
இந்தியாவில் பண்டிகைக் காலம் துவங்கிவிட்டது என்பதால் ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே அதன் வருடாந்திர விற்பனை பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளன. பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே விற்பனையை நடத்துகிறது மற்றும் அமேசான் இந்தியாவில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை நடத்தவிருக்கிறது. இந்த இரண்டும் செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கும். இதற்கு மத்தியில் Samsung நிறுவனமும் ஒரு சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது.
Samsung NO MO’ FOMO சிறப்புப் பண்டிகை கால விற்பனை
சாம்சங் நிறுவனம் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டிலும் ஸ்மார்ட்போன்களுக்கு பலச் சலுகைகளை அறிவித்துள்ளது. இது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இருந்தாலும், நமக்குத் தெரியாத ஒரு புதிய விஷயத்தை சாம்சங் இப்போது வெளியிட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக Samsung NO MO’ FOMO என்ற சிறப்புப் பண்டிகை கால விற்பனையை அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு விற்பனையில் சாம்சங் Galaxy ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், லேப்டாப்கள், ஆக்சஸரீஸ்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் சாம்சங் டிஜிட்டல் சாதனங்கள் மீதும் ஏராளமான சலுகைகள் மற்றும் கேஷ்பேக் நன்மைகளை நிறுவனம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த விற்பனையானது Samsung.com, Samsung இன் பிரத்தியேக ஸ்டோர்கள் மற்றும் புதிய Samsung Shop ஆப்ஸ் மூலம் கிடைக்கும்.
இந்த Samsung NO MO’ FOMO Festival Sale விற்பனை இப்போது லைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விற்பனையின் போது, சாம்சங் ஷாப் ஆப் மூலம் தயாரிப்புகளை வாங்கும் பயனர்களுக்கு ரூ. 4,500 வரை கூடுதல் சலுகை கிடைக்கும். இந்த சிறப்பு விற்பனையின் போது, சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களின் மீது 57% வரை தள்ளுபடி கிடைக்கிறது. குறிப்பாக இதில், Galaxy Z சீரிஸ், Galaxy S சீரிஸ், Galaxy A சீரிஸ், Galaxy M மற்றும் F சீரிஸ் போன்கள் மீது இது அடங்கும்.
சாம்சங் கேலக்ஸி இசட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வாங்குபவர்களுக்கு ரூ. 5,199 மதிப்புள்ள வயர்லெஸ் சார்ஜர் டியோவை சாம்சங் நிறுவனம் வெறும் ரூ. 499 என்ற விலையில் வழங்குகிறது. இத்துடன், சாம்சங் கேலக்ஸி எஸ் சீரிஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் போன்களை வாங்குபவர்களுக்கு ஸ்மார்ட்போன் கவர்களின் மீது 50% தள்ளுபடியைப் பெறலாம். அதேபோல், தேர்ந்தெடுக்கப்பட்ட கேலக்ஸி டேப்லெட்டுகள், ஸ்மார்ட் வாட்ச்ள் மற்றும் ஆக்சஸரீஸ் மீது 55% வரை தள்ளுபடியை Samsung வழங்குகிறது.
இத்துடன் சாம்சங் Galaxy லேப்டாப்களின் மீதும் 30% வரை தள்ளுபடி கிடைக்கிறது. நீங்கள் ஒரு HDFC வங்கி அல்லது ICICI வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனர் என்றால், Galaxy ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட் வாட்ச்கள், லேப்டாப்கள் போன்ற தயாரிப்புகளின் மீது 15% வரை கூடுதல் கேஷ்பேக் நன்மையையும் பெறலாம். Samsung.com மற்றும் Samsung ஷாப் ஆப்ஸில் Buy More Save More சலுகையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள 550 தயாரிப்புகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவற்றை வாங்கினால் கூடுதல் 5% தள்ளுபடி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
புது ஸ்மார்ட் டிவிகளைத் தேடுபவர்களுக்கு, சாம்சங் தி ஃபிரேம், QLED மற்றும் UHD டிவிகளின் மீது 48% வரை தள்ளுபடி கிடைக்கிறது. Neo QLED, QLED, The Frame மற்றும் UHD TVகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில குறிப்பிட்ட மாடல்களை வாங்கினால், உங்களுக்கு ரூ.21,490 மதிப்புள்ள Galaxy A32 ஸ்மார்ட்போன் இலவசமாகக் கிடைக்கும். அதேபோல், Neo QLED டிவிகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,09,999 மதிப்புள்ள Samsung Galaxy S22 Ultra ஸ்மார்ட்போனைப் பெறலாம்.