
சாம்சங் நிறுவனம் புதிய Samsung Galaxy A04s ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்பு, தரமான சிப்செட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் குறைந்த விலையில் வெளிவந்துள்ளது.
Samsung Galaxy A04s
முதலில் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம். Samsung Galaxy A04s ஸ்மார்ட்போன் ஆனது 6.5 அங்குல ஃபுல் எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்.
சிப்செட்
ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 850 சிப்செட் இந்த கேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. எனவே இது இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக One UI Core 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.
இன்டர்னல் ஸ்டோரேஜ்
கேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. கூடவே மெமரிநீட்டிப்பு ஆதரவையும் கொண்டுள்ளது. அதாவது இதன் சேமிப்புத்திறனை ஒரு மைக்ரோ SD கார்டைப் பயன்படுத்தி அதிகரித்துக் கொள்ளவும் முடியும். இதற்கென மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.
கேமரா
பின்பக்கத்தில் 50எம்பி பிரைமரி கேமரா (f/1.8) + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி போர்ட்ரெய்ட் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது கேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போன். செல்ஃபிகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன்.
பேட்டரி
சாம்சங் கேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். அதேபோல் இந்த போனில் 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, அட்மோஸ் ஆடியோ ஆதரவு, கைரேகை ஸ்கேனர் போன்ற வசதிகளோடு வெளிவந்துள்ளது.
கனெக்டிவிட்டி
4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ்,யுஎஸ்பி-சி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த போனின் எடை 195 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது. பிளாக், காப்பர், கிரீன் ஆகிய நிறத் தேர்வுகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விலை
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ04எஸ் ஸ்மார்ட்போனின் ரூ.13,499 என்ற விலைக்கு விற்பனைக்கு வருகிறது. சாம்சங் இணையதளம் மற்றும் முன்னணி ஆன்லைன் தளங்களில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும். அதேபோல் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்குவதன் மூலம் ரூ.1000 கேஷ்பேக் பெறலாம்.