Home News ரூ 9,000க்கு கீழ ஒரு ஜுயோ 5G போன்!

ரூ 9,000க்கு கீழ ஒரு ஜுயோ 5G போன்!


ஜியோவிடம் இருந்து கடைசியாக அறிமுகமான ஸ்மார்ட்போன் – ஜியோ போன் நெக்ஸ்ட் (Jio Phone Next) ஆகும். கூகுள் நிறுவனத்தோடு சேர்ந்து உருவாக்கப்பட்ட ஜியோ போன் நெக்ஸ்ட்டின் அடுத்த ‘வெர்ஷன்’ 5ஜி ஆதரவுடன் வர இருக்கிறது. அது Jio Phone 5G என்று அழைக்கப்படலாம்.

இந்தியாவில் இந்த மாதமே 5ஜி சேவைகள் தொடங்கப்பட இருப்பதால் ஜியோ போன் 5ஜி மாடல் ஆனது கூடிய விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
தற்போதைய நிலவரப்படி, ஜியோ போன் 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி குறித்து எதவித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. இருப்பினும், ஜியோபோன் 5ஜி செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் விலையில் 5ஜி போனை வெளியிடுவதன் மூலம், ஜியோ நிறுவனம் அதன் 5ஜி சேவைகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்க நினைக்கிறது.

5G சிம் கார்ட்டினை வாங்காமல் ஜியோ 5G சேவைகளை அனுபவிக்க முடியாது என்றாலும் கூட உங்களின் தற்போதைய ஜியோ 4ஜி சிம் கார்டு ஆனது, வரவிருக்கும் ஜியோ போன் 5ஜி மாடலிலும் “வேலை செய்யும்” என்பது போல் தான் தெரிகிறது. இருப்பினும் இதுகுறித்தும் எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை.

ஜியோ போன் 5ஜி மாடலின் அம்சங்கள் பற்றிய தகவல்கள் பல மாதங்களாகவே இணையத்தில் சுற்றி வருகின்றன. இது Adreno 619 GPU உடனாக ஸ்னாப்டிராகன் 480 5G ப்ராசஸர் உடன் வரும் என்று கூறப்படுகிறது. இது 8nm ஃபேப்ரிகேஷன் ப்ராசஸ் அடிப்படையிலான Qualcomm நிறுவனத்தின் நுழைவு நிலை 5G சிப் ஆகும். இது ஜியோ போன் நெக்ஸ்ட் மாடலில் உள்ள ஸ்னாப்டிராகன் 215 உடன் ஒப்பிடும் போது மிகப்பெரிய மேம்பாடு ஆகும். மேலும் இந்த 5ஜி போன் ஆனது n3, n5, n28, n40 மற்றும் n78 ஆகிய ஐந்து 5G பேண்டுகளை ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு சென்ட்ரல் வழியாக வெளியான அறிக்கையின்படி, ஜியோ போன் 5ஜி ஆனது 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.5 அங்குல அளவிலான HD plus டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். கேமராக்களைப் பொறுத்தவரை, இந்த 5ஜி போனில் 13MP மெயின் சென்சார் + 2MP மேக்ரோ என்கிற டூயல் ரியர் கேமராக்கள் இடம்பெறலாம். முன்பக்கத்தை பொறுத்தவரை, செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கான 8MP கேமரா இருக்கலாம்.

Jio Phone 5G ஆனது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. கடைசியாக, இந்த 5ஜி ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி அளவிலான சேமிப்புத்திறனோடு வரலாம். கூடவே, இதில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டும் இடம்பெறலாம்.

இந்தியாவில் ஜியோ போன் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999 ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது அதிகாரப்பூர்வ தகவல் அல்ல என்றாலும், ஜியோ நிறுவனம் முடிந்தவரை இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையிலேயே வெளியிடும். இதுதவிர ஜியோ நிறுவனம் அதன் Jio Phone 5G ஸ்மார்ட்போனிற்காகவே சில புதிய 5G திட்டங்களையும் அறிமுகம் செய்யும்!