
சாம்சங் நிறுவனம் 2023 ஆண்டின் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனான கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போனை ஐரோப்பா மற்றும் அமெரிக்க சந்தைகளில் அறிமுகம் செய்துள்ளது. ஆனால் இரண்டு நாடுகளிலும் வெவ்வேறு சிப்களுடன் இந்த கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் என்னென்ன என்று இப்போது பார்க்கலாம்.
டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் 6.6 அங்குல ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. கூடவே 1080 x 2408 பிக்சல்ஸ், 399 ppi அடர்த்தி, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.
சிப்செட்
ஐரோப்பாவில் சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் Exynos 1330 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அமெரிக்காவில் Dimensity 700 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் OneUI 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியாகி இருக்கிறது.

கேமரா
சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இதன் உதவியுடன் அருமையான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 13எம்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர இந்த கேலக்ஸி ஸ்மார்ட்போன் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது.
மெமரி
இந்த சாம்ச்ங் கேலக்ஸி ஏ14 5ஜி போன் 64GB – 4GB RAM, 128GB – 4GB RAM, 128GB – 6GB RAM என மூன்று வேரியண்ட்களில் வெளியாகி இருக்கிறது. இது தவிர இதன் இண்டர்னல் மெமரியை அதிகரித்துக் கொள்ள மைக்ரோ SD ஸ்லாட் ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கிறது.
பேட்டரி
புதிய சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. எனவே 5ஜி சேவைக்கு தகுந்தபடி சிறந்த பேட்டரி பேக்கப் கிடைக்கும். இதனை சார்ஜ் செய்வதற்கு 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது.
கனெக்டிவிட்டி
5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை 5, ப்ளூடூத், என்எப்சி, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் USB டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போனுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு இயங்குதள அப்டேட் கிடைக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலை
4ஜிபி/6ஜபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் $200(இந்திய மதிப்பில் ரூ.16,500) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் ஐரோப்பாவில் இதன் விலை EUR 229 (இந்திய மதிப்பில் ரூ.20,100)ஆக உள்ளது. 202 கிராம் எடையுள்ள இந்த மொபைல், கருப்பு, வெள்ளி, பழுப்பு மற்றும் பச்சை என 4 நிறங்களில் இந்த கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.






