இனி வாட்ஸப் ஸ்கிரீன் ஷாட் எடுத்தா.. உங்க அக்கவுண்ட் ப்ளாக் ஆகும்! என்ன விஷயம்னு விவரமா தெரிஞ்சுக்கலாம் வாங்க.
WhatsApp தனது சேவையில் புதிதாக வியூ ஒன்ஸ் (WhatsApp View Once Message) என்ற அம்சத்தை சில காலமாக வழங்கி வருகிறது.
ஒன்லி ஒன்ஸ் பாலிசி!
இந்த வாட்ஸ்அப் வியூ ஒன்ஸ் மெசேஜ் அம்சத்தின் (WhatsApp view once message feature) படி, நீங்கள் பிறருக்கு அனுப்பும் புகைப்படம் (WhatsApp view once photos) அல்லது வீடியோவை (WhatsApp view once videos) ஒரு முறை மட்டுமே பார்க்க அனுமதிக்கும் பாதுகாப்பு அம்சமாக இந்த வியூ ஒன்ஸ் மெசேஜ் அம்சம் செயல்படுகிறது. வாட்ஸ்அப் வியூ ஒன்ஸ் மெசேஜ்களை மீண்டும் ஒரு முறை பார்க்க நினைத்தால் கூட, வாட்ஸ் அப் உங்களை அனுமதிக்காது. இதுவே இந்த அம்சத்தின் முக்கிய சிறப்பாகும். இது snapchat போன்ற மிகவும் பிரபலமான ஆப்ஸ்களில் பெரிதும் பயன்படுத்தப்படும் ஒரு அம்சமாக இருக்கிறது. இருப்பினும், இதில் ஒரு சிறிய பாதுகாப்பு சிக்கல் இருக்கிறது.
இதற்கு முன் வரை whatsapp-ல் அனுப்பப்படும் வியூ ஒன்ஸ் மெசேஜ்களை பெறுநர்கள் ஒரு முறை மட்டுமே பார்க்க முடிந்தது. இருப்பினும், இந்த வியூ ஒன்ஸ் மெசேஜ்களை பெரும் நபர்களால் இதில் உள்ள தகவல்கள் ஸ்க்ரீன் ஷாட் (WhatsApp screenshot) எடுக்க வாட்ஸ்அப் அனுமதித்திருந்தது. சில நேரங்களில் சில பயனர்கள் வியூ ஒன்ஸ் மெசேஜ் தகவலை ஸ்கிரீன் ரெக்கார்ட் (WhatsApp screen record) செய்தும் பதிவு செய்து கொண்டனர். இது பாதுகாப்பு சிக்கலை மோசமாக்கியது!
இந்த சிக்கலைச் சரி செய்வதற்காக வாட்ஸப் நிறுவனம் இப்போது புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது இதன்படி, இனி எந்த WhatsApp பயனர்களும் வியு ஒன்ஸ் மெசேஜ்களை – ஸ்கிரீன்ஷாட் எடுக்கவோ அல்லது ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்யவோ முடியாது என்று அதிரடியாக அறிவித்துள்ளது. இதை ஒரு முக்கியமான விதியாகவே வாட்ஸ்அப் இப்போது அறிவித்துவிட்டது.
விதியை மீறினால்?
இந்த விதியை மீறி செய்யும் பட்சத்தில், அந்த வாட்ஸ்அப் பயனருக்கு நிறுவனம் நேரடியாக எச்சரிக்கை செய்தியை (Warning message notification) அனுப்பும். இந்த புதிய வாட்ஸ்அப் அப்டேட் (WhatsApp new update) இப்பொழுது அனைவருக்கும் வெளியிடப்பட்டுள்ளது. இனி உங்கள் வாட்ஸ் அப்பில் உங்களுக்கு அனுப்பப்படும் வியு ஒன்ஸ் மெசேஜ்களை நீங்கள் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க கூடாது; மீறி எடுக்கும் பட்சத்தில் வாட்ஸ் அப் உங்களுக்கு கிரே நிற பாப் அப் எச்சரிக்கை மெசேஜை (WhatsApp pop-up message) அனுப்பும்.
இதில் நீங்கள் வாட்ஸ்அப்பில் வழங்கப்படும் பிரைவசி விதியை மீறி விட்டீர்கள் என்று எச்சரிக்கப்படுவீர்கள். இப்படி வாட்ஸ்அப்பின் பிரைவசி விதியை மீறுபவர்கள் மீது வாட்ஸ்அப் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று முன்பே அறிவித்திருந்தது. அதன் படி, இப்போது இந்த அம்சத்தை நீங்கள் தவறாக பயன்படுத்தினால் உங்கள் whatsapp கணக்கு முற்றிலுமாக முடக்கப்படும். அதாவது, நேரடியாக வாட்ஸப்பே உங்கள் வாட்ஸ்அப் கணக்கை பிளாக் (WhatsApp account blocked) செய்து விடும். எனவே இனிமேல் ஸ்க்ரீன் ஷாட் எடுக்காமல் உஷாராக இருங்கள்!
எதுவும் தெரியாது
Whatsapp நிறுவனம் உங்கள் whatsapp கணக்கை பிளாக் செய்வது மட்டும் இன்றி, நீங்கள் எடுத்த ஸ்கிரீன்ஷாட்டையும் முடக்கம் செய்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய அம்சம் நீங்கள் எடுக்கும் ஸ்கிரீன்ஷாட்டில் எதுவும் பதிவாகாதபடி பார்த்துக்கொள்கிறது.
அதாவது நீங்கள் விதியை மீறி ஸ்கிரீன்ஷாட் எடுத்தும் பயனில்லை. அந்த மெசேஜ் வெறும் பிளாங்கான மெசேஜாக மட்டுமே காண்பிக்கப்படும்.
வாட்ஸ்அப் இனி பிரைவசி கண்ட்ரோலை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றப் போவதாகத் தெரிவித்துள்ளது.






