
சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் தீபாவளி முதல் ஜியோ 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக திகழும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் (RIL) 45வது ஆண்டு பொதுக் கூட்டம் (AGM) இன்று நடைபெற்றது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, வருடாந்திர கூட்டத்தில் பேசுகையில், நாட்டின் வளர்ச்சிக்கு ஜியோ நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது எனவும், ஜியோ வாடிக்கையாளர்கள் சராசரியாக மாதத்திற்கு 20 ஜிபி டேட்டாவை பயன்படுத்துவதாக தெரிவித்தார்.
மேலும், தீபாவளி முதல் சென்னை, மும்பை, கொல்கதா, டெல்லி ஆகிய நகரங்களில் ஜியோ 5ஜி இணைய சேவை அறிமுகப்படுத்தப்படும் என அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து பகுதிகளிலும் 5ஜி சேவையை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 5ஜி இணைய சேவை மூலம் தற்போது உள்ள 4ஜி சேவையைவிட 10 மடங்கு வேகத்தில் தரவுகளை விரைவாக பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர், “எங்களுடைய 5ஜி ஜியோ நெட்வொர்க் உலகின் மிகப்பெரிய மற்றும் மேம்பட்ட நெட்வொர்க் ஆக உள்ளது என்று கூறிய முகேஷ் அம்பானி 11 லட்சம் கிலோ மீட்டர் அளவிற்கு எங்கள் நெட்வொர்க் விரிவடைந்து உள்ளதாக கூறியுள்ளார். ஜியோ பைபர் நெட்வொர்க் இந்தியாவில் நம்பர் ஒன் நிறுவனமாக உள்ளது என்றும் கோவிட் ஊரடங்கு நேரத்தில் கூட ஜியோ நிறுவனம் சிறப்பாக செயல்பட்டது என்றும் தெரிவித்தார். ஜியோ பைபர் ஆப்டிக் நெட்வொர்க் 11 லட்சம் கிலோ மீட்டர் நீளம் கொண்டது என்றும் இது பூமியை 27 முறை சுற்றிவர போதுமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். உயர்தர சேவை உயர்தர சேவை மேலும் ஜியோவின் உயர்தர சேவை மற்றும் சலுகை விலையில் பைபர் ஆப்டிக் நெட்வொர்க் இந்தியாவின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு வரப்படும் என்றும், ஜியோ நிறுவனம் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் முதுகெலும்பாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று, எங்களின் 4ஜி நெட்வொர்க்கில் 421 மில்லியன் மொபைல் பிராட்பேண்ட் சந்தாதாரர்கள் உள்ளனர் என்றும், அவர்கள் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 20 ஜிபி டேட்டாவை பயன்படுத்துகிறார்கள் என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்தார். 47% வருமானம் அதிகரிப்பு 47% வருமானம் அதிகரிப்பு ரிலையன்ஸின் வருடாந்திர ஒருங்கிணைந்த EBITDA 1.25 லட்சம் கோடி ரூபாய் என்ற முக்கிய மைல்கல்லை கடந்துள்ளது என கூறிய முகேஷ் அம்பானி ரிலையன்ஸின் ஒருங்கிணைந்த வருவாய் 47% அதிகரித்து $104.6 பில்லியனாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
ஆகாஷ் அம்பானி ஆகாஷ் அம்பானி ஜியோ 5ஜி உலகின் மிகப்பெரிய மற்றும் மேம்பட்ட 5ஜி நெட்வொர்க்காக இருக்கும் என்று கூறிய ஆகாஷ் அம்பானி, ஜியோ 5G ஆனது கம்பிகள் இல்லாமல் காற்றில் அதி-உயர் ஃபைபர் போன்ற வேகத்தை வழங்குகிறது என்றும், நாங்கள் அதை ஜியோ ஏர் ஃபைபர் என்று அழைக்கிறோம் என்றும் ஆகாஷ் அம்பானி தெரிவித்தார். மேலும் ஜியோ ஏர்ஃபைபர் மூலம், உங்கள் வீடு அல்லது அலுவலகத்தை ஜிகாபிட் வேக இணையத்துடன் விரைவாக இணைப்பது மிகவும் எளிதாக இருக்கும் என்றும் ஆகாஷ் அம்பானி தெரிவித்தார்.