
சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்போனில் புதிய சிறப்பு அம்சத்திற்க்காக காப்புரிமைக்கு விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் புது ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
சாம்சங் நிறுவனம் புதிதாக இரண்டு திரையுடன் கூடிய ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் டிரான்ஸ்பேரண்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட இருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் சாம்சங் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டு இருக்கும் விண்ணப்ப படிவத்தில் இடம்பெற்று இருக்கிறது. காப்புரிமை விண்ணப்பத்தில் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் தெரியவந்துள்ளது.
அதன்படி புது சாம்சங் ஸ்மார்ட்போன் ஃபிளாட் சர்பேஸ் பேக் பேனலில் கேமரா மாட்யுல் மற்றும் பிராண்டு லோகோ உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் மூலம் புதுமை மிக்க டிசைனை வழங்க சாம்சங் முடிவு செய்து இருக்கிறது. அதன்படி ஸ்மார்ட்போனின் பின்புறம் டிரான்ஸ்பேரண்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட இருக்கிறது.
விண்ணப்பத்தின் படி, பயன்படுத்தப்படாத நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் இரண்டாவது டிஸ்ப்ளே பின்புற பேனலில் நீள்கிறது. இது ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே (Always on display) போன்றே ஒரு பகுதியாகவோ அல்லது தனி டிஸ்ப்ளேவாகவோ வரும். இரண்டாவதாக வரும் இந்த பின்புற ஸ்கிரீன் கொண்டு செல்ஃபி எடுப்பது, வீடியோ அழைப்புகளைப் பேசுவது, நோட்டிபிகேஷன்ஸ் போன்ற விவரங்களை மேலோட்டமாக பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.
சாம்சங்கின் டூயல் ஸ்கிரீன் காப்புரிமை விண்ணப்பம், 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட இசட்டிஇ நுபியா X மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போனில் கிளாஸ் ரியர் பேனல் வழங்கப்பட்டு இருக்கிறது. சாம்சங் காப்புரிமையில் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரிகிறது. இந்த காப்புரிமை உண்மையாகும் பட்சத்தில் சாம்சங் நிறுவனம் விரைவில் டூயல் ஸ்கிரீன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம்.
இதற்கிடையே சாம்சங் நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன் அம்சங்கள் பற்றிய தகவல் வெளியாக துவங்கி விட்டது.
இந்த புது கேலக்ஸி S23 ஸ்மார்ட்போன் நீண்ட பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது.
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் தான் தனது புதிய பிளாக்ஷிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. கேலக்ஸி Z போல்டு 4 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 4 பெயரில் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய போல்டபில் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து சாம்சங் தற்போது அடுத்த தலைமுறை கேலக்ஸி S சீரிஸ் ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் புதிய சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த பிராசஸர் மூலம் புது ஸ்மார்ட்போனின் பேட்டரி பேக்கப் பிரிவில் அதிக கவனம் செலுத்த சாம்சங் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போதைய கேலக்ஸி S22 சீரிஸ் மாடல்களில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கலுயா எனும் குறியீட்டு பெயரில், SM8550 எனும் மாடல் நம்பரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த பிராசஸரை TSMC தனது 4 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்படுவதாக தெரிகிறது. இந்த சிப்செட் ஒரு அதிவேக கார்டெக்ஸ் X3 கோர் கொண்டிருக்கும். இது முந்தைய பிராசஸரை விட 25 சதவீதம் அதிக செயல்திறனை வழங்கும். சில மாதங்களுக்கு முன்பு தான் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 செயல்திறன் அறியும் சோதனைகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. புதிய சிப்செட் நவம்பர் அல்லது டிசம்பர் மாத வாக்கில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.