Home News ரூ.15,000 போன்ல இருக்கிற வசதிகள் ரூ.6,999 போன்ல! டெக்னோ அதிரடி!

ரூ.15,000 போன்ல இருக்கிற வசதிகள் ரூ.6,999 போன்ல! டெக்னோ அதிரடி!

Highlights
  • Tecno Spark Go (2023) என்ற ஸ்மார்ட்போன் ரூ.6,999 என்ற விலையில் அறிமுகம் ஆகி இருக்கிறது.
  • இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி, டூயல் ரியர் கேமராக்கள், ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் என பல மேம்பட்ட அம்சங்கள் இருக்கிறது.

சீன டிரான்ஷன் ஹோல்டிங் நிறுவனத்துக்கு சொந்தமான டெக்னோ மலிவு விலை ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அது Tecno Spark Go (2023) ஸ்மார்ட்போன் ஆகும்.. ரூ.10,000  முதல் ரூ.15,000 வரையிலான விலைப்பிரிவு ஸ்மார்ட்போன்களில் இருக்கும் அம்சங்கள் Tecno Spark Go (2023) மொபைலில் இருக்கிறது.

 

வேரியண்ட்

ரூ.7,000க்கு கீழ் அறிமுகமான ஸ்மார்ட்போன் டெக்னோ ஸ்பார்க் கோ 2023 ஸ்மார்ட்போனானது மூன்று வேரியண்ட்களில் அறிமுகமாகி இருக்கிறது. அது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 4 ஜிபி மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகும். இதில் உள்ள 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை தான் ரூ.6,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிற வேரியண்ட்களான 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 4 ஜிபி மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை.

நிறங்கள்

புதிய டெக்னோ ஸ்மார்ட்போனானது பிளாக், நெபூலா பர்ப்பிள் மற்றும் உயுனி ப்ளூ ஆகிய நிறங்களில் வெளியாகி இருக்கிறது. இதன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி வேரியண்ட் தற்போதே விற்பனைக்கு கிடைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

டிஸ்ப்ளே

Tecno Spark Go (2023) ஸ்மார்ட்போன் டூயல் சிம் ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான HiOS 12.0 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. 6.56 அங்குல எச்டி+ ஐபிஎஸ் டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் மற்றும் 720×1,612 பிக்சல் அடர்த்தியைக் கொண்டுள்ளது. அதேபோல் 480 நிட்ஸ் உச்ச பிரகாச நிலை மற்றும் 90 சதவீத ஸ்க்ரீன் டூ பாடி விகிதமாக இதில் இருக்கிறது.

 

சிப்செட்

Tecno Spark Go (2023) ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஏ22 SoC சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. முன்னதாகவே குறிப்பிட்டது போல் 4 ஜிபி ரேம் ஆதரவு இதில் உள்ளது.

 

கேமரா

இந்த புதிய டெக்னோ ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமராக்கள் இருக்கிறது. அதாவது 13 எம்பி பிரைமரி சென்சார் மற்றும் ஏஐ லென்ஸ் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என இதன் முன்புறத்தில் 5 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

மெமரி விரிவாக்கம்

Tecno Spark Go (2023) ஸ்மார்ட்போனில் விர்ச்சுவல் ரேம் நீட்டிப்பு வசதி வழங்கப்பட்டிருக்கிறது. அதுபோல், 64 ஜிபி வரையிலான சேமிப்பக ஆதரவு இதில் வழங்கப்பட்டிருந்தாலும் பிரத்யேகமாக மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதியும் உள்ளது. இதன்மூலம் 256 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

 

பேட்டரி

இதில் 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. சார்ஜ் செய்வதற்கு 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. 32 மணிநேர காத்திருப்பு நேரம், 12 மணிநேர கேமிங், 124 மணிநேரத்துக்கும் மேல் இசை மற்றும் 25 மணிநேர வீடியோ ப்ளேபேக் டைம் அணுகலை இந்த பேட்டரி மூலம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கனெக்டிவிட்டி

இந்த டெக்னோ ஸ்மார்ட்போனில் டூயல் சிம் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.0, ஓடிஜி மற்றும் யூஎஸ்பி டைப்-சி இணைப்பு ஆதரவுகள் உள்ளது. பாதுகாப்பு வசதிக்கு என ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரும் வழங்கப்பட்டிருக்கிறது.