இதுவரை இல்லாத அளவிற்கு, புதிய Samsung Galaxy M53 5G ஸ்மார்ட்போன் மாடல் மீது நம்ப முடியாத சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், ரூ. 32,999 மதிப்புள்ள போனை வெறும் ரூ.14,949 விலைக்கு வாங்க முடியும்.
அதிரடி விலை குறைப்பு!
Samsung Galaxy M53 5G இப்போது அமேசான் வலைத்தளத்தில் புதிய விலை குறைப்பைப் பெற்றுள்ளது. புதிய ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் வாங்க நீங்கள் பிளான் செய்து வருகிறீர்கள் என்றால், யோசிக்காமல் கண்களை மூடிக்கொண்டு தாராளமாக இந்த Samsung Galaxy M53 5G மாடலை தேர்வு செய்யலாம். இது டாப் செஜ்மெண்ட் 5ஜி ஸ்மார்ட்போன் தயாரிப்பு தான் என்றாலும் கூட, இப்போது இதை நீங்கள் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம்.
5ஜி இணக்கத்துடன் இப்போது இந்தியாவில் வாங்கக் கிடைக்கும் பெஸ்டான 5ஜி ஸ்மார்ட்போன் மாடலாக இந்த Samsung Galaxy M53 5G திகழ்கிறது. அதுவும் இது ஒரு சாம்சங் தயாரிப்பு என்பதனால், விற்பனைக்கு பிந்தைய சேவையும் இதில் நன்றாக இருக்கும்.
எவ்வளவு சலுகை?
Samsung Galaxy M53 5G ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 32,999 ஆகும். இது இப்போது சலுகையுடன் வெறும் ரூ. 28,999 என்ற விலையில் கிடைக்கிறது. இதன் மூலம் இந்த சலுகையால் உங்களுக்கு ரூ. 4,000 தள்ளுபடி செய்யப்படுகிறது. இது உங்களுக்கு பொதுவாக கிடைக்கும் சலுகையாகும்.
அமேசான் சலுகைகளை பொறுத்தவரை, உங்கள் எப்போதும் கிடைக்கும் பொதுவான சலுகைகளுடன் கூடுதல் சலுகையாக சில வங்கிகள் மூலம் கிடைக்கும் சலுகை மற்றும் எக்ஸ்சேஞ் சலுகைகளைப் பயன்படுத்திக்கொள்ள நிறுவனம் அனுமதிக்கிறது.
இந்த தயாரிப்பு மட்டுமல்ல, எந்த எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை நீங்கள் வாங்கினாலும், அதன் மீது எக்ஸ்சேஞ் சலுகை கிடைக்கிறதா என்று கவனிக்க மறக்காதீர்கள். ஒரு புதிய சாதனத்தை, உங்களுடைய பழைய சாதனம் கொண்டு எக்ஸ்சேஞ் செய்து வாங்கும் போது அதன் விலையில் பாதிக்கு-பாதி குறைய அதிக வாய்ப்புள்ளது என்பதையும் மறக்காதீர்கள்.
சிறப்பம்சங்கள்
இந்த போனில் MediaTek டைமென்சிட்டி 900 சிப்செட் நிறுவப்பட்டுள்ளது. மேலும், 120Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட், அமோலெட் டிஸ்ப்ளே, 108MP கேமரா போன்ற சிறப்பம்சங்கள் உள்ளது.
சாம்சங் Galaxy M53 5G போனில் 6.7″ அங்குல முழுஅளவு HD பிளஸ் AMOLED திரை உள்ளது. மேலும் இதில் 120Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் ஆதரவு இருக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பும் இந்த டிஸ்ப்ளேக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான One UI 4.1 ஸ்கின் இதில் நிறுவப்பட்டுள்ளது. இந்த போனில் 6GB, 8GB என இரண்டு ரேம் தேர்வுகளும் 128GB ஸ்டோரேஜ் மெமரி தேர்வும் வழங்கப்பட்டுள்ளது.
Samsung Galaxy M53 5G ஸ்மார்ட்போன் மீது இப்போது ரூ. 22,000 எக்ஸ்சேஞ் சலுகை கிடைக்கிறது. இந்த எக்ஸ்சேஞ் சலுகையை நீங்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டால், இந்த போனை வெறும் ரூ. 14,949 என்ற விலையில் வாங்க முடியும் என்று அமேசான் குறிப்பிடுகிறது. இந்த சலுகை குறைந்த யூனிட்களுக்கு மட்டுமே கிடைக்கும்.






