Home News சாம்சங் கேலக்ஸி S22 5G போனுக்கு ரூ10,000 தள்ளுபடி!

சாம்சங் கேலக்ஸி S22 5G போனுக்கு ரூ10,000 தள்ளுபடி!

அமேசான் தளத்தின் தீபாவளி சிறப்பு விற்பனையில் சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது ரூ.10,000 என்கிற நம்பமுடியாத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன ஸ்மார்ட்போன்? அதன் பழைய மற்றும் புதிய விலை என்ன? அந்த Samsung ஸ்மார்ட்போனை வாங்குவது லாபமா? பார்க்கலாம்.

அது Samsung Galaxy S22 5G போன் ஆகும். இந்த சலுகையின் மூலம் இந்த Samsung Galaxy S22 5G மாடல் ஆனது சாம்சங் கேலக்ஸி S21 FE 5ஜி மாடலை விட குறைவான விலைக்கு கிடைக்கிறது!

விலை

சாம்சங் நிறுவனத்தின் இந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆனது இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.72,999 ஆகும். ஆனால் தற்போது இது ரூ.50,000க்கும் குறைவான விலைக்கு கிடக்கிறது! சாம்சங் கேலக்ஸி S22 5G ஆனது இப்போது ரூ.49,999 என்கிற விலைக்கு விற்பனையாகிறது. மேற்குறிப்பிட்ட தள்ளுபடி விலையானது அமேசான் வலைதளம் வழியாக கிடைக்கும் ரூ.10,000 மதிப்பிலான கூப்பனைப் பயன்படுத்திய பிறகு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது!

ஃபாண்டம் பிளாக், ஃபாண்டம் ஒயிட் மற்றும் ஃபாண்டம் க்ரீன் என்கிற 3 நிறங்களில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ்22 மீது கிடைக்கும் இந்த தள்ளுபடி குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இருக்கும். எனவே, எஸ்22 மாடலை மேற்கூறிய தள்ளுபடி விலையில் நீங்கள் வாங்க விரும்பினால், நீங்கள் விரைவாக செயல்பட வேண்டும்!

Galaxy S22 5G மாடல் ஆனது – சாம்சங்கின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு ஒரு சில காரணங்களை மட்டும் அல்ல, எக்கச்சக்கமான காரணங்களை முன்வைக்கலாம்! ஏனெனில், இது அலுமினியம் ஃப்ரேம் மற்றும் கிளாஸ் பேக்கை வழங்கும் பிரீமியம் கட்டமைப்பைக் கொண்டு இருக்கிறது. மேலும் இது 6.1 அங்குல அளவிலான ஃபுல்-எச்டி+ ரெசல்யூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளேவை கொண்டு இருக்கிறது. கூடுதலாக, முன் பக்கமும், பின் பக்கமும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பாதுகாப்பையும் கொண்டுள்ளது!

ப்ராசஸர்.. ஸ்டோரேஜ்.. கேமரா?

இது Qualcomm Snapdragon 8 Gen 1 SoC-ஐ பேக் பேக் செய்கிறது. இது ஒரு 5ஜி சிப்செட் ஆகும். இது 8GB ரேம் மற்றும் 256GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, இது 50MP மெயின் லென்ஸ் + 12MP அல்ட்ரா-வைட் லென்ஸ் + 3x ஆப்டிகல் ஜூம் ஆதரவுடனான 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பைக் கொண்டு இருக்கிறது. முன்பக்கத்தில், 10எம்பி செல்ஃபி கேமரா உள்ளது.

பேட்டரி?

இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடனான 3,700mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது வயர்லெஸ் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது.

கனெக்டிவிட்டி

இந்த கேலக்ஸி எஸ்22 5ஜி மொபைல், வைஃபை 6, ப்ளூடூத் 5.2 மற்றும் GPS ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது; விரைவில் இது ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டையும் பெறும்.

ரூ.49,999 என்கிற சலுகை விலையில் கிடைக்கும் வரை, Galaxy S22 5G ஸ்மார்ட்போன் ஆனது மிஸ் பண்ணவே கூடாத ஒரு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும். ஏனெனில் இது Android 13 OS-ஐ பெறும் மற்றும் செயல்திறனில் ஒரு குறையும் சொல்லாத ஃபிளாக்ஷிப் சிப்பைக் கொண்டுள்ளது, மேலும் இதன் கேமரா மூலம் 8K வீடியோக்களையும் எடுக்க முடியும்.