6000mAh பேட்டரியுடன் மார்ச் 24 அன்று அறிமுகமாகிறது Samsung Galaxy F14 5G

Highlights

  • Samsung Galaxy F14 5G மார்ச் 24 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
  • Galaxy F14 5G மொபைலின் விற்பனை Flipkart மூலம் நடைபெறும்.
  • இந்த போனில் 6,000mAh பேட்டரி மற்றும் 5nm Exynos 1330 சிப்செட் இருக்கும்.

 

Samsung Galaxy F14 5G போன் இந்த மார்ச் 24 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன் வெளியீட்டு தேதியை சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்நிலையில், வரவிருக்கும் கேலக்ஸி எஃப்-சீரிஸ் ஃபோனுக்கென இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் ஒரு லேண்டிங் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.  அங்கு மொபைலைப் பற்றிய சில விவரங்கள்  வெளிப்படுத்தப்பட்டுள்ளன.  5 nm சிப்செட் மற்றும் 6,000 mAh பேட்டரியை இந்த Galaxy F14 5G போனின் சிறப்பம்சமாகக் கூறலாம்

 

இளைஞர்களுக்காக..

இந்தியாவில் மார்ச் 24 அன்று மதியம் 12 மணிக்கு வெளியிடப்படும் இந்த ஸ்மார்ட்போன்,  இளைஞர்களின் எதிர்பார்ப்புகளைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. மேகும் கேலக்ஸி எஃப்-சீரிஸின் ட்ரேட்மார்க் அம்சங்களைப் பின்பற்றி, சாம்சங் நிறுவனத்தின் வரவிருக்கும் கேலக்ஸி எஃப்14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதை சாம்சங் ‘Frevolution 5G’ என்று உற்சாகமாக கேலக்ஸி எஃப் 14 டீஸர் வெளியீட்டில் குறிப்பிட்டுள்ளது.

கேலக்ஸி எஃப் 14 அம்சங்கள்

 

டிஸ்பிளே

டிஸ்பிளே பற்றி பேசுகையில், சாம்சங் இந்த போனில் 6.6 அங்குல ஃபுல் எச்டி+ ஸ்கிரீனை வழங்குகிறது. அதே நேரத்தில், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதம் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, போனில் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பும் உள்ளது, இது ஸ்மார்ட்போனை தற்செயலான தவறவிடுதல்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

 

சிப்செட்

சாம்சங் கேலக்ஸி எஃப்14 5ஜியில் 5என்எம் எக்ஸினோஸ் 1330 செயலி ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த விலைப்பிரிவில் இந்த சிப்செட் உபயோகிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இளைஞர்கள் வேகமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதாக நிறுவனம் நம்புகிறது. அத்தகைய இளைஞர்களுக்கு அவர்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ற ஸ்மார்ட்போன் தேவை. இதனை மனதில் வைத்து இந்த மொபைலில் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

 

பதிமூன்று 5ஜி பேண்டுகள் (band)

இந்த ஃபோனில் பதிமூன்று 5ஜி பேண்டுகள் (அலைவரிசை) கொடுக்கப்பட்டுள்ளதால் Galaxy F14 மொபைல் பலவிதமான நெட்வொர்க்கிற்கு ஆதரவு வழங்கும். இது மிகவும் பாக்கெட் ஃரெண்ட்லி 5G ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இது விரைவில் இந்தியாவில் #Frevolution5G டேக் மூலம் பிரபலப்படுத்தப்படும்.

பேட்டரி

கேலக்ஸி எஃப்14 5ஜியில் 6000mAh திறன் வாய்ந்த பேட்டரி வழங்கப்படும். இதனால் ஒரே சார்ஜில் இரண்டு நாட்கள் வரை இந்த மொபைலைப் பயன்படுத்தலாம். மேலும், இந்த சாம்சங் போனில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

 

இயங்குதளம்

இந்த மொபைல் சமீபத்திய Android 13 அவுட்-ஆஃப்-பாக்ஸ் One Core UI 5.1 இயங்குதளத்தில் வேலை செய்யும். மேலும், இந்த சாம்சங் போனிற்கு 2 முறை OS அப்கிரேடு மற்றும் 4 முறை பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும்.

 

Samsung Galaxy F14 5G முக்கிய அம்சங்கள்

  • சிப்செட் – Samsung Exynos 1330
  • ரேம் – 4 ஜிபி
  • திரை – 6.6 அங்குலம் (16.76 செமீ)
  • பின் கேமரா – 50 எம்.பி + 2 எம்.பி
  • செல்ஃபி கேமரா – 16 எம்.பி
  • பேட்டரி  – 6000 mAh