Home News ரூ8,499க்கு 8ஜிபி ரேம் போன்! சாம்சங்ல அதிரடி!

ரூ8,499க்கு 8ஜிபி ரேம் போன்! சாம்சங்ல அதிரடி!

8ஜிபி ரேம் இருக்கும் ஒரு ஸ்மார்ட்போனின் விலை வெறும் ரூ.8,499 தான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால் நம்பித்தான் ஆக வெண்டும். ஏனென்றால் வெறும் ரூ.8,499 க்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒரு சாம்சங் ஸ்மார்ட்போன் 8GB RAM-ஐ கொண்டு இருக்கிறது.

அதுமட்டுமின்றி 5000mAh பேட்டரி, வாட்டர் டிராப் நாட்ச் டிசைன் உடனான 6.5 அங்குல டிஸ்பிளே, டூயல் ரியர் கேமரா செட்டப், பக்கவாட்டில் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் என.. விலையை மீறிய பல அம்சங்களும் இருக்கிறது! சாம்சங் நிறுவனத்தின் எம் சீரீஸின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி எம்04 (Samsung Galaxy M04) ஸ்மார்ட்போன் பட்ஜெட் மொபைல் பிரிவை ஒரு கலக்கு கலக்க போகிறது இதன் மூலம் உறுதியாகிறது.

அம்சங்களை பொறுத்தவரை, Samsung Galaxy M04 ஆனது HD+ ரெசல்யூஷன் உடனான 6.5 அங்குல IPS LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஹீலியோ பி35 (Helio P35) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 4GB ரேம் மற்றும் 4GB வரையிலான ரேம் பிளஸ் (விர்ச்சுவல் ரேம்) மற்றும் 128 GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜையும் கொண்டு இருக்கிறது. இதுதவிர சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள எஸ்டி கார்டு ஸ்லாட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் வழியாக 1டிபி வரை சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள முடியும்.

பேட்டரி & ஓஎஸ் அப்டேட்

ஆண்ட் ராய்டு 12 ஓஎஸ் (Android 12 OS) அடிப்படையிலான OneUI 4.1 உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் வரையிலான அப்டேட் கிடைக்கும் என்று சாம்சங் உறுதி அளித்துள்ளது. கேலக்ஸி M04 ஆனது வெறும் 10W சார்ஜிங்கை மட்டுமே ஆதரிக்கிறது என்றாலும் கூட, இது 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது ஒரு நாள் முழுவதுமான பயன்பாட்டிற்கு போதுமானதாக இருக்கும் என்பதில் சந்தகமே வேண்டாம்.

கேமராக்கள்

சாம்சங் கேலக்ஸி எம்04 மொபைலில் 13 மெகாபிக்சல் மெயின் கேமரா + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என டூயல் ரியர் கேமராக்கள் உள்ளன. இதனுடன் எல்இடி ஃபிளாஷ் ஒன்றும் உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, இது 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது டூயல் சிம், 4ஜி VoLTE, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவற்றுடன் வருகிறது.

எப்போ வருது?

சாம்சங் நிறுவனத்தின் Galaxy M04 ஸ்மார்ட்போன் ஆனது வருகிற டிசம்பர் 16 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த விற்பனை பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான் வழியாக நடக்கும். விலையைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனின் 4GB + 64GB ஆப்ஷன் ஆனது ரூ.8,499 க்குக் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன், சாம்சங் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாகவும் கிடைக்கும்!

புது 5ஜி போன்!

கேலக்ஸி எம்04 மாடலை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ14 (Galaxy A14) என்கிற புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், டைமன்சிட்டி 700 சிப்செட், 5000mA பேட்டரி, 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.