
Redmi Note 12, புதிய ஆக்டாகோர் ப்ராசஸ்சரான Snapdragon 685 சிப்செட், 120Hz ரிஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய Super AMOLED டிஸ்ப்ளேவுடன் மிட்ரேஞ்ச் ஸ்மார்போனாக வெளியாகி இருக்கிறது. இதில் 50MP கேமரா, 11ஜிபி வரையிலான விர்சுவல் ரேம், 33W ஆதரவுடன் கூடிய 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் வெளியாகி இருக்கிறது. இதற்கான ஃபாஸ்ட் சார்ஜரும் இதனோடு வருகிறது. மேலும் இது இரண்டு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 4 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை வழங்குவோம் என்ற நிறுவனத்தின் வாக்குறுதியோடு வெளியாகி இருக்கிறது.
டிஸ்ப்ளே
இந்த Redmi Note 12 120Hz ரிஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய Super AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதன் அதிகபட்ச ப்ரைட்னஸ் 1200 nits ஆகும். மேலும் இது 394PPI அடர்த்தியுடன் வெளியாகி உள்ளது. மேலும் இந்த மொபைல் Corning Gorilla Glass பாதுகாப்பு மற்றும் தூசு, நீரில் இருந்து பாதுகாக்கும் IP53 ரேட்டிங் உடன் வெளியாகி இருக்கிறது.
கேமரா
இதில் f1.8 அப்பசருடன் கூடிய 50MP முதன்மை கேமரா, 8MP வைடு ஆங்கிள் கேமரா, 2MP மேக்ரோ கேமரா என மூன்று பின்பக்க கேமராக்கள் உள்ளன. கூடவே ஒரு LED ஃப்ளாஷ் லைட்டும் உள்ளது. இதன் மூலம் 1080p வரையிலான வீடியோவை எடுக்க முடியும். முன்பக்கத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள 13MP கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதுவும் 1080p வீடியோ ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த கேமராக்கள் ப்ரோ மோட், டைம் லேப்ஸ், பனோரமா, போர்ட்ரேட் மோட், வாய்ஸ் ஷட்டர் போன்ற பலவிதமான மோடுகளையும் , பில்டர்களையும் கொண்டுள்ளன.
சிப்செட்
இந்த மொபைல் ஒரு 4ஜி மொபைல் ஆகும். அதற்கென இதில் லேட்டஸ்ட் சிப்செட்டான Snapdragon 685 என்ற சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இது 6nmல் தயாரான சிறந்த திறன் கொண்ட ஆக்டா கோர் ப்ராஸசர் ஆகும்.
மெமரி
இந்த Redmi Note 12 மொபைலில் 6GB LPDDR4X ரேம் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர இந்த மொபைலில் 11GB வரையிலான விர்சுவல் ரேம் வசதியும் உள்ளது. கண்டிப்பாக இது சிறந்த வசதியாகும். அதேவேளையில் இந்த மொபைல், 64GB, 128GB என இரண்டு விதமான சேமிப்புத்திறனுடன் வெளியாகி இருக்கிறது. இது UFS 2.2 வகை மெமரியைச் சேர்ந்தது. மேலும் இதன சேமிப்புத்திறனை மைக்ரோ SD கார்டு மூலம் 1 TB வரை அதிகப்படுத்திக் கொள்ள ஒரு Micro SD Slot ஒன்றும் வழங்கப்படுள்ளது.
பேட்டரி
Redmi Note 12 மொபைலில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 5000mAh லித்தியம் பாலிமர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதற்கென ஒரு 33W சார்ஜரும் மொபைலோடு வருகிறது. இந்த மொபைல் 165.66mm X 75.96 X 7.85mm என்ற அளவில், 86 கிராம் எடையில் வெளியாகி இருக்கிறது.
இயங்குதளம்
சமீபத்திய ஆண்ட்ராய்டு 13 மேல் ரெட்மியின் MIUI 14 ஸ்கின் கொண்டு கஸ்டமைஸ் செய்யப்பட்ட இயங்குதளத்துடன் வெளியாகி இருக்கிறது Redmi Note 12. இந்த மொபைலுக்கு இரண்டு ஆண்ட்ராய்டு அப்டேட்களும், 4 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களும் வழங்கப்படும் என ரியல்மி தரப்பில் இருந்து உறுதியளிக்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி
இரட்டை சிம் மொபைலான Redmi Note 12 மொபைல் லூனார் ப்ளாக் (Lunar Black), சன்ரைஸ் கோல்டு (Sunrise Gold), ஐஸ் ப்ளூ (Ice Blue) என மூன்று நிறங்களில் வெளியாகி இருக்கிறது. இதில், பக்கவாட்டு ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கிறது. இதுதவிர ப்ளூடூத் 5, Wi-Fi, GPS, OTG, 3.5mm ஆடியோ ஜாக் போன்ற பல கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் உள்ளன.
விலை
இந்த Redmi Note 12 மொபைல் இரண்டு வேரியண்ட்களில் வெளியாகி இருக்கிறது. அவை கீழ்கண்ட விலைக்கு விற்பனைக்கு வர இருக்கிறது.
6GB RAM + 64GB சேமிப்புத்திறன் = ரூ.13,999
6GB RAM + 128GB சேமிப்புத்திறன் = ரூ.15,999








