

Xiaomi இந்தோனேசியா, Redmi Note 12 Pro 4G மொபைலின் முக்கிய விவரக்குறிப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது. Note 12 4G, Note 12 5G, Note 12 Pro 5G, Note 12 Pro+ 5G ஆகியவற்றுக்குப் பிறகு இது Note 12 தொடரின் ஐந்தாவது ஸ்மார்ட்போன் ஆகும். மார்ச் 2021 இல் அறிமுகமான ரெட்மி நோட் 10 ப்ரோவின் உலகளாவிய பதிப்போடு புதிய ஸ்மார்ட்போன் ஒற்றுமையைக் கொண்டுள்ளது . இந்தோனேசியாவில் இந்த மொபைல் விரைவில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.
Redmi Note 12 Pro 4G விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்
Redmi Note 12 Pro 4G ஆனது 6.67 அங்குல AMOLED டிஸ்ப்ளேவின் மேல் மையப்பகுதியில் பஞ்ச்-ஹோல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. திரையானது 1080 x 2400 பிக்சல்களின் முழு HD+ தெளிவுத்திறனையும் மற்ற Note 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களைப் போலவே 120Hz புதுப்பிப்பு வீதத்தையும் உருவாக்குகிறது.
சிப்செட் & இயங்குதளம்
Snapdragon 732G என்பது Redmi Note 12 Pro 4G ஐ இயக்கும் சிப்செட் ஆகும். இந்த மொபைலில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது. கூடுதல் சேமிப்புத்திறனுக்காக மொபைலில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் MIUI 13 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 12 OS இல் இயங்குகிறது.
கேமரா
ரெட்மி நோட் 12 ப்ரோ, முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. மொபைலின் பின் பேனலில் 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ், 5 மெகாபிக்சல் மேக்ரோ மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது. கூடவே இந்த மொபைல் 4K வீடியோ பதிவுக்கான ஆதரவைக் கொண்டுள்ளது.
பேட்டரி & கனெக்டிவிட்டி
Redmi Note 12 Pro ஆனது 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. டூயல் சிம், 4G VoLTE, Wi-Fi 802.11ac, ப்ளூடூத் 5.1, GPS, NFC, ஒரு IR பிளாஸ்டர், பக்கவாட்டு கைரேகை ஸ்கேனர், Dolby Atmos-ஆல் இயங்கும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் போன்ற பல அம்சங்களுடன் இந்த மொபைல் வருகிறது.
விலை மற்றும் கிடைக்கும் தன்மை
Redmi Note 12 Pro இந்தோனேசியாவில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் விலை அல்லது கிடைக்கும் தன்மை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. மேலே உள்ள போஸ்டர் இந்த மொபைல் மே மாதத்தில் விற்பனைக்கு வரும் என்றுத் தெரிவிக்கிறது.







