120Hz டிஸ்ப்ளே & 6,000mAh பேட்டரியுடன் விரைவில் இந்தியாவில் வெளியாகிறது Samsung Galaxy F34

Highlights

  • இந்த மொபைல் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், பிளிப்கார்ட் மூலம் விற்பனை செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
  • வரவிருக்கும் Galaxy F34 இன் சில அம்சங்களை Samsung ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.
  • இந்த போன் Galaxy M34 இன் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பாக இருக்கலாம்.

சாம்சங் நிறுவனம் புதிய Samsung Galaxy F34 5G வடிவில் மற்றொரு பட்ஜெட் மொபைலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்துகிறது. இந்த மொபைல் இந்தியாவில் மட்டும் வெளியாகலாம். இது Flipkart மூலம் ஆன்லைனில் விற்கப்படும். பிராண்ட் ஒரு “புரட்சிகர கேமரா” மற்றும் ஒரு பிரிவில் முன்னணி பேட்டரி அளவை உறுதியளிக்கிறது. சாம்சங் நிறுவனம் உறுதிப்படுத்திய சில அம்சங்களை இப்போது விரைவாகப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி F34 இந்தியா அறிமுக விவரங்கள்

சாம்சங் கேலக்ஸி F34 விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சாம்சங் வெளியீட்டு தேதியை இன்னும் வெளியிடவில்லை. ஆகஸ்ட் தொடக்கத்தில் இந்த மொபைல் வெளியாகலாம் என்று  நம்புகிறோம்.

 Samsung Galaxy F34 அம்சங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன

  • கேமரா: சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி F34 5Gக்கு 50MP மெயின் சென்சாரை உறுதி செய்துள்ளது. குறைந்த வெளிச்சம் மற்றும் நடுக்கம் இல்லாத செயல்திறனுக்காக சென்சார் OIS ஐக் கொண்டிருக்கும். சிங்கிள் டேக் அம்சத்துடன் 16 இன்பில்ட் லென்ஸ் எஃபெக்ட்களுடன் ஒரு ஃபன் மோட் கேமரா செயலியில் இருக்கும்.
  • டிஸ்ப்ளே:  Samsung Galaxy F34 ஆனது 120Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவை 1000-நிட்ஸ் உச்ச பிரகாசத்துடன் கொண்டிருக்கும்.
  • பேட்டரி: மொபைலில் 6,000mAh பேட்டரி பேக் இருக்கும். இது 2 நாட்கள் வரை நீடிக்கும் என்று சாம்சங் கூறியுள்ளது.

மொபைலின் சிப்செட் மற்றும் வெளியீட்டு தேதியை பிராண்ட் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அது அடுத்த மாத தொடக்கத்தில் வரலாம். டீஸர் படத்தின் அடிப்படையில், இது கருப்பு மற்றும் பச்சை என இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.  முதல் பார்வையில், இது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Samsung Galaxy M34 இன் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பாகத் தெரிகிறது. இது Amazon மூலம் கிடைக்கிறது. இதன் அம்சங்களை வைத்துப் பார்க்கையில் இதன் விலை ரூ. 20,000 க்கு கீழ் இருக்கலாம்.