Home News 108MP கேமரா மற்றும் 6,000mAh பேட்டரியோடு இந்தியாவில் வெளியானது Samsung Galaxy F54 5G

108MP கேமரா மற்றும் 6,000mAh பேட்டரியோடு இந்தியாவில் வெளியானது Samsung Galaxy F54 5G

Highlights
  • இதில் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி உள்ளது.
  • இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999.
  • இதில் Exynos 1380 சிப்செட் உள்ளது.

 

Samsung Galaxy F54 5G போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் 5G பேண்டுகள் (Band) ஜியோ மற்றும் ஏர்டெல் நெட்வொர் இரண்டிலும் சீராக வேலை செய்கின்றன. சக்திவாய்ந்த பேட்டரி மற்றும் திறன் மிக்க கேமரா கொண்ட இந்த மொபைல் நடுத்தர பட்ஜெட் (Mid range) பிரிவில் வெளியாகி இருக்கிறது. அதன் அம்சங்கள், விவரக்குறிப்புகள், விலை மற்றும் விற்பனை பற்றிய அனைத்து தகவல்களையும் இப்போது விரிவாகப் பார்க்கலாம்.

 

Samsung Galaxy F54 5G விலை மற்றும் விற்பனை

Samsung Galaxy F54 5G போன், 256GB சேமிப்புத்திறன், 8GB RAM உடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.29,999. Galaxy F54 5G மொபைலை  Flipkart மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் Meteor Blue மற்றும் Stardust Silver வண்ணங்களில் வாங்கலாம். அறிமுகச் சலுகையாக சாம்சங் நிறுவனம் ரூ.2,000 தள்ளுபடியை வழங்குகிறது.  எனவே இதன் விலை சில நாட்களுக்கு ரூ.27,999 ஆக இருக்கும்.

Samsung Galaxy F54 5G அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்

 

 

திரை

Galaxy F54 5G ஆனது சூப்பர் AMOLED+ பேனலில் கட்டப்பட்ட பெரிய 6.7 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 120Hz புதுப்பிப்பு வீதத்தை ஆதரிக்கும் பஞ்ச் ஹோல் ஸ்டைல் ​​திரையாகும்.

 

சிப்செட்

Galaxy F54 5G ஆனது சாம்சங்கின் 5nm ஃபேப்ரிக்கேஷனில் கட்டமைக்கப்பட் Exynos 1380 octa-core செயலியுடன் வெளியாகி இருக்கிறது. இந்த மொபைல் Android 13 அடிப்படையிலான OneUI 5.1 இயங்குதளத்தில் இயங்குகிறது.

பின் கேமரா

இந்த சாம்சங் போனில் புகைப்படம் எடுப்பதற்காக மூன்று பின்புற கேமரா உள்ளது. இந்த மொபைலில் OIS அம்சத்துடன் வரும் f/1.8 அப்பசருடன் கூடிய 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உள்ளது. மேலும், பின்புற கேமரா அமைப்பில் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவை உள்ளன.

 

முன் கேமரா

செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்பிற்காக, Samsung Galaxy F54 5G ஃபோன் 32 மெகாபிக்சல் முன் கேமரா f/2.2 அப்பசருடன் கூடிய சென்சாரோடு வருகிறது.

 

பேட்டரி

Galaxy F54 5G மொபைல், பவர் பேக்கப்பிற்காக 6,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த பெரிய பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்ய 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது.