
ஒப்போ ஏ78 5ஜி ஸ்மார்ட்போன் ஏ-சீரிஸ் வரிசையில் நிறுவனத்தின் சமீபத்திய மாடலாக ஒப்போ ஏ78 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. புதிய ஒப்போ ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் ஸ்லைட் நாட்ச் டிஸ்ப்ளே வசதி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ 700 SoC மூலம் இயக்கப்படுகிறது. இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது.
விலை
Oppo A78 5G ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.18,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஒளிரும் பிளாக் மற்றும் ஒளிரும் ப்ளூ நிறங்களில் கிடைக்கிறது. Oppo இன் இ-ஸ்டோர், அமேசான் மற்றும் பிற முக்கிய சில்லறை தளங்களில் ஜனவரி 18 முதல் விற்பனைக்கு கிடைக்கும்.
சலுகை
Oppo A78 5G ஸ்மார்ட்போனை அமேசானில் எஸ்பிஐ கார்டுகள் பயன்படுத்தி வாங்கும் போது 10 சதவீத தள்ளுபடி அதாவது ரூ.1300 வரை தள்ளுபடியை பெறலாம். இது தவிர நோ காஸ்ட் இஎம்ஐ, எக்ஸ்சேஜ் சலுகை போன்ற பிற சலுகைகளும் விருப்பங்கள் வழங்கப்படுகிறது.
சிறப்பம்சங்கள்
குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 13 மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.56 அங்குல HD+ (720×1,1612 பிக்சல்கள்) IPS LCD டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட், 269ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 89.8 பாடி டூ ரேஷியோ விகிதத்தைக் கொண்டிருக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி, 8 ஜிபி ரேம் என பல மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. 12 ஜிபி வரை இதன் ரேம்-ஐ மெமரி விரிவாக்கம் செய்யலாம்.
கேமரா
Oppo A78 5G ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா என இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8 எம்பி செல்ஃபி கேமரா இடம்பெற்றிருக்கிறது. இதில் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவுடன் பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வழங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.
கனெக்டிவிட்டி
Oppo A78 5G ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்கள் குறித்து பார்க்கையில், இதில் Wi-Fi 5, ப்ளூடூத் 5.3, 3.5mm ஆடியோ ஜாக், USB டைப்-சி போர்ட், GPS மற்றும் ஓடிஜி என பல இணைப்பு விருப்பங்கள் உள்ளது. பாதுகாப்பு அம்சத்துக்கு என இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு இதில் வழங்கப்பட்டிருக்கிறது.
பேட்டரி
Oppo A78 5G ஸ்மார்ட்போனானது 33W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது. 33 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 60 நிமிடத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம். இந்த ஸ்மார்ட்போனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 23 மணிநேரம் வரை ப்ளேபேக் நேரம் வழங்கும்.