Home News கேலக்ஸி ஏ14 மொபைலின் 4ஜி மாடலை வெளியிடுகிறது சாம்சங்!

கேலக்ஸி ஏ14 மொபைலின் 4ஜி மாடலை வெளியிடுகிறது சாம்சங்!

Highlights
  • சாம்சங் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக சாம்சங் கேலக்ஸி ஏ14 4ஜி (Samsung Galaxy A14 4G) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • இது கடந்த மாதம், அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி மாடலின் 4ஜி வெர்ஷனாகும்.

Samsung Galaxy A14 4G

பெரிய ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே சாம்சங்கின் புதிய கேலக்ஸி ஏ14 4ஜி ஸ்மார்ட்போனானது ஃபுல் எச்டி+ ரெசல்யூஷன், 1080 × 2408 பிக்சல்ஸ், மற்றும் 20:9 ரேஷியோ உடனான 6.6 அங்குல அளவிலான ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது மீடியாடெக் ஹீலியோ ஜி80 (MediaTek Helio G80) ப்ராசஸரைக் கொண்டுள்ளது.

மெமரி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் சாம்சங் கேலக்ஸி ஏ14 4ஜி ஸ்மார்ட்போனில் மெமரியை எக்ஸ்டென்ட் செய்வதற்கான மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான ஒன்யுஐ 5 (OneUI 5) ஓஎஸ் உடன் வருகிறது.

 

கேமரா

கேமராக்களை பொறுத்தவரை, ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50-மெகாபிக்சல் மெயின் கேமரா + 5-மெகாபிக்சல் அல்ட்ராவைட் கேமரா + 2-மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உள்ளன. செல்ஃபி மற்றும் வீடியோ கால்கள் போன்ற தேவைகளை பூர்த்தி செய்ய, முன்பக்கத்தில் 13எம்பி செல்ஃபி கேமரா உள்ளது.

 

பேட்டரி

சாம்சங்கின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் 15W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. அளவீடுகளில் 9.1மிமீ தடிமன் மற்றும் 201 கிராம் எடையுள்ள இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Finger Print Sensor) பொறுத்தப்பட்டுள்ளது.

விலை

மலேசியாவில் பிளாக், சில்வர், க்ரீன் மற்றும் டார்க் ரெட் என்கிற 4 கலர் ஆப்ஷன்களில் வெளியாகியுள்ள கேலக்ஸி ஏ14 4ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம்! ஏனென்றால் இதே ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட் ஏற்கனவே இந்தியாவில் அறிமுகமாகி விட்டது. அதன் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஆப்ஷன் ரூ.16,499 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆக எப்படி பார்த்தாலும் 4ஜி வேரியண்ட்டின் விலை ரூ.15,000 க்குள் குறைவான விலைக்கே அறிமுகம் செய்யப்படும்.

அதுமட்டுமின்றி, சாம்சங் கேலக்ஸி ஏ14 4ஜி ஸ்மார்ட்போனில் டைமன்சிட்டி 700 மற்றும் எக்ஸிநோஸ் 1330 ஆகிய இரண்டையும் விட குறைந்த சக்தி வாய்ந்த மீடியாடெக் ஹீலியோ ப்ராசஸரே உள்ளது. ஆகையால், இதன் இந்திய விலை நிர்ணயம் இன்னும் குறைவாகவே இருக்கும் என நம்பலாம்.