

Samsung Galaxy S24 Ultra நேரடிப் படங்கள் கசிந்ததாகக் கூறப்படுகிறது
கசிந்த படங்களின்படி சாம்சங் நிறுவனம், அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் அதன் ஃபிளாக்ஷிப்பில் ஒரு பெரிய மாற்றமாக வளைந்த டிஸ்ப்ளேவை கைவிட்டுள்ளது. Samsung Galaxy S24 Ultra ஆனது, முந்தைய வதந்திகளை உறுதிப்படுத்தும் ஒரு தட்டையான முன் கண்ணாடியுடன் வளைந்த பக்கங்களுடன் நேரான, வலது கோண சட்டத்தைக் கொண்டுள்ளது. இந்த பிரேம் டைட்டானியத்தால் செய்யப்பட்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த எந்த வழியும் இல்லை என்றாலும், இது உண்மையான விஷயமாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
ஆப்பிள் தனது புதிய ஐபோன் 15 ப்ரோ தொடரின் ஃப்ரேமிற்கும் டைட்டானியத்தைப் பயன்படுத்துகிறது. இது இலகுவான உடல் எடை மற்றும் கூடுதல் வலிமையை தருகிறது. Xiaomi சீனாவில் அதன் Xiaomi 14 Pro சிறப்பு பதிப்பை இதே போன்ற தோற்றதில் வெளியிட்டுள்ளது. அதுபோல் சாம்சங் நிறுவனமும் இதை சில்வர் க்ரே நிறத்தில் அறிமுகப்படுத்தும் என்று தெரிகிறது.
Samsung Galaxy S24 Ultra ஜனவரி 17, 2024 அன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது Galaxy S23 தொடரை விட சற்று முன்னதாகவே வெளியாக உள்ளது. ஏனெனில் இந்த பிராண்ட் தனது முதலீட்டாளர்களுக்கு ஆண்டின் முதல் காலாண்டில் சிறந்த செயல்திறனைக் காட்ட திட்டமிட்டுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு தொடரில் அனைத்துப் பகுதிகளிலும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் மற்றும் 10X ஜூம்க்கு பதில் 5X பெரிஸ்கோப் கேமரா இடம்பெறும் ஒரே மாடலாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





