
இப்போது புதிதாக வெளியாகி இருக்கும் கேலக்ஸி S23 அல்ட்ரா மொபைலில் என்னென்ன அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. அதில் எவை எல்லாம் சிறப்பாக உள்ளன எனபது குறித்துப் பார்க்கலாம்.
கேலக்ஸி S23 அல்ட்ரா (Galaxy S23 Ultra)
திரை
இந்த மொபைலில் 6.8 அங்குல QHD+ Edge உடன் கூடிய Dynamic AMOLED 2X திரை வழங்கப்பட்டுள்ளது. இது 120Hz ரிஃப்ரெஷ் ரேட்டையும், 240Hz டச் சாம்ப்ளிங் ரேட்டையும் கொண்டுள்ளது. இதோடு ‘விஷன் பூஸ்டரும்’ வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த திரையானது 78.1 x 163.4 x 8.9மிமீ அளவில் இருக்கிறது. இந்த மொபைலின் எடை 234 கிராம் ஆகும்.
கேமரா
இந்த கேலக்ஸி S23 அல்ட்ரா மொபைலில் பின்னால் 4, முன்னால் ஒன்று என 5 கேமராக்கள் உள்ளன. குறிப்பாக முதன்மை கேமராவாக f1.7 அபசருடன் கூடிய 200MP வைடு கேமரா இருக்கிறது. இது தவிர, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 10MP டெலிபோட்டோ கேமரா மற்றும் 10 மடங்கு வரை போகஸ் செய்யும் இன்னொரு 10MP டெலிபோட்டோ கேமரா ஆகியவை பின்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது.
முன்பக்கத்தில் வீடியோ அழைப்பு மற்றும் செஃபி எடுக்க 12MP செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
சிப்செட்
இந்த கேலக்ஸி S23 அல்ட்ரா மொபைல் சமீபத்திய முதல்தர சிப்செட்டான ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 ப்ராசஸர் மூலம் இயங்குகிறது. இதனால் ஆற்றலுக்கு பஞ்சமிருக்காது.
இயங்குதளம்
சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா ஆண்ட்ராய்டு 13 மேல் கட்டமைக்கப்பட்ட சாம்சங்கின் One UI5.1 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. பாதுகாப்புக்கென Samsung Knox, Samsung Knox Vault போன்றவை வழங்கப்பட்டுள்ளன.
மெமரி
கேலக்ஸி S23 அல்ட்ரா மொபைல் 4 விதமான மெமரி வேரியண்ட்களில் வெளியாகிறது.
8 GB ரேம் + 256 GB சேமிப்புத்திறன்
12 GB ரேம் + 256 GB சேமிப்புத்திறன்
12 GB ரேம் + 512GB சேமிப்புத்திறன்
12 GB ரேம் + 1TB சேமிப்புத்திறன்

பேட்டரி
இதில் 5000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கபட்டுள்ளது. ஆனால், இதற்கான சார்ஜரை தனியாக விலை கொடுத்து வாங்க வேண்டும். இவ்வாறு சார்ஜ் செய்யும் போது 0% முதல் 65% வரையிலான சார்ஜை 30 நிமிடங்களில் செய்ய முடியும். இது தவிர இந்த மொபைலை வயர்லெஸ் சார்ஜிங் முறையிலும் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.
கனெக்டிவிட்டி
இது ஒரு 5G மொபைல் ஆகும். இதோடு LTE, Wi-Fi 6E, Wi-Fi Direct Bluetooth V5.3 போன்ற பலவிதமான கனெக்டிவிட்டி வசதிகளும் இந்த கேலக்ஸி S23 அல்ட்ரா மொபைலில் இருக்கிறது. இதுதவிர IP68 ரேட்டிங்ஸோடு கூடிய வாட்டர் ரெஸிஸ்டன்ஸ், தூசு, அழுக்கு தடுப்பு வசதியும் இருக்கிறது.







