Samsung Galaxy M13 ஸ்மார்ட்போன்கள் வருகிற ஜூலை 23-ந் தேதி முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் மிட்நைட் ப்ளூ (midnight blue), ஆக்வா கிரீன் (Aqua green) மற்றும் ஸ்டார்டஸ்ட் பிரவுன் (stardust brown) ஆகிய மூன்று நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் அதன் Galaxy M13 4G மற்றும் Galaxy M13 5G ஆகிய மாடல்களை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தி உள்ளது. மெக்சிகோவில் கடந்த மே மாதம் வெளியிட்ட M13 போன்களை விட இந்த போன் வித்தியாசமான தோற்றத்துடன் இருக்கிறது.
இதில் இன்பினிட்டி வி நாட்ச் டிஸ்ப்ளே (infinity V notch display) இடம்பெற்று இருக்கிறது. M13 4ஜி ஸ்மார்ட்போன் டிரிபிள் கேமரா செட் அப் உடனும், M13 5ஜி ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட் அப் உடன் வந்துதிருக்கிறது. இந்த இரு ஸ்மார்ட்போன்களும் மிட்நைட் ப்ளூ, ஆக்வா கிரீன் மற்றும் ஸ்டார்டஸ்ட் பிரவுன் ஆகிய மூன்று நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
M13 5ஜி ஸ்மார்ட்போனில் ரேம் ப்ளஸ் (RAM plus) வசதியும் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இது 5,000mAh பேட்டரி பேக் அப்-ஐ கொண்டிருக்கிறது. இதில் Dimensity 700 ப்ராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் M13 4ஜி ஸ்மார்ட்போன் 4,000mAh பேட்டரியை கொண்டு உள்ளது. M13 4ஜி ஸ்மார்ட்போனின் 4GB + 64GB சேமிப்புத்திறன் கொண்ட மொபைல் விலை ரூ. 11,999 எனவும், அதன் 6GB + 128GB சேமிப்புத்திறன் கொண்ட மொபைல் விலை ரூ.12,999 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
அதேபோல் M13 5G ஸ்மார்ட்போனின் 4GB + 64GB சேமிப்புத்திறன் கொண்ட மொபைலின் விலை ரூ.14,999 என்றும் அதன் 6GB + 128GB சேமிப்புத்திறன் கொண்ட மொபைலின் விலை ரூ.15,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த போன் வருகிற ஜூலை 23-ந் தேதி முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும்.






