பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல நிறுவனங்கள் புதிய மொபைல்களை அறிமுகம் செய்தும், சிறப்புச் சலுகைகளை வழங்கியும் வருகின்றன. இந்நிலையில் சாம்சங் நிறுவனமும் தற்போது ஒரு அட்டகாசமான புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து கையோடு அதற்கு அதிரடியான தள்ளுபடியும் வழங்கி உள்ளது.
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் சாம்சங் கேலக்ஸ் எப்04 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் வரும் ஜனவரி 12-ம் தேதி விற்பனைக்கு வருகிறது. அறிமுக சலுகையாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த கேலக்ஸி எப்04 ஸ்மார்ட்போனை ரூ.7,499-விலைக்கு வழங்க இருக்கிறது. இந்த அறிமுகச் சலுகை முடிந்ததும் இது ஒரிஜினல் விலையான ரூ.9,499-க்குச் சென்றுவிடும் என்று சாம்சங் நிறுவனம் சார்பில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெமரி
ஸ்லாட் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்04 ஸ்மாரட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக ‘விர்சுவல் ரேம்’ வசதி மூலம் இதன் ரேமை 8 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ள முடியும். அதுபோல கூடுதலாக இண்டர்னல் மெமரி நீட்டிப்பு ஆதரவையும் கொண்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த மொபைலின் சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள முடியும்.
டிஸ்பிளே
6.5 அங்குல HD+ டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது சாம்சங் கேலக்ஸ் எப்04. கூடவே 720×1560 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், வாட்டர் டிராப் நாட்ச் டிசைன் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது.
சிப்செட்
சாம்சங் கேலக்ஸி எப்04 ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த உதவும் இந்த கேலக்ஸி எப்04 ஸ்மார்ட்போன். அதேபோல் One UI சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

கேமரா
புதிய சாம்சங் கேலக்ஸி எப்04 ஸ்மார்ட்போன் 13எம்பி + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையாகப் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.
நிறங்கள்
இந்த புதிய சாம்சங் கேலக்ஸ் எப்04 ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தளத்தில் ஜேட் பர்பில் மற்றும் ஓபல் கிரீன் நிறங்களில் வாங்க முடியும்.
பேட்டரி & பாஸ்ட் சார்ஜிங்
5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த கேலக்ஸி எப்04 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். கூடவே 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக குறைந்த விலையில் ஒரு நல்ல போனை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் இந்த போனை நம்பி வாங்காலாம்.







