மிட்ரேஞ்ச் போனாக வெளியாகிறதா சாம்சங் கேலக்ஸி A34 5G?

Highlights

  • சாம்சங் விரைவில் கேலக்ஸி ஏ சீரிஸ் இல் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
  • சாம்சங் கேலக்ஸி A34 5G என்ற பெயரில் வெளியாகும் இந்த போன் மிட்ரேஞ்ச் விலையில் அறிமுகம் ஆகலாம்.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்23 சீரிஸ் ஸ்மார்ட்போனை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த நிலையில் நிறுவனம் விரைவில் கேலக்ஸி ஏ சீரிஸ் இல் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. அது Samsung Galaxy A34 5G ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்திருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் என்ன வண்ணங்களில் வெளியாகும் என்ற தகவலும் ஆன்லைனில் கசிந்திருக்கிறது.

 

நிறங்கள்

டிப்ஸ்டர் SnoopyTech ட்வீட்டின் மூலம் வெளியிட்ட தகவலின்படி, சாம்சங் கேலக்ஸி A34 5G ஆனது 6.6 அங்குல டிஸ்ப்ளே உடன் வரும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆவ்சம் சில்வர், ஆவ்சம் வயலட், ஆவ்சம் லைம் மற்றும் ஆவ்சம் கிராஃபைட் என 4 வண்ண விருப்பத்தில் வெளியாகி இருக்கிறது.

வேரியண்ட்

வரவிருக்கும் சாம்சங் ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மூலம் இயங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு வேரியண்ட்கள் சாம்சங் கேலக்ஸி A34 5G ஸ்மார்ட்போன் ஆனது இரண்டு வேரியண்ட்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. அது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 6 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என்ற இரண்டு வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது.

 

அம்சங்கள்

Samsung Galaxy A33 இன் வாரிசாக சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த போனானது SM-A346M என்ற மாடல் எண்ணுடன் US ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC) என்ற இணையதளத்தில் முன்பு காணப்பட்டது. இந்த பட்டியலின்படி, புதிய ஸ்மார்ட்போன் 25W வயர்டு சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ப்ளூடூத் SIG தரவுத்தளம் மற்றும் Geekbench தளத்திலும் காணப்பட்டிருக்கிறது.

இயங்குதளம்

இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஒன் யுஐ 5.0 மூலம் இயங்கும் என கூறப்படுகிறது. Geekbench இன் சிங்கிள் கோர் சோதனையில் 778 புள்ளிகளும் மல்டி கோர் சோதனையில் 2,322 புள்ளிகளும் இந்த ஸ்மார்ட்போன் பெற்றிருக்கிறது. Samsung Galaxy A34 5G ஆனது இந்திய தரநிலைகள் பணியகத்தின் (BIS) இணையதளத்தில் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

கேமரா

இந்த ஸ்மார்ட்போனானது 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் என மூன்று கேமரா இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பக்கா மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.1,400 கோடி வசூல்

இதனிடையே சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்23 சீரிஸ் ஸ்மார்ட்போன் பல்வேறு சாதனைகள் புரிந்து வருகிறது. ரூ.1,400 கோடி வசூல் சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்23க்கு 1.4 யூனிட்கள் ப்ரீ ஆர்டர் கிடைத்துள்ளதாகவும் இதன் மூலம் ப்ரீஆர்டர் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே ரூ.1,400 கோடி கிடைத்துள்ளதாகவும் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 1.4 லட்சம் யூனிட்கள் முன்பதிவு முதல் 24 மணி நேரத்தில் நாங்கள் கிட்டத்தட்ட 1.4 லட்சம் யூனிட்கள் முன்பதிவுகளை பெற்றுள்ளோம் என்றும் இது கேலக்ஸி எஸ்22ஐ விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம் என்றும் தெரிவித்துள்ளார். ஒரு போனின் சராசரி விலை சுமார் 1 லட்சம் ரூபாய் என்ற வீதம் எனவும் இதன் ப்ரீ ஆர்டர் மூலம் சுமார் ரூ.1,400 கோடி 24 மணி நேரத்திற்குள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

 

Samsung Galaxy S23 சீரிஸ்

சாம்சங் நிறுவனம் பக்கா ப்ரீமியம் ஸ்மார்ட்போனாக Samsung Galaxy S23, Galaxy S23+, Galaxy S23 Ultra போனை அறிமுகம் செய்துள்ளது. கடந்த 2 ஆம் தேதி நடந்த Galaxy Unpacked நிகழ்வில் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அனைத்து போன்களும் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. மூன்று மாடல்களிலும் Gorilla Glass Victus 2 பாதுகாப்பை கொண்டிருக்கிறது.

 

Samsung Galaxy S23 மற்றும் Galaxy S23+ விலை

Samsung Galaxy S23 தொடரில் அடிப்படை மாடலாக சாம்சங் கேலக்ஸி எஸ்23 இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.79,999 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் Samsung Galaxy S23+ இன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.94,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. Samsung Galaxy S23 Ultra விலை Samsung Galaxy S23 Ultra ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.1,24,999 எனவும் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.1,34,999 எனவும் 12ஜிபி ரேம் மற்றும் 1டிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.1,54,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து எல்லா விலைப்பிரிவிலும் சிறந்த போன்களை வெளியிட்டு வருவதால் தொடர்ந்து முதல் இடத்தையும் தக்க வைத்து வருகிறது சாம்சங்.