
உணவு, உடை, உறைவிடத்திற்கு அடுத்து அத்தியாவசியத் தேவைகளுள் ஒன்றாக மாறிவிட்டது மொபைல். தகவல் தொடர்புக்காக இருந்த மொபைல், தற்போது வாழ்வில் ஒரு அங்கமாக மாறி விட்டது. அரசாங்கத்தின் பெரும்பாலான சேவைகளுக்கு நமது மொபைல் எண் கட்டாயத் தேவையாகி விட்டது. கற்றுக் கொள்வது, வேலை பார்ப்பது, சேவைகளைப் பெறுவது, பொழுதுபோக்குவது என பெரும்பாலான தேவைகள் அனைத்தையும் ஒரு போனின் மூலமே செய்யும் அளவுக்கு தொழிற்நுட்பம் வளர்ந்து விட்டது.
இதனால் போன் என்பது தொடர்பு கொள்வதற்கான கருவி என்பதில் இருந்து பல வழிகளில், வசதிகளில் மேம்பட்டதாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் மொபைலின் விலையும் அதிகரிக்கிறது. கணினியை விட அதிக விலைக்கு விற்கும் மொபைல்கள் சந்தையில் ஏராளம். ஆனாலும் கூட நாம் எதிர்பார்க்கும் பெரும்பாலான வசதிகளை உள்ளடக்கி, அதே சமயம் குறைந்த விலையிலும் நல்ல மொபைல்கள் வெளிவந்தபடிதான் இருக்கின்றன.
அப்படி ரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் சாம்சங் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு மொபைல்களையும், அவற்றின் வசதிகளையும் இப்போது பார்க்கலாம். இந்த மொபைல்களை வாங்க நினைப்பவர்களுக்கு வசதியாக ஒப்பிட்டுப் பார்த்து வாங்க அவை கிடைக்கும் இணையதளத்தின் லிங்க் மற்றும் அந்த தளத்தில் குறிப்பிட்ட மொபைலின் விலை ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
Samsung Galaxy F13
சாம்சங்கின் கேலக்ஸி F13 மொபைலில் சாம்சங்கின் Exynos 850 சிப்செட் உள்ளது. இதில் 50MP உட்பட மூன்று பின்பக்க கேமராக்களும், 8MP செல்ஃபி கேமராவும் உள்ளது. 6000mAh பேட்டரி, 4GB ரேம், 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ் ஆகியவை உள்ளன. இதன் மெமரியை 1TB வரை அதிகரித்துக் கொள்ளவும் முடியும்.
இதன் விலை: ரூ. 9,699
மேலும் விவரங்களுக்கு: https://www.91mobiles.com/samsung-galaxy-f13-price-in-india
Samsung Galaxy M04
சாம்சங்கின் கேலக்ஸி M04 மொபைலில் சாம்சங்கின் MediaTek Helio P35 சிப்செட் உள்ளது. இதில் 13MP உட்பட இரண்டு பின்பக்க கேமராக்களும், 5MP செல்ஃபி கேமராவும் உள்ளது. 5000mAh பேட்டரி, 4GB ரேம், 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ் ஆகியவை உள்ளன. இதன் மெமரியை 1TB வரை அதிகரித்துக் கொள்ளவும் முடியும்.
இதன் விலை : ரூ. 7,974
மேலும் விவரங்களுக்கு: https://www.91mobiles.com/samsung-galaxy-m04-price-in-india
இந்த மொபைலின் 128GB இண்டர்னல் மெமரி கொண்ட வேரியண்டும் ரூ.10,000க்குள் கிடைக்கிறது.
இதன் விலை: ரூ. 8,994
மேலும் விவரங்களுக்கு: https://www.91mobiles.com/samsung-galaxy-m04-128gb-price-in-india
Samsung Galaxy M13
சாம்சங்கின் கேலக்ஸி M13 மொபைலில் சாம்சங்கின் Exynos 850 சிப்செட் உள்ளது. இதில் 50MP உட்பட மூன்று பின்பக்க கேமராக்களும், 8MP செல்ஃபி கேமராவும் உள்ளது. 6000mAh பேட்டரி, 4GB ரேம், 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ் ஆகியவை உள்ளன. இதன் மெமரியை 1TB வரை அதிகரித்துக் கொள்ளவும் முடியும்.
இதன் விலை: ரூ. 9,699
மேலும் விவரங்களுக்கு: https://www.91mobiles.com/samsung-galaxy-m13-price-in-india
Samsung Galaxy F04
சாம்சங்கின் கேலக்ஸி F04 மொபைலில் சாம்சங்கின் MediaTek Helio P35 சிப்செட் உள்ளது. இதில் 13MP உட்பட இரண்டு பின்பக்க கேமராக்களும், 5MP செல்ஃபி கேமராவும் உள்ளது. 5000mAh பேட்டரி, 4GB ரேம், 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ் ஆகியவை உள்ளன. இதன் மெமரியை 1TB வரை அதிகரித்துக் கொள்ளவும் முடியும்.
இதன் விலை: ரூ. 7,499
மேலும் விவரங்களுக்கு: https://www.91mobiles.com/samsung-galaxy-f04-price-in-india
Samsung Galaxy A03 core
இந்த சாம்சங்கின் கேலக்ஸி A03 core மொபைலில் Unisoc SC9863A சிப்செட் உள்ளது. இதில் 8MP பின்பக்க கேமராவும், 5MP செல்ஃபி கேமராவும் உள்ளன. 5000mAh பேட்டரி, 2GB ரேம், 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ் ஆகியவை உள்ளன. இதன் மெமரியை 1TB வரை அதிகரித்துக் கொள்ளவும் முடியும்.
இதன் விலை: ரூ. 6,699
மேலும் விவரங்களுக்கு: https://www.91mobiles.com/samsung-galaxy-a03-core-price-in-india
Samsung Galaxy A03s
இந்த சாம்சங்கின் கேலக்ஸி A03s மொபைலில் MediaTek Helio P35 சிப்செட் உள்ளது. இதில் 13MP உட்பட மூன்று பின்பக்க கேமராக்களும், 5MP செல்ஃபி கேமராவும் உள்ளன. 5000mAh பேட்டரி, 3GB ரேம், 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ் ஆகியவை உள்ளன. இதன் மெமரியை 1TB வரை அதிகரித்துக் கொள்ளவும் முடியும்.
இதன் விலை: ரூ. 7,990
மேலும் விவரங்களுக்கு: https://www.91mobiles.com/samsung-galaxy-a03s-price-in-india
Samsung Galaxy A04e 64GB
இந்த சாம்சங்கின் கேலக்ஸி A04e மொபைலில் MediaTek Helio P35 சிப்செட் உள்ளது. இதில் 13MP உட்பட இரண்டு பின்பக்க கேமராக்களும், 5MP செல்ஃபி கேமராவும் உள்ளன. 5000mAh பேட்டரி, 3GB ரேம், 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ் ஆகியவை உள்ளன. இதன் மெமரியை 1TB வரை அதிகரித்துக் கொள்ளவும் முடியும்.
இதன் விலை ரூ. 9,999
மேலும் விவரங்களுக்கு: https://www.91mobiles.com/samsung-galaxy-a04e-64gb-price-in-india