
பல வாரங்களாக Samsung Galaxy S23 Ultra மொபைலைப் பற்றிய வதந்திகள் இணையத்தில் பரவி வருகிறது. இப்போது வெளியான தகவலின் படி, Samsung Galaxy S23 Ultra ஸ்மார்ட்போனின் கேமரா குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகியுள்ளன. தென்கொரிய நிறுவனமான சாம்சங் அதன் கேலக்ஸி எஸ் 23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இம்முறை, ஸ்னாப்டிராகன் சிப்செட்டை மட்டுமே பயன்படுத்தப் போவதாக புதிய தகவல்கள் தெரிவிக்கிறது.
ப்ராஸசர்
இதுவரை சாம்சங் நிறுவனம் தனது S சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் தனது சொந்த தயாரிப்பான Exynos சிப்செட்டையே பயன்படுத்தி வந்தது. ஆனால் ஒரு குறிப்பிடத்தக்க டிப்ஸ்டர் வெளியிட்ட தகவலின் படி, இனி வெளியாக இருக்கும் Samsung Galaxy S23 Ultra ஆனது புதிய Qualcomm Snapdragon 8 Gen 2 சிப்செட் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 5000 mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கலாம் என்றும் டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது. வரவிருக்கும் இந்த புதிய Samsung Galaxy S23 Ultra ஸ்மார்ட்போன் 228 கிராம் எடையுடன் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
200MP கேமரா?
இதற்கு முன் வெளியான Galaxy S22 Ultra அளவிலான அதே தடிமனை Samsung Galaxy S23 Ultra கொண்டிருக்கும் என்று டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது. இதுதவிர, 200 மெகா பிக்சல் கொண்ட ISOCELL HP2 கேமரா சென்சார் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. 10x ஆப்டிகல் ஜூம் ஆதரவு 10x ஆப்டிகல் ஜூம் ஆதரவு இந்த சென்சார் பிக்சல் அளவு 0.60μm என்று கூறப்படுகிறது. மேலும், இது 60fps ஆதரவுடன் 8K வீடியோக்களை பதிவு செய்யக் கூடிய திறன் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Samsung Galaxy S23 Ultra ஸ்மார்ட்போனில், 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராவுடன் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கேமரா 10x ஆப்டிகல் ஜூம் ஆதரவை வழங்கும் என்று கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி S22 தொடரில் பயன்படுத்தப்பட்ட அதே சென்சார் இவை கொண்டிருக்கும் எனத் தெரிகிறது.
Samsung Galaxy S23 Ultra ஸ்மார்ட்போன் மாடல் தொடர்பான பல தகவல்கள் இணையத்தில் வைரல் ஆகி வருவதைத் தொடர்ந்து, இதன் அறிமுகம் மிக விரைவில் நடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நினைவு கூற, சாம்சங் நிறுவனத்திற்குச் சொந்தமான Samsung Galaxy S22 Ultra ஸ்மார்ட்போன் மாடலை நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிப்ரவரியில் இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது என்பது கவனிக்கத்தக்கது. இது Snapdragon 8 Gen 1 சிப்செட் உடன் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, வதந்திக்குள்ளான Samsung Galaxy S23 Ultra டிவைஸில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், Samsung Galaxy S22 Ultra டிவைஸ், 5,000mAh பேட்டரியைக் கொண்டிருந்தது. கேமரா அம்சங்களைப் பொறுத்த வரையில், இது 12 மெகாபிக்சல் மற்றும் 10 மெகாபிக்சல் செகண்டரி சென்சார்களுடன் 108 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் மூலம் சிறப்பம்சமாக ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இது முன்பக்கத்திலும் 40 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.
தள்ளுபடி சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல் மீது தள்ளுபடி அமேசான் நிறுவனத்தின் Great Freedom Festival Sale ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையின் பகுதியாகப் பல ஸ்மார்ட்போன்கள் மீதும், எலக்ட்ரானிக் கேட்ஜெட்ஸ்கள் மீதும் நம்ப முடியாத சிறப்புச் சலுகைகள் கிடைக்கிறது. குறிப்பாக, இப்போது சாம்சங் நிறுவனத்தின் மலிவு விலை 4G ஸ்மார்ட்போன் முதல் பிளாக்ஷிப் 5G ஸ்மார்ட்போன் வரை அனைத்து மாடல்களின் மீதும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.