4Gயின் வெற்றியைத் தொடர்ந்து 5G! விற்பனைக்கு வந்தது கேலக்ஸி A23 5G

 

Highlights

  • சாம்சங் நிறுவனம் மிட்-ரேன்ஜ் விலைப்பிரிவின் கீழ், சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி (Samsung Galaxy A23 5G)  என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
  • இது 5ஜி-க்கான ஆதரவை வழங்குவதோடு, 50MP குவாட் கேமரா, 5000mAh பேட்டரி போன்ற சிறந்த அம்சங்களையும் வழங்குகிறது.

இந்தியாவில் சாம்சங்கின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனாக அறிமுகம் கேலக்ஸி ஏ23 5ஜி மாடல் ஆனது கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி சி23 4ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து வருகிறது. முன்னரே குறிப்பிட்டபடி கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வெறுமனே 5ஜி-க்கான ஆதரவில் மட்டும் கவனம் செலுத்தாமல் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், 50எம்பி குவாட் ரியர் கேமரா செட்டப் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது. சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி போனில் இருக்கும் அம்சங்கள் என்னென்ன? விலை என்ன? எப்போது முதல் விற்பனை? பார்க்கலாம்.

 

பெரிய டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஃபுல் எச்டி+ ரெசல்யூஷனுடன் 6.6 அங்குல அளவிலான எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் வருகிறது. இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உடன் பாலிகார்பனேட் பாடியுடன் வருகிறது.

ப்ராசஸர் & மெமரி

சாம்சங்கின் இந்த லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 695 ப்ராசஸர் உள்ளது. இது 128ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி/8ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான ஒன்யுஐ 4.1.1 உடன் வருகிறது. சாம்சங் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போனிற்கு 2 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும்.

 

கேமரா & பேட்டரி!

சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போனில் குவாட் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் உடனான 50MP ப்ரைமரி சென்சார் + 5MP அல்ட்ராவைட் + 2MP மேக்ரோ கேமரா + 2MP டெப்த் சென்சார் உள்ளன. சாம்சங் நிறுவனத்தின் கூற்றுப்படி இதன் கேமரா செட்டப் 30fps வேகத்தின் கீழ் 1080P வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டது. முன்பக்கத்தை பொறுத்தவரை, இதில் 8MP செல்ஃபி கேமரா உள்ளது. கடைசியாக, இந்த ஸ்மார்ட்போன் 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரி உடன் வருகிறது.

 

விலை & விற்பனை

சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன் மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் 6GB + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.22,999 க்கு கிடைக்கும்; அதுபோல்  8GB + 128GB ஆப்ஷன் ரூ.24,999 க்கு கிடைக்கும். மேலும் இது சில்வர், ஆரஞ்சு மற்றும் கருப்பு என்கிற மூன்று நிறங்களில் வெளியாகி இருக்கிறது. விற்பனையை பொறுத்தவரை இது சாம்சங் எக்ஸ்க்ளூஸிவ் ஸ்டோர்ஸ், சாம்சங்.காம் மற்றும் பார்ட்னர் ஸ்டோர்ஸ் (அமேசான்) வழியாக நேற்று முதல் (ஜனவரி 18) விற்பனையைத் துவங்கி விட்டது.

2022ஆம் ஆண்டின் சிறந்த மொபைலகளின் பட்டியலைக் காண, அவற்றில் மிகச்சிறந்ததைத் தேர்ந்தெடுக்க இங்கே க்ளிக் செய்யவும்!

https://www.indiangadgetawards.com/