Xiaomi சமீபத்தில் சீனாவில் Redmi Note 12 சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. ஷாவ்மியின் சொந்த நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி நோட் 12 சீரிஸ் இன் கீழ் நான்கு சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரெட்மி நோட் 12 5ஜி (Redmi Note 12 5G), ரெட்மி நோட் 12 ப்ரோ (Redmi Note 12 Pro), ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் (Redmi Note 12 Pro+) மற்றும் ரெட்மி நோட் 12 எக்ஸ்ப்ளோரர் எடிஷன் (Redmi Note 12 Explorer Edition) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே Redmi Note 12 Pro+ 5G ஆனது இந்தியாவில் Xiaomi 12i ஹைப்பர்சார்ஜ் (Xiaomi 12i hypercharge) ஆக அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய மாறுபாடு Bureau of Indian Standards (BIS) இணையதளத்தில் மாடல் எண் 22101316UP உடன் காணப்பட்டது. ஆனால், இதுபற்றி Xiaomi எந்த விவரங்களையும் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
வேறு பெயரில் வருகிறதா?
இந்நிலையில் இதுதவிர, மற்றொரு ரெட்மி நோட் 12 சீரிஸ் போன் இந்தியாவில் மறுபெயரிடப்பட்ட சாதனமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. ரெட்மி நோட் 12 வரிசையில் இருக்கும் Redmi Note 12 5G ஸ்மார்ட்போன் மாடல் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் POCO போனாக அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சாதனம் 22101317C என்ற மாடல் எண்ணைக் கொண்டுள்ளது. அதன் ஷார்ட் மாடல் எண் M17 ஆகும். இந்தியாவில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட Redmi Note 12 5G ஆக வெளியிடக்கூடிய POCO ஃபோன், BIS தரவுத்தளத்தில் காணப்பட்டது. இந்த POCO ஃபோனில் 22111317PI என்ற மாடல் எண் உள்ளது. முழு மாடல் எண் சற்று வித்தியாசமாக இருந்தாலும், சுருக்கப்பட்ட மாடல் எண், சீன ரெட்மி நோட் 12 5G போலவே இருக்கிறது.
இது Redmi Note 12 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் POCO போனாக அறிமுகப்படுத்தப்படலாம் என்பதை உறுதிப்படுத்துகிறது. இந்த போன் இந்தியாவில் நவம்பரில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் மாடல் எண் தெரிவிக்கிறது. இந்தியாவில் இந்த போன் அறிமுகப்படுத்தப்படும் போது என்ன மாறுபாடு இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால், POCO M5 ஏற்கனவே இந்தியாவில் கிடைப்பதைக் கருத்தில் கொண்டு, அதன் 5ஜி மாறுபாடு (5G variant) விரைவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
Redmi Note 12 5G போனும் Poco போனும் ஒன்றா?
POCO தற்போது இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம் பற்றிய எந்த விவரங்களையும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. அறிவிப்பு வெளியானதும் மேலும் கூடுதல் விவரங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். இதற்கிடையில், Redmi Note 12 5G இன் அம்சங்களைப் பற்றிப் பார்க்கலாம்.
சிறப்பம்சம்
ரெட்மி Note 12 5G ஸ்மார்ட்போன் ஆனது 6.67 அங்குல முழு HD+ OLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 120Hz ரெப்ரெஷ் ரேட் வீதத்தை ஆதரிக்கிறது. இது 1200 nits இன் பீக் பிரைட்னெஸ் உடன் வருகிறது. டிஸ்பிளேவின் மேல் மையத்தில் பஞ்ச் ஹோல் நாட்ச் கட்அவுட் உள்ளது. ஹூட்டின் கீழ் இது Snapdragon 4 Gen 1 SoC உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000mah பேட்டரியை 33W பாஸ்ட் சார்ஜிங் அவுட் ஆஃப் பாக்ஸுடன் கொண்டுள்ளது.
பட்ஜெட் 5ஜி போன்?
பின்புறத்தில், இது டூயல் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 48MP பிரைமரி கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் கொண்டுள்ளது.ரெட்மி நோட் 12 5ஜி, பஞ்ச் ஹோல் கட்அவுட்டின் உள்ளே 8MP முன்பக்கக் கேமராவைக் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MIUI 13 இல் இயங்குகிறது.
விலை
Xiaomi நிறுவனம் ரெட்மி நோட் 12 5G போன் சீனாவில் CNY 1199 விலைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்திய மதிப்பில் இது தோராயமாக ரூ. 13,600 ஆகும். ரெட்மி நோட் 12 5ஜி போனின் அடிப்படை மாடல் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த சாதனம் 6GB + 128GB, 8GB+ 128GB மற்றும் 8GB + 256GB ஸ்டோரேஜ் விருப்பங்களுடன் வருகிறது.
இந்தியாவில் 8 ஜிபி ரேம் வேரியண்ட் வர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. Redmi Note 12 5G வெள்ளை, நீலம், மற்றும் கருப்பு நிறங்களில் வருகிறது. இதன் எடை 188 கிராம் மற்றும் 7.98 மிமீ தடிமன் கொண்டது. இந்தியாவில் இது சிறந்த பட்ஜெட் 5ஜி போனாக (Budget 5G phone) வெளிவர வாய்ப்பு இருக்கிறது.






