Home News 200MP கேமராவுடன் வெளியாகிறதா ரெட்மி நோட் 12 சீரிஸ்?

200MP கேமராவுடன் வெளியாகிறதா ரெட்மி நோட் 12 சீரிஸ்?

இப்போது வெளியாகும் மொபைல்கள் கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அந்த வகையில் ஒரு பக்கம ரியல்மி 120MP கேமராவோடு இரண்டு மொபைல்களை நேற்று அறிமுகப்படுத்தியது. இதனையடுத்து விரைவில் ஷாவ்மி 200MP கேமராவோடு ஒரு மொபைலை அறிமுகப்படுத்த இருக்கிறது.

சமீபத்தில் ஷாவ்மிக்கு (Xiaomi) சொந்தமான ரெட்மி (Redmi) நிறுவனம் சீனாவில் Redmi Note 12 தொடர் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. அதற்குப் பின்னர், Xiaomi சமீபத்திய Redmi Note தொடர் வரிசையில் – Redmi Note 12, Redmi Note 12 Pro மற்றும் Redmi Note 12 Pro Plus ஆகியவற்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் Redmi Note 12 Pro+ அறிமுகமாக இருக்கிறது.

டிப்ஸ்டர் முகுல் சர்மா, தனது சமீபத்திய ட்வீட்டில், “Redmi Note 12 தொடர் விரைவில் இந்தியாவிற்கு வரவுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறோம். Redmi Note 12 Pro+ இன் இந்திய வேரியண்ட் மாடல் 200MP பிரைமரி கேமராவைக் கொண்டிருக்கும்.” என்று ட்வீட் செய்துள்ளார். இந்த போனின் விலை மற்றும் மற்ற சிறப்பம்ச விபரங்களைப் பார்க்கலாம்.

ரெட்மி நோட் 12 5ஜி சிறப்பம்சம்

சீனாவில் அறிமுகமான ரெட்மி நோட் 12 5ஜி (Redmi Note 12 5G) போன் 6.67 அங்குல பிளாட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது முழு-HD+ தெளிவுத்திறன் மற்றும் 120Hz ரெப்ரெஷ் ரேட் வீதத்துடன் கூடிய பஞ்ச்-ஹோல் AMOLED பேனல் உடன் வருகிறது. இது 48MP பிரைமரி லென்ஸ் மற்றும் 2MP டெப்த் யூனிட்டுடன் பின்புறத்தில் டூயல் கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் செல்ஃபி எடுக்க 8எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

சிப்செட்

இது புதிய Snapdragon 4 Gen 1 SoC குவால்காம் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 6nm ஃபேப்ரிகேஷன் செயல்முறையின் அடிப்படையில் ஆக்டா-கோர் சிப்செட் ஆகும். இந்த மொபைல் வெவ்வேறு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விருப்பங்களைக் கொண்டுள்ளது. இது 4GB + 128GB, 6GB + 128GB, 8GB + 128GB, மேலும் 8GB + 256GB வேரியண்ட் உடன் வருகிறது.

பேட்டரி

சூப்பர் பாஸ்ட் வேகத்தில் சார்ஜ் ஆகும் பெரிய சைஸ் பேட்டரி.! சூப்பர் பாஸ்ட் வேகத்தில் சார்ஜ் ஆகும் பெரிய சைஸ் பேட்டரி.! இந்த சாதனம் 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 12 OS இல் இயங்குகிறது மற்றும் 33W வேகமான சார்ஜிங்கைக் கொண்டுள்ளது. பாதுகாப்பிற்காக, இது பக்கவாட்டு கைரேகை ஸ்கேனர் மற்றும் பேஸ் அன்லாக் அம்சத்தையும் இது ஆதரிக்கிறது. இது சார்ஜ் செய்ய USB Type-C போர்ட் மற்றும் இசை கேட்பதற்கு 3.5mm ஹெட்ஃபோன் ஜாக்கை கொண்டுள்ளது. இது சாதராண ப்ரோ வேரியண்ட் மாடலின் விபரங்கள் ஆகும்.

Redmi Note 12 Pro+ 5G சிறப்பம்சங்கள்

Redmi Note 12 Pro+ 5G போன் 6.67 அங்குல பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். இது 120Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்ப்ளிங் வீதம் கொண்ட OLED பேனல் உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த பேனல் 10-பிட் கலர் டெப்த் மற்றும் HDR10+ ஆதரவைக் கொண்டுள்ளது. இது டால்பி விஷன் ஆதரவையும் கொண்டு வெளிவரும் என்று கூறப்படுகிறது.

கேமரா

ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 200MP ISOCELL HPX ப்ரைமரி லென்ஸ் உடன் வரும். இது தவிர, 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இரண்டு மாடல்களிலும் உள்ள முக்கிய லென்ஸ் 1/1.4 அங்குல சென்சார் ஆகும். மூன்றும் நடுக்கமில்லாத, தெளிவான வீடியோ பதிவுக்கான OIS ஆதரவுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முன்பக்கத்தில் இந்த போன் 16MP செல்ஃபி கேமராவைக் கொண்டிருக்கும்.

விலை

Redmi Note 12 Pro+ 5G ஆனது 8GB+12GB RAM வேரியண்டுகளில் கிடைக்கும். இந்தியாவில் இந்த போன் சுமார் ரூ. 25,000 என்ற விலை வரம்பில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.