
தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Galaxy Z Fold 5, மற்றும் Galaxy Z Flip 5 ஆகிய போன்களை இந்த ஆண்டு வெளியிடத் தயாராகி வருகிறது. நிறுவனம் வழக்கமாக அதன் மடிக்கக்கூடிய தொலைபேசிகளை அதன் ‘கேலக்ஸி அன்பேக்டு’ நிகழ்வில் அறிமுகப்படுத்தும். இது பொதுவாக ஆகஸ்ட் மாதம் நடைபெறும். இருப்பினும், இந்த ஆண்டு, சாம்சங் நிறுவனம் ஆகஸ்ட் மாதத்திற்கு பதிலாக ஜூலை கடைசி வாரத்தில் இந்நிகழ்வை நடத்தலாம்.
ஒரு புதிய அறிக்கையின்படி, சில வாரங்களுக்கு முன்னர் நிகழ்வை நகர்த்துவது Galaxy Z Fold 5 மற்றும் வருவதாகக் கூறப்படும் Google Pixel Fold ஆகியவற்றுக்கு இடையேயான நேர வித்தியாசத்தைக் குறைக்கலாம். வரவிருக்கும் கூகிள் மொபைல் மே 10 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள Google I/O 2023 இன் போது வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
2023 Galaxy Unpacked Event:
சாம்சங்கிலிருந்து Samsung Galaxy Z Fold 5, Samsung Galaxy Z Flip 5, Samsung Galaxy Tab S9 series, Samsung Galaxy Watch 6 மற்றும் புதிய இயர்பட்கள் கூட இந்த ஆண்டில் எதிர்பார்க்கப்படுகிறது. தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனத்திற்கான அடுத்த Galaxy Unpacked நிகழ்வு ஜூலை கடைசி வாரத்தில், குறிப்பாக ஜூலை 25 மற்றும் ஜூலை 27 க்கு இடையில் நடைபெறலாம் என்று இப்போது கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், சாம்சங் தனது இரண்டாவது பெரிய ‘Unpacked’ நிகழ்வை ஆகஸ்டில் நடத்துகிறது. எனவே இது ஒரு பெரிய மாற்றமாக இருக்கும் Foldable ஸ்மார்ட்போன்களுக்கான சந்தை சூடுபிடிப்பதால், போட்டியை எதிர்கொள்ள சாம்சங் இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும் வெளியான அறிக்கையின்படி, கூகுள், Google Pixel fold மொபைலை வெளியிட தயாராகி வருகிறது.
Galaxy Z Fold 5 மற்றும் Galaxy Z Flip 5 ஆகிய இரண்டும் Galaxy Z Fold 4 மற்றும் Galaxy Z Flip 4 ஆகியவற்றின் வாரிசாக அறிமுகப்படுத்தப்பட்டு, பல சான்றிதழ் இணையதளங்களில் தோன்றி, அவற்றின் சார்ஜிங் திறன் மற்றும் சிப்செட் உள்ளிட்ட சில விவரக்குறிப்புகளும் வெளியாகி உள்ளன. அவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
Samsung Galaxy Z Fold 5 முக்கிய விவரக்குறிப்புகள்
- சிப்செட் – Qualcomm Snapdragon 8 Gen 2
- ரேம் – 12 ஜிபி
- டிஸ்ப்ளே – 7.8 அங்குலம் (19.81 செமீ)
- பின் கேமரா – 50 எம்பி + 12 எம்பி + 10 எம்பி
- செல்ஃபி கேமரா – 12 எம்.பி
- பேட்டரி – 4700 mAh