
ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி பேட் மாடலை அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இது தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
அம்சங்கள்
ஆன்லைனில் கசிந்த ரெட்மி பேட் சாதனத்தின் அம்சங்களைப் பார்க்கலாம். இந்த ரெட்மி பேட் ஆனது 11 அங்குல 2K LCD டிஸ்பிளேவுடன் வெளிவரும். இதனால் இந்த டேப்லெட்டின் டிஸ்பிளே ஒரு சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம்.
சிப்செட்
இந்த ரெட்மி பேட் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சிறந்த செயல்திறன் வழங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பேட் ஆண்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் வெளிவருகிறது.
ரேம்
ரெட்மி பேட் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. கூடவே கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இதில் இருக்கிறது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.
பேட்டரி
ரெட்மி பேட் ஆனது 7800 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. கூடவே 22.4 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த டேப்லெட் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 11 எஸ்இ போனின் அம்சங்களைப் பார்ப்போம்.
டிஸ்பிளே
6.43 அங்குல Full HD plus சூப்பர் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன். 1080 x 2400 பிக்சல்ஸ், 1100 நிட்ஸ் ப்ரைட்னஸ், 100% DCI-P3 colour gamut, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு போன்ற பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
சிப்செட்
மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் உடன் Mali-G76 3EEMC4 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடல். கண்டிப்பாக கேமிங் பயன்பாடுகளுக்கு இந்த சிப்செட் மிக அருமையாக பயன்படும். அதேபோல் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ரெட்மி போன்.
கேமரா
ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற குவாட் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. அதேபோல் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது. ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது ஹை-ரெஸ் ஆடியோவுடன் கூடிய டூயல் ஸ்பீக்கர்களை வழங்குகிறது. 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,499-ஆக உள்ளது.





