
Xiaomi ஆகஸ்ட் 14 அன்று ஒரு பெரிய நிகழ்வை ஏற்பாடு செய்கிறது. இதில், நிறுவனம் மடிக்கக்கூடிய சாதனமான Xiaomi MIX Fold 3, Redmi K60 Ultra, Pad 6 Max மற்றும் Band 8 Pro ஆகியவற்றை வெளியிட இருக்கிறது. இந்நிலையில் இப்போது Redmi K60 Ultra மொபைலின் புதிய டீஸர் வெளிவந்துள்ளது. இதில் பல வலுவான அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதன் முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.
Redmi K60 Ultra வடிவமைப்பு
- Redmi K60 Ultra கருப்பு மற்றும் சியான் என இரண்டு வண்ண விருப்பங்களில் காணப்படுவதை புதிய டீசரில் காணலாம்.
- மொபைலின் வடிவமைப்பைப் பற்றி பேசுகையில், பின்புற பேனலில் ஒரு பெரிய கேமரா தொகுதியைப் பார்க்க முடிகிறது. அதில் இரண்டு வட்ட கேமரா கட்அவுட்கள் மற்றும் LED ஃபிளாஷ் உள்ளது. இந்த கேமராவில் 50 மெகாபிக்சல் கேமரா இருப்பதுத் தெரிகிறது.
- முன் பேனலின் படம் வெளியிடப்படவில்லை என்றாலும், இந்த மொபைல் ஃப்ளாட்டான திரை மற்றும் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் வரலாம்.
- இரண்டாவது படம், இந்த மொபைலில் சக்திவாய்ந்த 24GB ரேம் மற்றும் 1TB இன்டர்னல் ஸ்டோரேஜ் கிடைப்பதை உறுதி செய்கிறது.
Redmi K60 அல்ட்ரா வெளியீட்டு நேரம்
Redmi K60 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 14 அன்று மாலை 7:00 மணிக்கு சீனாவில் அறிமுகப்படுத்தப்படும். Xiaomi MIX Fold 3, Redmi K60 Ultra, Pad 6 Max மற்றும் Band 8 Pro போன்ற சாதனங்களும் இந்த போனுடன் வெளியிடப்படும்.
Redmi K60 Ultra இன் விவரக்குறிப்புகள்
- டிஸ்ப்ளே: Redmi K60 Ultra மொபைலில், பயனர்கள் 1.5k அடர்த்தி கொண்ட OLED பேனலைப் பெறுவார்கள். இது 144Hz புதுப்பிப்பு வீதத்தை வழங்கும். சிறந்த காட்சி அனுபவத்திற்காக, நிறுவனம் PixelWorks X7 டிஸ்ப்ளே செயலியையும் இதில் வழங்கும்.
- சிப்செட்: இந்த மொபைல் Dimensity 9200 Plus சிப்செட் உடன் சந்தையில் வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- சேமிப்பகம்: சேமிப்பகத்தைப் பொறுத்தவரை, இந்த மொபைல் 24GB LDDR5x ரேம் மற்றும் 1TB UFS 4.0 சேமிப்பகத்தைக் கொண்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
- கேமரா: கேமரா அம்சங்களைப் பற்றி பேசுகையில், மொபைலில் 50MP முதன்மை கேமரா லென்ஸ் கொடுக்கப்படும் என்று டீஸர் போஸ்டரில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- பேட்டரி: பேட்டரியைப் பொறுத்தவரை, 5000mAh பேட்டரி மற்றும் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு கொடுக்கப்படலாம். ஆனால், இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
- OS: Redmi K60 Ultra ஆனது சமீபத்திய ஆண்ட்ராய்டு 13ஐ அடிப்படையாகக் கொண்டது.