
இந்த புதிய கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா வசதியுடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வாட்டர் டிராப் டிஸ்பிளே வசதியுடன் இந்த போன் வெளிவரும் என்பது இணையத்தில் கசிந்த படங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த கேலக்ஸி எம்14 5ஜி போனின் வலது புறத்தில் கைரேகை சென்சார் அடங்கிய பவர் பட்டன் உள்ளது. அதேபோல் இதன் பின்புற கேமராக்களின் வலது பக்கத்தில் எல்இடி பிளாஷ் ஆதரவு உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்புடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
சிப்செட்
எக்ஸிநோஸ் சிப்செட் இணையதளத்தில் வெளிவந்த தகவலின்படி, இந்த சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்டபோன் ஆனது ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 1330 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும். பின்பு இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமானால் நம்பி வாங்கலாம்.
கனெக்டிவிட்டி
சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும். தற்போது இந்த போனின் ஒரு சில அம்சங்கள் மட்டுமே வெளிவந்துள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் தெரியவரும்.
கேலக்ஸி ஏ14 5ஜி
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம். சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் 6.6 அங்குல ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. கூடவே 1080 x 2408 பிக்சல்ஸ் அடர்த்தி, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. மேலும் Dimensity 700 சிப்செட் வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் OneUI 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய போன் வெளிவந்துள்ளது.
கேமரா
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இதன் உதவியுடன் அருமையான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது.
பேட்டரி
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே 5ஜி சேவைக்கு தகுந்தபடி சிறந்த பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி விலை 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை 5, ப்ளூடூத், என்எப்சி, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் USB டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது.
மெமரி
4ஜிபி/6ஜபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் இதன் விலை EUR 229 (இந்திய மதிப்பில் ரூ.20,100)ஆக உள்ளது. கருப்பு, வெள்ளி, சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் இந்த கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியாவுக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.