
ரெட்மியின் சமீபத்திய பிரபலமான மொபைல் ஒன்றின் விலை எதிர்பாராத அளவுக்கு குறைக்கப்பட்டு இருக்கிறது. விலையை கேட்டதுமே “உடனே ஆர்டர் பண்ணிட வேண்டியது தான்!” என்று நினைக்கும் அளவிற்கு விலை குறைக்கப்பட்ட அந்த ரெட்மி (Redmi) மொபைல் எது? அதன் ஒரிஜனல் விலை என்ன? ஆஃபருக்கு பின் அதன் விலை என்ன? அது என்னென்ன அம்சங்களைக் கொண்டு இருக்கிறது? பார்க்கலாம்!
எந்த மொபைல்?
ரெட்மி நோட் 9 ப்ரோ (Redmi Note 9 Pro) ஸ்மார்ட்போனுக்குத்தான் அந்த விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பெரிய டிஸ்பிளே, பெரிய பேட்டரி, குவாட் ரியர் கேமரா செட்டப், 18W ஃபாஸ்ட் சார்ஜிங், சிறந்த ஸ்டோரேஜ் மற்றும் ரேம், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் என இதன் சிறப்பம்சங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்!
ஒரிஜினல் விலை VS ஆபர் விலை!
ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.17,999 என்கிற MRP விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இது வெறும் ரூ.11,999 என்கிற தள்ளுபடி விலைக்குக் கிடைக்கிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போனின் 4GB + 128GB பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் மீது ரூ.6000 தள்ளுபடி கிடைக்கிறது! ரூ.11,999 என்கிற விலைக்கு ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்க விரும்புகிறவர்கள். உடனே சியோமி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான Mi.com ஐ அணுகலாம்.
வாங்கலாமா?
ரூ.12,000 என்கிற தொகையை செலவு செய்து வாங்கும் அளவிற்கு – ரெட்மி நோட் 9 ப்ரோ ஆனது தகுதியான ஸ்மார்ட்போன் தானா? அதற்கு இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.
டிஸ்பிளே!
டிஸ்பிளேவை பொறுத்தவரை, ரெட்மி நோட் 9 ப்ரோ ஆனது 6.67 அங்குல அளவிலான ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 1080 x 2400 பிக்சல்ஸ் ரெசல்யூஷனை, 20:9 என்கிற ஆஸ்பெக்ட் ரேஷியோவின் கீழ் வழங்குகிறது. அதுமட்டுமின்றி, இது பெசல்லெஸ் பஞ்ச்-ஹோல் டிஸைனையும், கார்னிங் கொரில்லா கிளாஸ் v5 பாதுகாப்பையும் கொண்டுள்ளது. மொத்தத்தில், எந்த குறையும் சொல்லிவிட முடியாத நல்ல டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது!
கேமரா
ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது CMOS இமேஜ் சென்சாரை கொண்ட குவாட் ரியர் கேமரா செட்டப் உடன் வருகிறது. அதில் 48MP மெயின் (ISOCELL பிளஸ் + f/1.79 + 10x ஜூம்) கேமரா + 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா (f/2.2) + 5MP மேக்ரோ கேமரா (f/2.4 ) + 2MP டெப்த் கேமரா (f/2.4) உள்ளது. முன்பக்கத்தில், 16MP செல்ஃபி ஷூட்டர் உள்ளது. இது பெரும்பாலான போட்டோகிராஃபி மற்றும் வீடியோகிராஃபி தேவைகளை பூர்த்தி செய்யும்.
பெர்ஃபார்மென்ஸ் & பேட்டரி
ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா-கோர் Qualcomm Snapdragon 720G சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது. மேலும் இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் கூடிய 5020mAh பேட்டரியை கொண்டுள்ளது. இதிலும் எந்த குறையும் சொல்ல முடியாது.