Home News இப்போ வாங்குங்க.. அப்புறமா காசு கொடுங்க!

இப்போ வாங்குங்க.. அப்புறமா காசு கொடுங்க!


புதிய மாடல் போன்களின் அறிமுக தேதி வெளியானதும் பழைய மாடல்களின் மீது அதிரடி விலைக்குறைப்பு, வங்கி சலுகைகள், கேஷ்பேக் சலுகைகள் போன்ற ஆஃபர்களை அறிவிப்பது ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் வழக்கம்.

சமீப காலமாக பழைய ஆப்பிள் ஐபோன்கள் மீது (அதாவது ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 மீது) எக்கச்சக்கமான சலுகைகள் கிடைக்கிறது.இதெல்லாம் ஏன் என்றால்.. ஐபோன் 14 சீரீஸ் மாடல்கள் விரைவில் (வருகிற செப்டம்பர் 2022-இல்) அறிமுகம் செய்யப்பட உள்ளன, அதனால் தான்!
இதைப் பின்பற்றி சாம்சங் நிறுவனம் இந்தியாவில் உள்ள அதன் வாடிக்கையாளர்களுக்காக Buy now, Pay later (இப்போது வாங்குங்கள், பின்னர் பணம் செலுத்துங்கள்) என்கிற ஆபரை அறிவித்துள்ளது. உடனே இந்த சலுகையின் கீழ் ஒரு நல்ல பட்ஜெட் ஸ்மார்ட்போனையோ அல்லது ஒரு மிட்-ரேன்ஞ் மாடலையோ வாங்கலாம் என்று நீங்கள் திட்டமிட்டால்.. இந்த கட்டுரை உங்களுக்குத்தான்.

ஏனெனில் சாம்சங் நிறுவனம் அதன் ‘பை நௌவ், பே லேட்டர்’ ஆபரின் கீழ் கேலக்ஸி எஸ் 22 சீரிஸ் (Galaxy S 22 series) மற்றும் ஃபோல்ட் 3 (Fold 3) மற்றும் ஃபிளிப் 3 (Flip 3) போன்ற நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை மட்டுமே பட்டியலிட்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களான ஃபோல்ட் 4 மற்றும் ஃபிளிப் 4 மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதன் விளைவாக உருவானதே இந்த ‘பை நௌவ், பே லேட்டர்’ ஆபர்!

இந்த Buy now, Pay later ஆபரின் வழியாக முதல் முறையாக ஃபிளாக்ஷிப்கள் மற்றும் ஃபோல்டபிள்களில் மீதான சலுகைகளை வாரி வழங்குவதாக சாம்சங் கூறுகிறது. ஆனால் இந்த சலுகையை பெற சில தகுதிகளும் இருக்க வேண்டும். ஒன்று உங்களிடம் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு இருக்க வேண்டும் மற்றும் அதில் குறைந்தபட்ச கிரெடிட் லிமிட் ஆக ரூ 1.5 லட்சம் இருக்க வேண்டும்.
இந்த ஆஃபரின் கீழ் நீங்கள் ஒரு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை வாங்குகிறீர்கள் என்றால், அந்த ஸ்மார்ட்போனின் மொத்த தொகையில் 60 சதவீதத்தை 18 சமமான மாதத் தவணைகளில் செலுத்தலாம். மீதமுள்ள 40 சதவீத தொகையை 19 வது தவணையாக ‘புல்லட் பேமண்ட்’ ஆக செலுத்தலாம் என்று சாம்சங் கூறுகிறது.

இந்தியாவில் Samsung Galaxy S22 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ஆனது ரூ.1,09,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே ஸ்மார்ட்போன் 12ஜிபி + 512ஜிபி மற்றும் 12ஜிபி + 1டிபி ஆப்ஷன்களின் கீழும் கிடைக்கிறது. அவைகள் முறையே ரூ.1,18,999 மற்றும் ரூ.1,34,999 க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

முன்னரே சொன்னபடி, சாம்சங் அறிவித்துள்ள இந்த சிறப்பு சலுகையின் கீழ் சாம்சங் ஃபோல்ட் 3 மற்றும் ஃப்ளிப் 3 ஸ்மார்ட்போனும் வாங்க கிடைக்கும். ஃபோல்ட் 3 (Fold 3) ஸ்மார்ட்போனின் 12ஜிபி + 256ஜிபி மொபைல் ரூ.1,39,999க்கும் மற்றும் 12ஜிபி + 512ஜிபி மாடலானது ரூ.1,47,999க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் ஃபிளிப் 3 ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 128ஜிபி மாடல் ரூ.84,999 க்கும், 8ஜிபி + 256ஜிபி மாடல் ரூ.89,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

சாம்சங் நிறுவனத்தின் இந்த Buy now, Pay later சலுகையை பயன்படுத்திக்கொள்ள விரும்புபவர்கள், இந்தியா முழுவதும் உள்ள ரீடெயில் ஸ்டோர்களை அணுகலாம்.