

சாம்சங் நிறுவனம் Galaxy A34 5G மற்றும் A54 5G ஸ்மார்ட்போன்களை கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. மேலும் சில நாடுகளில் Galaxy A14 4G மொபைல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து வரும் மாதங்களில் துருக்கியில் Galaxy A24 அறிமுகப்படுத்தப்படும் என்று சாம்சங் நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது.
இப்போது, ஒரு இஸ்ரேலிய வலைத்தளம் கேலக்ஸி A24 4G மொபைலின் படங்கள் மற்றும் அம்சங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக வெளிப்படுத்தி இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Galaxy A23 மொபைலின் வாரிசாக வரும் இந்த மொபைல், அதிலிருந்த ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்டுக்கு பதில், மீடியா டெக்கின் ஹீலியோ ஜி99 சிப்செட்டோடு வெளியாக இருக்கிறது. அதேவேளையில் LCD திரையில் இருந்து மேம்படுத்தப்பட்ட AMOLED திரையைப் பெறும் என்று கூறப்படுகிறது.
கேமரா
மற்ற மாடல்களைப் போலவே, இந்த Galaxy A24 மொபைலானது 3 பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது, மேலும் பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இதோடு கேலக்ஸி ஏ23 மொபைலில் இருந்த அதே 5000mAh பேட்டரியையும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது.
விலை
சாம்சங் கேலக்ஸி A24 மொபைல் கருப்பு, வெள்ளி, பர்கண்டி (சிவப்பு) மற்றும் வெளிர் பச்சை நிறங்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை பற்றி இதுவரை நிறுவனத்தின் சார்பில் எந்தவொரு தகவலும் வெளியாக வில்லை. ஆனால், மொபைல் வெளியாவது உறுதியாகி இருப்பதால், வரும் காலங்களில் இதன் விலையும், மற்ற அம்சங்களும் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.
Samsung Galaxy A24 (எதிர்பார்க்கப்படும்) அம்சங்கள்
- 6.5 அங்குல FHD+ சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளே
- 90Hz புதுப்பிப்பு வீதம்
- மீடியா டெக்கின் ஹீலியோ ஜி99 இயங்குதளம்
- 4ஜிபி ரேம், 128ஜிபி சேமிப்பு, மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை விரிவாக்கக்கூடியது
- Samsung One UI 5.0 உடன் கூடிய Android 13 இயங்குதளம்
- இரட்டை சிம் கார்டுகள்
- OIS வசதியோடு கூடிய f/1.8 அபசர் கொண்ட 50MP பின்புற கேமரா + f/2.2 அப்சர் கொண்ட 5MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா + f/2.4 அப்சர் கொண்ட 2MP மேக்ரோ கேமரா
- LED ஃபிளாஷ்
- f/2.0 அப்சர் கொண்ட 13MP முன் கேமரா
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்
- 3.5மிமீ ஆடியோ ஜாக்
- டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர்
- 162.1 x 77.6 x 8.3mm அளவு
- 195 கிராம் எடை
- இரட்டை 4G VoLTE,
- Wi-Fi 802.11 b/g/n
- புளூடூத் 5
- GPS + GLONASS
- 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி






