Hot 30i என்ற மலிவு விலை ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறதா இன்ஃபினிக்ஸ்?

Highlights

  • Infinix நிறுவனம் அதன் மலிவு விலை ஸ்மார்ட்போனாக Hot 30i சீரிஸை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
  • இந்த ஸ்மார்ட்போன் தற்போது IMEI தரவுத்தளத்தில் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதன்மூலம் சில முக்கிய அம்சங்கள் அதன் வெளியீட்டிற்கு முன்னதாக கசிந்திருக்கிறது. இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி37 SoC மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஃபினிக்ஸ் ஹாட் 30 சீரிஸ் Infinix Hot 20 சீரிஸ் இன் வாரிசாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Hot 20 சீரிஸ் இல் Infinix Hot 20, Infinix Hot 20i மற்றும் Infinix Hot 20s உள்ளிட்டவைகள் அடங்கும். எனவே ஹாட் 30 சீரிஸ் இல் இன்ஃபினிக்ஸ் ஹாட் 30, ஹாட் 30ஐ மற்றும் ஹாட் 30எஸ் ஸ்மார்ட்போன்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தரவுத்தளத்தில்

PassionateGeekz அறிக்கையின்படி, IMEI தரவுத்தளத்தில் X669 என்ற மாடல் எண் உடன் இன்ஃபினிக்ஸ் புதிய ஸ்மார்ட்போன் காண்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாடல் இன்பினிக்ஸ் ஹாட் 30ஐ ஸ்மார்ட்போனாக இருக்கும் என நம்பப்படுகிறது. அதேபோல் நிறுவனம் Infinix Hot 30i ஸ்மார்ட்போனுக்கான பணியில் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

 

Infinix Hot 30i சிறப்பம்சங்கள்

Infinix Hot 30i ஸ்மார்ட்போனானது HD+ (720×1,612 பிக்சல்கள்) அடர்த்தி மற்றும் 500 nits உச்ச பிரகாசம் ஆதரவு கொண்ட 6.6 அங்குல IPS LCD டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். இது 4ஜிபி ரேம் ஆதரவைக் கொண்டிருக்கும். மெமரி விரிவாக்க ஆதரவுக்கு என இதில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் ஆதரவு இருக்கும் என கூறப்படுகிறது.

 

கேமரா

50 எம்பி பிரைமரி கேமரா Infinix Hot 30i ஸ்மார்ட்போன் ஆனது 50 எம்பி முதன்மை கேமரா மற்றும் 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா உடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கும் என கூறப்படுகிறது.

 

பேட்டரி

Infinix Hot 30i ஆனது 18W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் கூடிய 5,000mAh பேட்டரி இடம்பெறும். இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான இன்ஃபினிக்ஸ் ஸ்கின் ஓஎஸ் மூலம் இயங்கும் என கூறப்படுகிறது.

 

Infinix Zero 5G 2023 விலை

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு Infinix Zero 5G 2023 மற்றும் Infinix Zero 5G 2023 Turbo என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த Infinix Zero 5G 2023 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.17,999 எனவும் Infinix Zero 5G 2023 Turbo வேரியண்ட் இன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.19,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

 

விற்பனைத் தேதி

இந்த ஸ்மார்ட்போனானது கோரல் ஆரஞ்ச், பேர்லி ஒயிட் மற்றும் சப்மரைனர் பிளாக் ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கின்றன. Infinix Zero 5G ஸ்மார்ட்போன்கள் தற்போது பிளிப்கார்ட்டில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன்களானது பிப்ரவரி 11 முதல் விற்பனைக்கு வரும். புதிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை ஆனது சலுகை உடன் தொடங்குகிறது.

 

அம்சங்கள்

Zero 5G 2023 மற்றும் Infinix Zero 5G 2023 Turbo ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் டூயல் நானோ சிம் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இரண்டு போன்களும் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான XOS 12 மூலம் இயங்குகிறது. இதில் 6.78 அங்குல முழு HD+ டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 1,080×2,460 பிக்சல்கள் அடர்த்தி, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட், 60 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது.