்மி நிறுவனம் அதன் K சீரிஸ் ஸ்மார்ட்போனின் புதிய மாடலான ரெட்மி K50i போனை வருகிற ஜூலை 20-ந் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இது கடந்த மே மாதம் சீனாவில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 11T ப்ரோ மாடலின் ரீ பிராண்டட் வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை ரெட்மி K50i ஸ்மார்ட்போன் 6.6 அங்குல Full HD+ LCD திரையைக் கொண்டிருக்கும் என்றும் 144Hz refresh rate மற்றும் டால்பி விஷன் (dolby vision) சப்போர்ட் உடன் வரும் என கூறப்படுகிறது. மேலும் இது Octocore MediaTek Dimensity 8100 புராசஸரை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

அதுமட்டுமின்றி 64 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 8 மற்றும் 2 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் என டிரிபிள் கேமரா செட் அப் உடன் இந்த ஸ்மார்ட் போன் வெளியாக இருக்கிறது. செல்ஃபிக்கு என முன்புறத்தில் 16 மெகாபிக்சல் கேமராவும் இடம்பெற்று இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 5080mAh பேட்டரி மற்றும் 67W fast charging வசதியும் இதில் இருக்கும் என கூறப்படுகிறது. இதன் வெளியீட்டுக்கு இன்னும் ஒருசில தினங்களே உள்ள நிலையில், ரெட்மி K50i ஸ்மார்ட்போனில் 5ஜி சோதனை நடத்தப்படுள்ளது.

ஜியோ நிறுவனம் இந்த 5ஜி சோதனையை நடத்தியதாகவும், இதன் முடிவுகள் திருப்திகரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 12 5G Bandகளுடன் கூடிய முதல் ரெட்மி ஸ்மார்ட்போன் இந்த K50i மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.