5G network https://www.91mobiles.com/tamil Fri, 10 Mar 2023 03:29:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 5G – புரளியும் உண்மையும்! https://www.91mobiles.com/tamil/lies-about-5g-technology/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=lies-about-5g-technology Thu, 01 Dec 2022 08:45:05 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4026 இந்தியாவில் 5ஜி சேவைகள் விரிவடையத் தொடங்கியதில் இருந்து 5ஜி தொடர்பாக பலவகையான பொய்களும், கட்டுக்கதைகளும் கிளிப்பி விடப்பட்டு, மக்களை குழப்பம் அடைய செய்துள்ளன! அந்த பொய்களும், அதன் பின்னணியில் உள்ள உண்மைகளும் இதோ.. 5ஜி நெட்வொர்க் உடல்நல கேடுகளை ஏற்படுத்தும்! 4ஜி சேவைகள் அறிமுகமான போதும் கூட இதே பீதியைத் தான் கிளப்பினார்கள். அதே பீதி தற்போதும் கிளம்பி உள்ளது. அதாவது 5ஜி நெட்வொர்க்குகள் ஆனது உடல்நலக் கேடுகளை ஏற்படுத்தும் என்கிற தவறான கருத்து நிலவுகிறது. இது […]

The post 5G – புரளியும் உண்மையும்! first appeared on .

]]>

இந்தியாவில் 5ஜி சேவைகள் விரிவடையத் தொடங்கியதில் இருந்து 5ஜி தொடர்பாக பலவகையான பொய்களும், கட்டுக்கதைகளும் கிளிப்பி விடப்பட்டு, மக்களை குழப்பம் அடைய செய்துள்ளன! அந்த பொய்களும், அதன் பின்னணியில் உள்ள உண்மைகளும் இதோ..

5ஜி நெட்வொர்க் உடல்நல கேடுகளை ஏற்படுத்தும்!

4ஜி சேவைகள் அறிமுகமான போதும் கூட இதே பீதியைத் தான் கிளப்பினார்கள். அதே பீதி தற்போதும் கிளம்பி உள்ளது. அதாவது 5ஜி நெட்வொர்க்குகள் ஆனது உடல்நலக் கேடுகளை ஏற்படுத்தும் என்கிற தவறான கருத்து நிலவுகிறது. இது ஒரு கட்டுக்கதை என்று நாங்கள் சொல்லவில்லை, நார்வே மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் உட்பட உலகெங்கிலும் உள்ள பல சுகாதார அதிகாரிகளே கூறுகிறார்கள்.

5ஜி – உயிர்களை பாதிக்கும்

5ஜி-யின் எக்ஸ்போஷர் வரம்பானது (Exposure threshold) ஆண்டெனா இன்ஸ்டாலேஷனின் (Antenna installation) தேவையான தரத்திற்கு கீழே தான் உள்ளது, எனவே, 5ஜி சிக்னல்களின் ரேடியோ அலைகள் (Radio waves of 5G signals) எந்த உயிரையும் பாதிக்கப் போவதில்லை. அதுமட்டுமின்றி ரேடியோ அலைகள் மின்காந்த நிறமாலையின் அயனியாக்கம் அல்லாத மண்டலத்தில் (Non-ionizing zone of the electromagnetic spectrum) உள்ளன, ஆகையால் எந்தவொரு சேதத்தையும் செய்ய போதுமான ஆற்றலும் அவைகளிடம் இருக்காது!

4ஜி-க்கும் 5ஜி-க்கும் பெரிய வித்தியாசம் இல்லை!

தவறு! 4G-க்கும் 5G-க்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. லேடன்சி (Latency), பதிவிறக்க வேகம் (Download Speed), பேஸ் ஸ்டேஷன்ஸ் (Base Stations) மற்றும் செல் டென்சிட்டி (Cell Density) போன்றவைகளில் 5ஜி – ஒரு படி அல்ல பல படிகள் முன்னோக்கி இருக்கும். 5ஜி-யின் கீழ் வினாடிக்கு 20 ஜிபி வரையிலான ஸ்பீட்-ஐ கூட அணுகலாம்; ஹை ரெசல்யூஷன் ஸ்ட்ரீமிங் மற்றும் எச்டி வீடியோக்களை பார்க்கும் அனுபவம் புதியதொரு உச்சத்தை எட்டும். இப்படியாக 5G-யின் கீழ் வரம்பற்ற சாத்தியக்கூறுகளுடன் நீங்கள் பலவற்றையும் செய்ய முடியும்!

மொபைல் போன்களுக்கு மட்டுமே 5ஜி!

பெரும்பாலான மக்கள், 5G என்பது மொபைல் போன்களுக்கு மட்டுமான ஒரு தொழில்நுட்பம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல. 5ஜி என்பது இன்டர்நெட் செயல்படும் விதத்தை மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு தொழில்நுட்பம் ஆகும். இது மொபைல் போன்களில் மட்டுமின்றி கேமிங்கில் இருந்து வணிகங்கள் வரை அனைத்திலுமே ஒரு கடுமையான மாற்றத்தை கொண்டு வரப்போகிறது. எனவே 5ஜி-யின் சக்தியை ஒருபோதும் குறைத்து மதிப்பிட வேண்டாம்!

5ஜி வந்ததும் Wi-Fi காணாமல் போய் விடும்!

5ஜி நெட்வொர்க் ஆனது வைஃபை-க்கான மாற்று என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் – இந்த இரண்டுமே வெவ்வேறு தொழில்நுட்பங்கள் ஆகும் மற்றும் வெவ்வேறு வகையான தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. 5G ஆனது செல்லுலார் கனெக்டிவிட்டியை வழங்குகிறது, அதேசமயம் Wi-Fi ஆனது வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்குள் இருக்கும் டிவைஸ்களுக்கான கனெக்டிவிட்டியை வழங்குகிறது. ஆக 5ஜி தொழில்நுட்பம் ஆனது ஒருபோதும் Wi-Fi தொழில்நுட்பத்தை மாற்ற போவதில்லை!

5ஜி என்பது வெறும் தொழில்நுட்பம் மட்டுமல்ல, அது ஒரு முன்னேற்றம். அது ஒரு மைல்கல். இது நம்முடைய இண்டர்நெட் மற்றும் மொபைல் நெட்வொர்க்கை மட்டுமின்றி நம்மையும் மேம்படுத்தப்போகும் ஒரு தொழில்நுட்ப வரம் ஆகும்! அதனால் தயக்கம் இன்றி 5ஜியை அணுகலாம்.

The post 5G – புரளியும் உண்மையும்! first appeared on .

]]>
ஜியோ 5ஜி சேவையை பயன்படுத்துவது எப்படி? https://www.91mobiles.com/tamil/jio-welcome-offer-available-for-selected-users-how-to-activate-jio-5g-for-free/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=jio-welcome-offer-available-for-selected-users-how-to-activate-jio-5g-for-free Thu, 24 Nov 2022 10:45:15 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3878 Jio 5G தற்போது டெல்லி NCR, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 6 இந்திய நகரங்களில் கிடைக்கிறது. ஜியோ 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகள் வேகமாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. டிசம்பர் 2023க்குள் அனைத்து இந்திய நகரங்களிலும் ஜியோ 5ஜி சேவை கிடைக்க இருக்கிறது. ஆரம்பக்கட்டமாக 5ஜி சேவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதை எப்படி பெறுவது என்பது குறித்து பார்க்கலாம். ஜியோ ட்ரூ 5ஜி ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவையானது டெல்லி – என்சிஆர், மும்பை, கொல்கத்தா, வாரணாசி, […]

The post ஜியோ 5ஜி சேவையை பயன்படுத்துவது எப்படி? first appeared on .

]]>

Jio 5G தற்போது டெல்லி NCR, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 6 இந்திய நகரங்களில் கிடைக்கிறது. ஜியோ 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகள் வேகமாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. டிசம்பர் 2023க்குள் அனைத்து இந்திய நகரங்களிலும் ஜியோ 5ஜி சேவை கிடைக்க இருக்கிறது. ஆரம்பக்கட்டமாக 5ஜி சேவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதை எப்படி பெறுவது என்பது குறித்து பார்க்கலாம்.

ஜியோ ட்ரூ 5ஜி

ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவையானது டெல்லி – என்சிஆர், மும்பை, கொல்கத்தா, வாரணாசி, சென்னை, பெங்களூரு, நாத்வாரா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் கிடைக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் பல முக்கிய நகரங்களில் 5ஜி சேவை அறிமுகமாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜியோ 5ஜி சேவைகளானது ஜியோ ட்ரூ 5ஜி என அழைக்கப்படுகிறது

ஜியோ வெல்கம் ஆஃபர்

Jio 5ஜி சேவையானது பீட்டா பதிப்பின் கீழ் கிடைப்பதால் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டும் ஜியோ 5ஜி கிடைக்கிறது. ஜியோ 5ஜி கிடைக்கும் பகுதிகளில் உள்ள பயனர்கள் ஜியோ வெல்கம் ஆஃபர் மூலம் 5ஜி சேவைகளை இலவசமாக பெறலாம். ஜியோ 5ஜி ஜியோ 5ஜி ஜியோ 5ஜி நெட்வொர்க் இணைப்பை இலவசமாக பெற தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு வெல்கம் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபரை அனுபவிக்க அதற்கு சப்போர்ட் செய்யும் மொபைல் வைத்திருக்க வேண்டும் என்பது அவசியம். அதேபோல் ப்ரீபெய்ட் அல்லது போஸ்ட்பெய்ட் பயனர்கள் என யாராக இருந்தாலும் ரூ.239 அல்லது அதற்கு மேல் உள்ள ஜியோ ரீசார்ஜ் திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதும் அவசியம்.

ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபர் ஆனது டெல்லி – என்சிஆர், மும்பை, கொல்கத்தா, வாரணாசி, சென்னை, பெங்களூரு, நாத்வாரா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் கிடைக்கிறது. இந்த பகுதிகளில் உள்ளவர்கள் மட்டுமே 5ஜி சேவையை அனுபவிக்க முடியும். சிறப்பு 5ஜி சலுகையின் கீழ் இந்த பகுதியில் உள்ள ஜியோ வாடிக்கையாளர்கள் 1ஜிபிபிஎஸ் வேகத்தில் வரம்பற்ற 5ஜி இணையத்தை அனுபவிக்கலாம்.

பயன்படுத்துவது எப்படி?

ஜியோ வெல்கம் ஆஃபரின் கீழ் 5ஜி இணைப்பு நகரங்களில் உள்ள அனைவராலும் 5ஜி இணைப்பை பெற முடியாது. ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் கீழ் இருக்கும் ரூ.239க்கு மேல் உள்ள திட்டங்களை தேர்ந்தெடுத்து ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த திட்டங்களில் ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் இலவச 5ஜி சேவையை அனுபவிக்கலாம்.

5ஜி போன் என்பது கட்டாயம்

அதேபோல் 5ஜி நெட்வொர்க் உடன் இணைக்க புதிய 5ஜி சிம் வாங்க வேண்டிய தேவையில்லை. பழைய அதாவது தற்போது வைத்திருக்கும் சிம் கார்ட் மூலமாகவே 5ஜி இணைப்பை பெறலாம். ஜியோ 5ஜி சேவையை பெற பயனர்கள் தங்களது போனில் ரூ.239க்கு மேல் உள்ள திட்டங்களை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். 5ஜி போன் என்பது அதைவிட கட்டாயம். அதேபோல் நீங்கள் 5ஜி கிடைக்கும் பகுதியில் இருக்க வேண்டும். ஜியோ 5ஜி ஆதரவு ஸ்மார்ட்போன்கள் ஜியோ 5ஜி ஆதரவு ஸ்மார்ட்போன்கள் சரி, மேலே குறிப்பிட்ட அனைத்தும் இருக்கிறது 5ஜி பயன்படுத்தலாமா என்றால் அது முடியாது. 5ஜி ஆக்டிவேட் போன் வேண்டும் என்பது கட்டாயம். ஜியோ 5ஜி ஆனது n28, n78, n258 பேண்டுகளில் கிடைக்கும்.

அப்டேட் தேவை

ஜியோ 5ஜி ஆக்டிவேட் செய்ய வேறொன்றும் பெரிய விஷயம் தேவையில்லை அந்தந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 5ஜி சேவைக்கான அப்டேட்டை வெளியிட வேண்டும். சாம்சங், ஒப்போ, ஒன்பிளஸ், நத்திங், விவோ மற்றும் ரியல்மி உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் ஜியோ 5ஜிக்கான அப்டேட்டை வெளியிடத் தொடங்கிவிட்டது.

The post ஜியோ 5ஜி சேவையை பயன்படுத்துவது எப்படி? first appeared on .

]]>
இனி 5G போன் மட்டும்தான் தயாரிக்க வேண்டும் – அரசு உத்தரவு https://www.91mobiles.com/tamil/government-orders-phone-manufactures-to-provide-5g-phones-and-stop-providing-3g-and-4g-phones-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=government-orders-phone-manufactures-to-provide-5g-phones-and-stop-providing-3g-and-4g-phones-india Fri, 14 Oct 2022 09:29:20 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3035 இந்தியாவில் 5G அறிமுகம் செய்யப்பட்டு சில வாரங்களே ஆன நிலையில் தொலைத்தொடர்புத் துறை (DoT) மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) அனைத்து போன் நிறுவனங்களையும் சந்தித்து ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளது. அதில் தங்களது ஸ்மார்ட் போன் தயாரிப்புகளை முழுமையாக 5ஜியாக மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 3 மாத கெடு அனைத்து ஸ்மார்ட்போன்களையும் 5ஜி ஸ்மார்ட்போனாக (5G Smartphone) மாற்ற மொபைல் போன் தயாரிப்பாளர்களுக்கு 3 மாதங்கள் மட்டுமே கெடு கொடுத்துள்ளதாகவும் […]

The post இனி 5G போன் மட்டும்தான் தயாரிக்க வேண்டும் – அரசு உத்தரவு first appeared on .

]]>

இந்தியாவில் 5G அறிமுகம் செய்யப்பட்டு சில வாரங்களே ஆன நிலையில் தொலைத்தொடர்புத் துறை (DoT) மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) அனைத்து போன் நிறுவனங்களையும் சந்தித்து ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளது. அதில் தங்களது ஸ்மார்ட் போன் தயாரிப்புகளை முழுமையாக 5ஜியாக மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

3 மாத கெடு

அனைத்து ஸ்மார்ட்போன்களையும் 5ஜி ஸ்மார்ட்போனாக (5G Smartphone) மாற்ற மொபைல் போன் தயாரிப்பாளர்களுக்கு 3 மாதங்கள் மட்டுமே கெடு கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி, இனி இந்தியாவில் வெளிவரும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் கண்டிப்பாக 5ஜி இணக்கம் (5G Connectivity) கொண்டு இருக்க வேண்டும் என்பதில் அரசு தெளிவாக இருக்கிறது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது.

ANI அறிக்கையின் படி, இந்தியாவில் கிட்டத்தட்ட 750 மில்லியன் மக்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள். இதில் சுமார் 350 மில்லியன் பயனர்கள் 3ஜி அல்லது 4ஜி போன்களை (3G/4G Phones) பயன்படுத்துகின்றனர் என்று கூறப்படுகிறது. அதேபோல், இந்தியாவில் இதுவரை தோராயமாக சுமார் 100 மில்லியன் பயனர்கள் மட்டுமே புதிய ஜெனெரேஷன் 5ஜி போன்களை பயன்படுத்துகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

ரூ10,000க்கு மேல் 5ஜி

இந்தியாவில் 5ஜி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, மக்களை அடுத்த தலைமுறை நெட்வொர்க்கிற்கு (Next Generation Network) முன் நடத்தி செல்ல, இனி ரூ. 10,000 அல்லது அதற்கு மேல் உள்ள விலையில் விற்கப்படும் ஸ்மார்ட்போன்களில் 3ஜி/4ஜியை தவிர்த்துவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இனி 5ஜி வசதியை மட்டுமெ வைத்து ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் புது போன்களை தயாரிக்க வேண்டும் என்ற இந்திய அரசு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கு (Smartphone Manufacturers) ஆணையிட்டுள்ளது.

4ஜி நெட்வொர்க் நிலை?

பெரும்பாலும், இனி தயாரிக்கப்படும் ஸ்மார்ட்போன்களில் 5ஜி சேவையை நாம் கட்டாயமாக எதிர்பார்க்கலாம். அதேபோல், 5ஜி போன்களில் 4ஜி சேவை எடுக்கும் என்பதனால், 4ஜி நெட்வொர்க்கில் இயங்கிக் கொண்டிருக்கும் பொதுமக்கள் கவலைகொள்ள வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) ஆகிய இரு நிறுவனங்களுமே சில இடங்களில் தங்களது 5ஜி சேவையைச் செயல்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

5ஜி சேவை

ஜியோ (Jio True 5G) நிறுவனம் 4 நகரங்களிலும், ஏர்டெல் (Airtel 5G Plus) நிறுவனம் 8 நகரங்களிலும் தங்களது 5ஜி சேவையை ரோல் அவுட் செய்து வருகின்றன. மற்ற நகரங்கள் விரைவில் 5ஜி சேவையை பெரும் என்றும் அவர்கள் உறுதி கூறி வருகின்றனர். ஜியோ நிறுவனம் தனது 5ஜி சேவையை இந்தியா முழுவதும் 2023 இறுதிக்குள் கொடுத்துவிடுவதாகவும், அதேபோல் ஏரிடெல் நிறுவனமும் தனது 5ஜி சேவையை இந்தியா முழுவதும் மார்ச் 2024க்குள் கொடுத்துவிடுவதாகவும் உறுதி அளித்துள்ளன.

இந்நிலையில், குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் 5ஜி ஸ்மார்ட்போன் பயனர்கள் சிலருக்கு இவ்விரு நிறுவனங்களின் அதிவேக 5ஜி சேவை வழங்கி வருகின்றன. ஆனாலும், ஒரு சிலருக்கு எதிர்பார்த்த 5ஜி இன்டர்நெட் ஸ்பீடு (5G Internet Speed) கிடைக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்த சிக்கலுக்கான முக்கிய காரணம், இந்த இரண்டு நிறுவனங்களின் 5ஜி சேவைகளும் ஒரு குறிப்பிட்ட மூன்று பேண்டுகளில் மட்டுமே இயங்குகிறது.

n28, n78 மற்றும் n258 ஆகியவற்றில் இருப்பது தான் சிக்கலாக இருக்கிறது. எனவே நீங்கள் பயன்படுத்தும் 5ஜி ஸ்மார்ட்போன் இந்த மூன்று பேண்டுகளை (5G Bands) ஏற்கும் வசதி கொண்டிருந்தால் மட்டுமே முழுமையான 5ஜி வேகத்தை உங்களால் அனுபவிக்க முடியும். இந்த சிக்கலைச் சரி செய்ய, டெலிகாம் நிறுவனங்கள் OEM-களை விரைந்து செயல்பட்டு, உரிய சாப்ட்வேர் அப்டேட்டை (5G Software Update) வெளியிட வலியுறுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

OEMகளுக்கான உத்தரவு

தொலைத்தொடர்புத் துறை மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் மற்றும் டெலிகாம் ஆப்பரேட்டர்களின் ஃபோட்டா (FOTA) மென்பொருள் தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. மேலே கூறப்பட்டது போல சில 5ஜி போன்கள் 5ஜி சேவை (5G Service) மூலம் இயங்க முடியாமல் இருப்பதால் OEMகளுக்கு அது தொடர்பான அப்டேட்களைக் கொண்டு வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post இனி 5G போன் மட்டும்தான் தயாரிக்க வேண்டும் – அரசு உத்தரவு first appeared on .

]]>
2023 வரை 5G போன் வாங்கத் தேவையில்லை! https://www.91mobiles.com/tamil/3-reasons-why-you-don-t-need-a-5g-smartphone-until-2023/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=3-reasons-why-you-don-t-need-a-5g-smartphone-until-2023 Fri, 14 Oct 2022 06:13:43 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3025 வருகிற 2023 ஆம் ஆண்டு வரை, நீங்கள் 5ஜி ஸ்மார்ட்போனை (5G Smartphone) வாங்க வேண்டிய அவசியமே இல்லை என்பதற்கு ஒரு காரணம் அல்ல.. மொத்தம் மூன்று காரணங்கள் உள்ளன! அதென்ன காரணங்கள்.. பார்க்கலாம். இந்தியாவில் 5ஜி சேவைகள் அறிமுகமாகி விட்டது என்கிற காரணத்தினாலும், எல்லாருமே 5ஜி போன்களை வாங்குகிறார்கள், அதனால் நானும் ஒன்று வாங்க போகிறேன் என்பது தான் உங்கள் காரணம் என்றால் கொஞ்சம் பொறுங்கள்! உண்மை என்னவென்றால், வருகிற 2023 ஆம் ஆண்டு வரை […]

The post 2023 வரை 5G போன் வாங்கத் தேவையில்லை! first appeared on .

]]>

வருகிற 2023 ஆம் ஆண்டு வரை, நீங்கள் 5ஜி ஸ்மார்ட்போனை (5G Smartphone) வாங்க வேண்டிய அவசியமே இல்லை என்பதற்கு ஒரு காரணம் அல்ல.. மொத்தம் மூன்று காரணங்கள் உள்ளன! அதென்ன காரணங்கள்.. பார்க்கலாம்.

இந்தியாவில் 5ஜி சேவைகள் அறிமுகமாகி விட்டது என்கிற காரணத்தினாலும், எல்லாருமே 5ஜி போன்களை வாங்குகிறார்கள், அதனால் நானும் ஒன்று வாங்க போகிறேன் என்பது தான் உங்கள் காரணம் என்றால் கொஞ்சம் பொறுங்கள்! உண்மை என்னவென்றால், வருகிற 2023 ஆம் ஆண்டு வரை 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

காரணம் 01: கவரேஜ்

ஒரு புதிய 5ஜி போனிற்காக குறைந்த பட்சம் ரூ.15,000-ஐ செலவழிக்கும் முன் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் – 5ஜி கவரேஜ்! ஏனென்றால், 5ஜி நெட்வொர்க் ஆனது தற்போது இந்தியாவில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது. அது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் கிடைக்க, இன்னும் ஓரிரு வருடங்கள் ஆகலாம்!
நீங்கள் வசிக்கும் பகுதி ஆனது டயர் I அல்லது டயர் II நகரமாக இல்லாவிட்டால், நீங்கள் 5ஜி கவரேஜை பெறுவதற்குள், நீங்கள் வாங்கிய புதிய 5ஜி போன் ஆனது, பழையதாகி விடும்; அது அப்டேட் சுழற்சிகளுக்கு அப்பாற்பட்ட போனாகக் கூட மாறலாம். எனவே ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு முன், நீங்கள் வசிக்கும் பகுதியில் அல்லது வேலை செய்யும் பகுதியில் 5ஜி சேவை எப்போது கிடைக்கும் என்று விசாரியுங்கள். அடுத்த சில மாதங்களில் வரும் என்றால் வாங்குங்கள். இல்லை என்றால் வேண்டாம்!

காரணம் 02: விலை

விலை பொதுவாகவே 5G போன்களின் விலை நிர்ணயம் அதிகமாகத்தான் இருக்கும். தற்போதைக்கு நீங்கள் ரூ.15,000-ஐ எடுத்து வைத்தால் தான் ஒரு நல்ல 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க முடியும். ஆனால் நீங்கள் உற்று கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால்.. இங்கே 5ஜி போன்களின் விலை மட்டுமே உயர்வாக இருக்கப்போவதில்லை. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் 5ஜி சேவைகள் அறிமுகமானதும், 5ஜி திட்டங்களின் உண்மையான விலை நிர்ணயங்கள் அறிவிக்கப்படும். அப்போது அதிவேக 5ஜி டேட்டாவுக்கான கட்டணங்கள் கண்டிப்பாக அதிகமாகத் தான் இருக்கும். 5ஜி நெட்வொர்க், 5ஜி போன்கள் மற்றும் 5ஜி திட்டங்கள் என எல்லாமே உங்களுக்கும் உங்கள் பட்ஜெட்டிற்கும் கட்டுப்படி ஆகும்வரை தொடர்ந்து 4ஜி நெட்வொர்க்கையும், 4ஜி போன்களையும் பயன்படுத்தவும். ஏனென்றால், 5ஜி அறிமுகத்திற்கு பின்னால், 4ஜி நெட்வொர்க்கும் தொடர்ந்து கிடைக்கும்.

காரணம் 03: செயல்திறன்

5ஜி வந்ததும் 4ஜி-ஐ குறைத்து மதிப்பிட கூடாது. 4ஜி ஸ்மார்ட்போன்கள் ஆனது எதிர்காலத்திற்கு ஏற்ற விருப்பமாக இல்லாவிட்டாலும் கூட, அது இன்னும் சக்திவாய்ந்ததாகவே உள்ளன. அதாவது ஒரே விலையில் கிடைக்கும் ஒரு 5G போனையும், 4ஜி ஸ்மார்ட்போனையும் ஒப்பிட்டு பார்த்தால்.. செயல்திறனில் பெரிய வித்தியாசங்கள் இருக்காது! உதாரணமாக.. போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ. 20,000 க்கு குறைவான விலையில் வாங்க கிடைக்கும் ஒரு “பழைய” 4G போன் ஆகும், இது Snapdragon 860 உடன் வருகிறது. இந்த சிப்செட், 5ஜி கனெக்டிவிட்டியை வழங்கக்கூடிய புதிய 5ஜி சிப்பை விட மிகவும் சக்திவாய்ந்த சிப்செட் ஆகும். ஆக உங்களின் கவனம் 5ஜி மீது அல்ல.. பெர்ஃபார்மென்ஸ் மீது மட்டுமே உள்ளதென்றால் 5ஜி போன் வாங்குவதை தள்ளிப் போடுவது நல்லது.

The post 2023 வரை 5G போன் வாங்கத் தேவையில்லை! first appeared on .

]]>
ஐபோன்களில் 5ஜி வசதி! அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டது ஆப்பிள் https://www.91mobiles.com/tamil/samsung-and-iphone-to-roll-out-5g-update-for-its-devices/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=samsung-and-iphone-to-roll-out-5g-update-for-its-devices Thu, 13 Oct 2022 04:22:27 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2977 ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் 5ஜி வசதியை செயல்படுத்துவது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டு இருக்கிறது. ஐபோன் 12 மற்றும் அதன் பின் வெளியான ஐபோன்களில் விரைவில் 5ஜி சேவையை அனுபவிக்க முடியும். இணையத்தில் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, இந்தியாவில் டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதை ஆப்பிள் நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் ஐபோன் 12 மற்றும் அதன் பின் வெளியான புது ஐபோன் மாடல்களுக்கு 5ஜி வசதியை செயல்படுத்தும் அப்டேட் டிசம்பர் மாதத்தில் […]

The post ஐபோன்களில் 5ஜி வசதி! அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டது ஆப்பிள் first appeared on .

]]>

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் 5ஜி வசதியை செயல்படுத்துவது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டு இருக்கிறது. ஐபோன் 12 மற்றும் அதன் பின் வெளியான ஐபோன்களில் விரைவில் 5ஜி சேவையை அனுபவிக்க முடியும்.

இணையத்தில் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, இந்தியாவில் டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதை ஆப்பிள் நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் ஐபோன் 12 மற்றும் அதன் பின் வெளியான புது ஐபோன் மாடல்களுக்கு 5ஜி வசதியை செயல்படுத்தும் அப்டேட் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என ஆப்பிள் தெரிவித்து உள்ளது. இதற்கான தயாரிப்புப் பணிகளை ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக ஆப்பிள் தெரிவித்து இருக்கிறது.

டெலிகாம் நிறுவனங்கள் புது தலைமுறை சேவையை வெளியிடும் போது ஆப்பிள் அதனை தனது சாதனங்களில் சோதனை செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. தனது சாதனங்களில் அப்டேட் வெளியிடும் முன் நெட்வொர்க் வேலிடேஷன் மற்றும் டெஸ்டிங் உள்ளிட்டவைகளை முடிக்க வேண்டும் என ஆப்பிள் தெரிவித்து இருக்கிறது.

5ஜி கனெக்டிவிட்டி வசதி கொண்ட ஐபேட் ஏர் 5th Gen மாடலுக்கு எப்போது இந்த அப்டேட் வழங்கப்படும் என்ற விவரங்களை ஆப்பிள் இதுவரை வெளியிடவில்லை. எனினும், ஐபோன்களுக்கு வழங்கும் போதே ஐபேட் மாடலுக்கும் அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். முன்னதாக ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி பிளஸ் நெட்வொர்க் இந்தியாவின் எட்டு நகரங்களில் வழங்கப்பட்டு இருந்தது. அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 5ஜி சேவைகள் வெளியாகும் என்றும் மார்ச் 2024 வாக்கில் நாடு முழுக்க 5ஜி வழங்கப்பட இருக்கிறது.

ஆப்பிளை தொடர்ந்து சாம்சங் நிறுவனமும் இந்தியாவில் முன்னணி டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து 5ஜி சேவைகளை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது. அதன்படி நவம்பர மாத மத்தியில் சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு 5ஜி சேவையை பயன்படுத்துவதற்கான அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. 5ஜி சேவையை வழங்குவதற்காக சாம்சங் நிறுவனம் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. அந்த வகையில் ஏர்டெல் மற்றும் ஜியோ நெட்வொர்க் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் சாம்சங் சாதனங்களில் 5ஜி சேவையை பயன்படுத்தலாம்.

சாம்சங் சாதனங்கள் என குறிப்பிட்டு இருப்பதால் ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து கேலக்ஸி டேப் எஸ்8 சீரிஸ் மாடல்களுக்கும் 5ஜி அப்டேட் வழங்கப்படலாம். முன்னதாக ஏர்டெல் நிறுவனத்தின் நான்-ஸ்டாண்ட்-அலோன் 5ஜி பிளஸ் நெட்வொர்க் இந்தியாவின் எட்டு நகரங்களில் வெளியிடப்பட்டது. மேலும் இந்த நெட்வொர்க்கில் எந்தெந்த சாதனங்களில் 5ஜி வேலை செய்யும் என்ற பட்டியலும் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் ஏராளமான சாம்சஙங் நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்கள் இடம்பெற்றுள்ளன. எனினும், சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்21 மற்றும் அதற்கும் முன் வெளியிட்ட சாதனங்களை அப்டேட் செய்ய வேண்டும்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஸ்டாண்ட்-அலோன் 5ஜி சேவையை நாட்டின் நான்கு நகரங்களில் வெளியிட்டது. தற்போது பீட்டா சோதனை நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து அதிக நகரங்களில் 5ஜி சேவைகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம்.

The post ஐபோன்களில் 5ஜி வசதி! அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டது ஆப்பிள் first appeared on .

]]>
உஷார்! 5G சேவை பெயரில் மோசடி https://www.91mobiles.com/tamil/5g-sim-upgrade-fraud-smartphone-user-be-alert/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=5g-sim-upgrade-fraud-smartphone-user-be-alert Tue, 11 Oct 2022 14:23:01 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2939 இந்தியாவில் கடந்த வாரம் இந்தியன் மொபைல் காங்கிரஸ் 2022 இல் 5G மொபைல் நெட்வொர்க் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வாரம், ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை தங்கள் வெளியீடு திட்டங்களையும், இந்தியா முழுவதும் 5G இன் ஆரம்ப வெளியீட்டிற்கு தகுதியான நகரங்களின் ஆரம்ப பட்டியலையும் அறிவித்துள்ளன. இந்தியா முழுவதும் 5ஜி போன்களை வைத்திருக்கும் மக்கள் தங்கள் போன்களில் 5ஜியின் ஆற்றலையும் வேகத்தையும் அனுபவிக்க ஆர்வமாக உள்ள நிலையில், ஹைதராபாத் சைபர் க்ரைம் பிரிவு ஒரு புதிய மோசடி […]

The post உஷார்! 5G சேவை பெயரில் மோசடி first appeared on .

]]>

இந்தியாவில் கடந்த வாரம் இந்தியன் மொபைல் காங்கிரஸ் 2022 இல் 5G மொபைல் நெட்வொர்க் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வாரம், ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை தங்கள் வெளியீடு திட்டங்களையும், இந்தியா முழுவதும் 5G இன் ஆரம்ப வெளியீட்டிற்கு தகுதியான நகரங்களின் ஆரம்ப பட்டியலையும் அறிவித்துள்ளன. இந்தியா முழுவதும் 5ஜி போன்களை வைத்திருக்கும் மக்கள் தங்கள் போன்களில் 5ஜியின் ஆற்றலையும் வேகத்தையும் அனுபவிக்க ஆர்வமாக உள்ள நிலையில், ஹைதராபாத் சைபர் க்ரைம் பிரிவு ஒரு புதிய மோசடி குறித்து எச்சரித்துள்ளது.

மோசடி

அறிக்கையின்படி, மோசடி செய்பவர்கள் அப்பாவி மக்களுக்கு அழைப்புகளை விடுத்து, அவர்களது போனை 4ஜி இணைப்பில் இருந்து 5ஜி இணைப்பிற்கு மாற்றித் தருவதாகக் கூறி அனுப்பப்படும் இணைப்புகளைக் கிளிக் செய்த பிறகு பயனர் தங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை இழந்ததற்காகப் பல புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது மிகவும் மோசமான மோசடியாக இருப்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆகையால், 5G மோசடியில் இருந்து விலகி இருங்கள்.

பாதிப்பு

சில மோசடி செய்பவர்கள் பயனர்களின் போன்களுக்கு ஆபத்தான இணைப்பை அனுப்புகிறார்கள். அதாவது ஒரு லிங்க்-ஐ அனுப்புகிறார்கள். இது பயனர்களுக்கு 4G இலிருந்து 5G நெட்வொர்க் அப்டேட் செய்ய உதவுவதாகக் கூறுகிறது. 5ஜியின் சுவையை ருசிக்கத் துடிக்கும் பொதுமக்கள், இது ஏதோ அதிகாரப்பூர்வ செய்தி என்று நினைத்து இந்த இணைப்பை கிளிக் செய்கிறார்கள்.
இந்த லிங்க் உங்கள் போனில் உள்ள டேட்டாவை ஹேக் செய்ய அனுமதிக்கிறது. இதன் மூலம் ஹேக்கர்கள் உங்கள் போனில் உள்ள தகவலைத் திருடுகிறார்கள். இணைப்பைக் கிளிக் செய்தவுடன், குற்றவாளிகள் வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணை அறிந்தவுடன், அவர்கள் தொலைப்பேசி எண்ணைத் தடுத்து, சிம்மை மாற்றிக்கொள்கிறார்கள். இதன் விளைவாக மக்கள் தங்கள் சொந்த சிம்மிற்கான அணுகலை இழக்கிறார்கள்.

கவனம் தேவை

இதன் காரணமாகப் பல பயனர்கள் சைபர் குற்றவாளிகள் தங்கள் தொலைப்பேசியின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டதாகப் புகார் அளித்துள்ளனர். அறிமுகமில்லாத எண் அல்லது அனுப்புநரிடமிருந்து “4G இலிருந்து 5G-க்கு மாறுங்கள்” என்று வரும் எந்த செய்தியையும் கிளிக் செய்ய வேண்டாம் என்று சைபர் பிரிவு பயனர்களை எச்சரித்துள்ளது. சிம் வழங்குநரின் அதிகாரப்பூர்வ தளத்தில் சரியான விவரங்களைப் பார்ப்பது எப்போதும் நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் 5ஜி மற்றும் ஜியோ 5ஜி

ஏர்டெல் 5ஜி பிளஸ் திட்டம் இப்போது இந்தியாவின் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாரணாசி ஆகிய 8 நகரங்களில் பயன்பாட்டில் உள்ளது. ஜியோ பயனர்களுக்கு, 5G சோதனைகள் டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் தொடங்குகிறது. இந்த நகரங்களில் உள்ள பயனர்கள் 5ஜி சேவைக்கு மாற நினைத்தால், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ ஸ்டோர்களுக்குச் சென்று மட்டும் விண்ணப்பிக்கவும். இதிலும் குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே 5ஜி சேவை வழங்கப்படுகிறது. மற்ற நகரங்களில் உள்ளவர்களுக்கு இன்னும் 5ஜி சேவை வழங்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.

The post உஷார்! 5G சேவை பெயரில் மோசடி first appeared on .

]]>
ஏர்டெல் 5G ப்ளஸ் – சென்னைக்கான திட்டங்களின் விலை என்ன? https://www.91mobiles.com/tamil/airtel-5g-plus-announced-in-8-cities-including-chennai-check-price/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=airtel-5g-plus-announced-in-8-cities-including-chennai-check-price Fri, 07 Oct 2022 06:07:59 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2840 இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல், அதன் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்த கையோடு, இன்று அதன் ஏர்டெல் 5ஜி பிளஸ் (Airtel 5G Plus) திட்டங்களை அறிவித்துள்ளது! ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி பிளஸ் திட்டங்கள் ஆனது எந்தெந்த நகரங்களில் கிடைக்கிறது? என்ன விலைக்குக் கிடைக்கிறது? ஏர்டெல் நிறுவனம், இந்தியாவில் உள்ள எட்டு நகரங்களுக்கு ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவையை அறிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் அதன் 5ஜி சேவைகளை – Airtel 5G Plus […]

The post ஏர்டெல் 5G ப்ளஸ் – சென்னைக்கான திட்டங்களின் விலை என்ன? first appeared on .

]]>

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல், அதன் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்த கையோடு, இன்று அதன் ஏர்டெல் 5ஜி பிளஸ் (Airtel 5G Plus) திட்டங்களை அறிவித்துள்ளது! ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி பிளஸ் திட்டங்கள் ஆனது எந்தெந்த நகரங்களில் கிடைக்கிறது? என்ன விலைக்குக் கிடைக்கிறது?

ஏர்டெல் நிறுவனம், இந்தியாவில் உள்ள எட்டு நகரங்களுக்கு ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவையை அறிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் அதன் 5ஜி சேவைகளை – Airtel 5G Plus என அழைக்கிறது! ரிலையன்ஸ் ஜியோவை விட, ஏர்டெல் நிறுவனம் தனது 5ஜி சேவைகளை அதிக நகரங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது.

முன்னேரும் ஏர்டெல்!

இதன் மூலம் ஏர்டெல் நிறுவனம், 5ஜி சேவைகளின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்த விரும்புவதை வெளிப்படையாக அறிய முடிகிறது! ஜியோவை விட அதிக எண்ணிக்கையிலான நகரங்களில் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்வதால், ஏர்டெல் நிறுவனத்தால் ஆரம்பம் முதலே – 5ஜி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் மேலோங்கி இருக்க முடியும்!

எந்தெந்த நகரங்களில் கிடைக்கும்?

டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாரணாசி உள்ளிட்ட எட்டு நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு கட்டமாக, ஏர்டெல் நிறுவனத்தின் அதிநவீன 5ஜி பிளஸ் சேவைகளை அனுபவிக்க தொடங்குவார்கள் என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது!

யாருக்கெல்லம் கிடைக்கும்?

ஏற்கனவே 5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் எந்தவொரு ஏர்டெல் வாடிக்கையாளரும் ஏர்டெல் 5ஜி பிளஸை பயன்படுத்த முடியும். இதற்காக பயனர்கள் உறுதி செய்ய வேண்டிய விஷயங்கள் என்னவென்றால், அவர்களிடம் 5ஜி-எனேபிள்டு ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும் மற்றும் அது ஏர்டெல்-இன் 5ஜி-யை ஆதரிக்க வேண்டும்!

எல்லா ஸ்மார்ட்போனும் ஏர்டெல் 5ஜி-யை ஆதரிக்காது!

இந்தியாவில் உள்ள அனைத்து 5ஜி ஸ்மார்ட்போன்களுமே ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜியை ஆதரிக்குமா என்றால்.. இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எல்லா 5ஜி போன்களும் ஏர்டெல் 5ஜி-ஐ ஆதரிக்க வேண்டுமானால், அதற்கு OEM-களின், அதாவது Original Equipment Manufacturer-களின், இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் மொபைல் போன் உற்பத்தியாளர்களின் உதவி தேவைப்படும். அதாவது மொபைல் போன் உற்பத்தியாளர்கள் (OEM) தங்களது 5ஜி போன்களானது டெலிகாம் நிறுவனங்களின் 5ஜி சேவைகளை ஆதரிக்க, அது தொடர்பான OTA (Over the air) அப்டேட்களை வெளியிட வேண்டும். அதன் பின்னரே, ஏற்கனவே ஒரு 4ஜி சிம் காரட்டை வைத்திருக்கும் பயனர்கள், ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி பிளஸ் சேவைகளை பயன்படுத்த முடியும்.

ஏர்டெல் 5ஜி பிளஸ் திட்டங்களின் விலை என்ன?

தற்போதைக்கு, பார்தி ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவைக்கு எந்தவிதமான சிறப்பு கட்டணங்களும் இல்லை. நிறுவனத்தின் கூற்றுப்படி பரந்த அளவிலான 5ஜி சேவைகள் அறிவிக்கப்படும் வரையிலாக, ஏர்டெல் வாடிக்கையாளர்களால் தத்தம் டேட்டா பிளான்களின் வழியாக ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவைகளை அனுபவிக்க முடியும்.

ஏர்டெல் நிறுவனம், அதன் 5G திட்டங்களின் விலைகளை இன்னும் உறுதி செய்யவில்லை. அது தொடர்பான விவரங்கள் அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இந்நிலையில், 4G உடன் ஒப்பிடும்போது ஏர்டெல் நிறுவனத்தின் 5G திட்டங்கள் ஆனது அதிக விலை கொண்டதாக இருக்காது என்றும் நம்பப்படுகிறது!

The post ஏர்டெல் 5G ப்ளஸ் – சென்னைக்கான திட்டங்களின் விலை என்ன? first appeared on .

]]>
ஜியோ வெல்கம் ஆஃபரில் கிடைப்பது என்ன? https://www.91mobiles.com/tamil/jio-5g-welcome-offer-unlimited-5g-data-up-to-1gbps-speed/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=jio-5g-welcome-offer-unlimited-5g-data-up-to-1gbps-speed Thu, 06 Oct 2022 09:05:49 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2814 சில குறிப்பிட்ட நகரங்களில் தனது 5ஜி சேவைகளை அறிமுகம் செய்துள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதன் புதிய 5ஜி சேவைக்கான வெல்கம் ஆபரையும் (Jio 5G Welcome Offer) அறிவித்துள்ளது. ஜியோ ட்ரூ 5ஜி வெல்கம் ஆபரில் (Jio True 5G Welcome Offer) கிடைக்கும் புதிய சலுகையின் கீழ், என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? அது யாருக்கெல்லாம் கிடைக்கும்? என்று பார்க்கலாம். ஜியோ ட்ரூ 5G கடந்த அக்டோபர் 1 ஆம் தேதியன்று நடந்த இந்தியா மொபைல் […]

The post ஜியோ வெல்கம் ஆஃபரில் கிடைப்பது என்ன? first appeared on .

]]>

சில குறிப்பிட்ட நகரங்களில் தனது 5ஜி சேவைகளை அறிமுகம் செய்துள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதன் புதிய 5ஜி சேவைக்கான வெல்கம் ஆபரையும் (Jio 5G Welcome Offer) அறிவித்துள்ளது. ஜியோ ட்ரூ 5ஜி வெல்கம் ஆபரில் (Jio True 5G Welcome Offer) கிடைக்கும் புதிய சலுகையின் கீழ், என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? அது யாருக்கெல்லாம் கிடைக்கும்? என்று பார்க்கலாம்.

ஜியோ ட்ரூ 5G

கடந்த அக்டோபர் 1 ஆம் தேதியன்று நடந்த இந்தியா மொபைல் காங்கிரஸ் மாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடியால் 5ஜி அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கிடையில், ரிலையன்ஸ் ஜியோ தனது 5ஜி சேவைகளை வருகிற தீபாவளியிலிருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாகவே சில நகரங்களில் தனது 5ஜி சேவைகளை வழங்கத் தொடங்கி உள்ளது!

ஜியோ 5ஜி கிடைக்கும் நகரங்கள்

மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் உள்ள ஜியோ பயனர்களுக்கு அதன் பீட்டா சோதனையின் ஒரு பகுதியாக, 5ஜி சேவைகளை வழங்கத்தொடங்கி உள்ளது. இதனோடு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது 5ஜி வெல்கம் ஆஃபரையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த சேவைகள், நேற்று, அதாவது கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி முதல் மேற்குறிப்பிட்ட நகரங்களில் கிடைக்கிறது!

வெல்கம் ஆஃபர்

ஜியோ ட்ரூ 5ஜி வெல்கம் ஆஃபர் ஆனது மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் உள்ள ஜியோ பயனர்களுக்குக் கிடைக்கிறது. இதன் மூலம், அந்தந்த நகரங்களில் உள்ள ஜியோ வாடிக்கையாளர்கள் 1Gbps+ வேகத்திலான அன்லிமிடெட் 5G டேட்டாவை பெறுவார்கள்.

ஜியோவின் ட்ரூ 5ஜி வெல்கம் ஆஃபர் ஆனது குறிப்பிடப்பட்ட நகரங்களில் மட்டுமே கிடைக்கும் என்பது மட்டுமின்றி, இது முழுக்க முழுக்க அழைப்பின் அடிப்படையிலானது. அதாவது இது அனைவருக்கும் கிடைக்காது, சில தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும்!

மற்ற நகரங்களுக்கான பீட்டா ட்ரையல் சேவையானது படிப்படியாக அறிவிக்கப்படும் என்று ஜியோ குறிப்பிட்டுள்ளது. சிறந்த கவரேஜ் மற்றும் பயனர் அனுபவத்தை வழங்க, ஒரு நகரத்தின் நெட்வொர்க் கவரேஜ் ஆனது கணிசமாக நிறைவடையும் வரை, ஜியோ பயனர்கள் இந்த பீட்டா ட்ரையலை தொடர்ந்து பெறுவார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

புதிய 5ஜி சிம் தேவையா?

ஜியோவின் 5ஜி வெல்கம் ஆஃபருக்காக “அழைக்கப்பட்ட” வாடிக்கையாளர்கள் தற்போதுள்ள ஜியோ சிம் அல்லது தங்களது 5ஜி ஸ்மார்ட்போனை மாற்ற வேண்டிய தேவையில்லாமல், தானாகவே ஜியோவின் ட்ரூ 5ஜி சேவைக்கு மேம்படுத்தப்படுவார்கள். ஜியோ 5ஜி சேவையானது அனைத்து வகையான 5ஜி போன்களுடனும் தடையின்றி வேலை செய்ய, அனைத்து மொபைல் பிராண்டுகளுடனும் இணைந்து செயல்படுவதாக ஜியோ நிறுவனம் கூறுகிறது.

அதென்ன.. ட்ரூ 5ஜி?

ஜியோவின் ட்ரூ 5ஜி ஆனது தனித்த 5ஜி கட்டமைப்பு, சார்புகள் இல்லாத மேம்பட்ட 5ஜி, லோ லேடன்சி, மெஷின்-டூ-மெஷின் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் பலவற்றுடன் மிகவும் பலமானதாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஜியோவின் 5ஜி சேவைகள் அந்த மிகப்பெரிய மற்றும் சிறந்த கலவையிலான ஸ்பெக்ட்ரமையும் (700 மெகா ஹெர்ட்ஸ், 3500 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் பேண்டுகள்) கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், ஆழமான உட்புற கவரேஜை உறுதிசெய்ய 700மெகா ஹெர்ட்ஸ் லோ-பேண்ட் ஸ்பெக்ட்ரமை கொண்ட ஒரே டெலிகாம் ஆப்ரேட்டர் – ஜியோ மட்டுமே என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது!

ஜியோ 5ஜி விலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 5ஜி கவரேஜ் வசதியை ஏற்படுத்தும் வரை ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி திட்டங்களின் விலையானது தற்போது கிடைக்கும் 4ஜி திட்டங்களை போலவே தான் இருக்கும். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் 5G சேவைக்கு மாறிய பின்னரே இதன் விலை உயரும்.

The post ஜியோ வெல்கம் ஆஃபரில் கிடைப்பது என்ன? first appeared on .

]]>
நாளை அறிமுகமாகிறது ஜியோ 5G! https://www.91mobiles.com/tamil/jio-to-start-5g-services-from-tomorrow-in-4-cities/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=jio-to-start-5g-services-from-tomorrow-in-4-cities Tue, 04 Oct 2022 14:52:39 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2791 ரிலையன்ஸ் ஜியோ தனது 5G சேவையை நாளை அறிமுகப்படுத்த இருக்கிறது. இது தனது இந்த சேவையை ‘Jio True 5G’ என்ற பெயரில் அழைக்கிறது. முதற்கட்டமாக மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகிய நான்கு நகரங்களில் இந்த 5ஜி சேவை துவங்குகிறது. அதுவும் நாளை (5-10-2022) முதலே. தனது ட்ரூ 5ஜி சேவையின் பீட்டா சோதனையை தனது பயனர்கள் விரும்பினால் அனுபவிக்கலாம் என்றும் கூறி இருக்கிறது. இந்த பீட்டா சோதனையில் பயனர்கள் ஜியோ ட்ரூ 5ஜி-யின் […]

The post நாளை அறிமுகமாகிறது ஜியோ 5G! first appeared on .

]]>

ரிலையன்ஸ் ஜியோ தனது 5G சேவையை நாளை அறிமுகப்படுத்த இருக்கிறது. இது தனது இந்த சேவையை ‘Jio True 5G’ என்ற பெயரில் அழைக்கிறது. முதற்கட்டமாக மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகிய நான்கு நகரங்களில் இந்த 5ஜி சேவை துவங்குகிறது. அதுவும் நாளை (5-10-2022) முதலே. தனது ட்ரூ 5ஜி சேவையின் பீட்டா சோதனையை தனது பயனர்கள் விரும்பினால் அனுபவிக்கலாம் என்றும் கூறி இருக்கிறது. இந்த பீட்டா சோதனையில் பயனர்கள் ஜியோ ட்ரூ 5ஜி-யின் வேகத்தை 1 ஜிபி வரை பெற முடியும்.

அப்படி பீட்டா சோதனை செய்ய வரும் வாடிக்கையாளர்களுக்கு ’Jio 5G Welcome offer’ அதுவாகவே அப்கிரேட் ஆகிவிடும். இதற்கு அவர்களது மொபைலில் 5ஜி ஆதரவு இருந்தாலே போதும். ஜியோவும் ஏற்கனவே தனக்கான ஒரு 5ஜி மொபைலை தயாரிக்கும் முயற்சியில் இறங்கிவிட்டது.

ரிலையன்ஸ் ஜியோவின் தலைவரான ஆகாஷ் அம்பானி, “நாடு முழுமைக்குமான இதுவரை இல்லாத அதிவிரைவான 5ஜி சேவையை தர ஜியோ தயாராக இருக்கிறது. இந்த 5ஜி சேவையானது குறிப்பிட்ட சில நகரங்களுக்கு மட்டுமானதாக இருக்காது. இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு வீட்டிற்கும், ஒவ்வொரு குடிமகனுக்கும், ஒவ்வொரு வேலைக்கும் இந்த சேவை கிடைக்கும்” என்று கூறினார்.

ஜியோ 5ஜி சேவை முழுவதுமாக பயன்பாட்டுக்கு வரும் வரை, இந்த பீட்டா சோதனை சேவை மற்ற எல்லா நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். அதுமட்டும் இன்றி முழுவதுமாக சேவை துவங்கும் வரை ஜியோவின் பயனர்களுக்கு இந்த பீட்டா சோதனை பயன்பாட்டை வழங்குவது தொடரும் என்றும் கூறினார்.

ஜியோ தனது 5ஜி சேவையில் மூன்று விதமான நன்மைகளை தங்கள் பயனர்களுக்கு வழங்குகிறது.

1. முதலாவதாக, ஜியோ நெட்வொர்க்கானது முழுவதும் தனக்கான தகவமைப்பைக் கொண்டிருக்கிறது. அதாவது நெட்வொக்கிற்காக வேறு எந்த ஒரு நிறுவனத்தையும் சார்ந்து இருப்பதோ, பங்கிட்டுக் கொள்வதோ இல்லை. இதனால் எவ்வித குறைபாடோ,, தாமதமோ, தடையோ இன்றி 5ஜி வாய்ஸ் சேவைகளையும், இணைப்புகளையும் ஜியோ 5ஜியால் வழங்க முடியும்.

2. 5ஜி அலைகற்றையை பெறுவதில் இந்த வடருத்தின் ஆரம்பத்தில் இருந்தே ஜியோ முனைப்புடன் இருந்தது. குறிப்பாக இந்த 5ஜி அலைக்கற்றையின் 700MHz என்ற குறைந்த பேண்ட்வித் கொண்ட அலைகற்றைகளை பெற்ற ஒரே நிறுவனம் ஜியோ மட்டுமே. இதன் மூலம் வீட்டிற்குள்ளும் கூட மிகச்சிறந்த சிக்னலை வழங்க முடியும்.

3. இந்த 5ஜி சேவையை பெற தற்போது உபயோகிக்கும் 4ஜி சிம் போதுமானது என்று ஜியோ தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏர்டெல்லும் இதே போல் கூறியது நினைவிருக்கலாம்.

The post நாளை அறிமுகமாகிறது ஜியோ 5G! first appeared on .

]]>
பிஎஸ்என்எல் 5ஜி அறிமுகத் தேதி அறிவிப்பு https://www.91mobiles.com/tamil/bsnl-5g-services-to-launch-on-august-15-2023/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=bsnl-5g-services-to-launch-on-august-15-2023 Tue, 04 Oct 2022 05:55:56 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2765 இப்போது நாட்டில் எங்கு திரும்பினாலும் 5ஜி பற்றிய பேச்சுக்கள் தான் அதிகம். இந்நிலையில் BSNL நிறுவனமும் அதன் 5ஜி சேவை எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. நாட்டில் உள்ள கிராமப்புறங்கள் வரை 5ஜியை எடுத்துச் செல்ல BSNL நிறுவனம் உறுதியாக இருக்கிறது என்று டெலிகாம் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எப்போது இந்தியாவில் BSNL 5G சேவையை அறிமுகம் செய்யுமென்று பார்க்கலாம். இந்தியாவில் எப்போது வரும் 5G? இந்தியாவில் 5G நெட்வொர்க் அதிகாரப்பூர்வமாக அக்டோபர் […]

The post பிஎஸ்என்எல் 5ஜி அறிமுகத் தேதி அறிவிப்பு first appeared on .

]]>

இப்போது நாட்டில் எங்கு திரும்பினாலும் 5ஜி பற்றிய பேச்சுக்கள் தான் அதிகம். இந்நிலையில் BSNL நிறுவனமும் அதன் 5ஜி சேவை எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. நாட்டில் உள்ள கிராமப்புறங்கள் வரை 5ஜியை எடுத்துச் செல்ல BSNL நிறுவனம் உறுதியாக இருக்கிறது என்று டெலிகாம் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எப்போது இந்தியாவில் BSNL 5G சேவையை அறிமுகம் செய்யுமென்று பார்க்கலாம்.

இந்தியாவில் எப்போது வரும் 5G?

இந்தியாவில் 5G நெட்வொர்க் அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) நிகழ்வில் 5ஜி சேவையைத் தொடங்கி வைத்தார். ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் எட்டு நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதேசமயம், ரிலையன்ஸ் ஜியோ தனது 5ஜி சேவைகளை இந்த மாத இறுதியில் தொடங்குவதை உறுதி செய்துள்ளது. Vodafone-Idea (Vi) சற்று தாமதமாக 5G போட்டியில் களமிறங்கும். Vi 5G வெளியீட்டுத் தேதி பற்றிய விபரங்களை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

BSNL 5ஜி

இதற்கிடையில், அரசு நடத்தும் பிஎஸ்என்எல் (BSNL) அடுத்த ஆண்டு 5ஜி சேவையை அறிமுகப்படுத்தும் என்று தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதிப்படுத்தினார். BSNL 5G அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று இந்தியா தனது 77வது சுதந்திரத்தைக் கொண்டாடும் போது, BSNL அதன் 5G சேவையை அறிமுகம் செய்யுமென்று அவர் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
தற்போது புது தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெற்ற IMC 2022 நிகழ்வின் போது, தொலைத்தொடர்பு அமைச்சர் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். BSNL 5G, இந்தியாவில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் என்று அமைச்சர் தெரிவித்தார். BSNL நாட்டின் தொலைதூர மூலையில் உள்ள கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் வரை அனைவரையும் தனது சேவையால் இணைத்துள்ளதை நாம் கவனிக்க வேண்டியதுள்ளது.

5ஜி நெட்வொர்க்கை இந்தியாவில் உள்ள அனைத்து கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு எடுத்துச் செல்ல BSNL தான் சரியான வழி என்பதை யாரும் மறுக்க முடியாது. BSNL 5G ஆனது தனியார் நிறுவனங்களின் வெளியீட்டை விடக் கிட்டத்தட்ட ஒரு வருடம் தாமதமாக இருக்கும் என்றாலும் கூட, அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனத்தின் 4G வெளியீட்டுடன் ஒப்பிடும் போது, இது மிகவும் வேகமாகக் களமிறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் இந்தியாவில் முதன்முதலில் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியதை உறுதிப்படுத்த சுமார் 10 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது என்பதை நம்மால் மறக்க முடியாது. ஏர்டெல் நிறுவனம் தனது 4ஜி சேவைகளை 2012 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஆனால், 10 ஆண்டுகளுக்கு பிறகு, BSNL நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தான் 4G நெட்வொர்க்கிற்கு மேம்படுத்த அரசாங்கத்தின் ஒப்புதலைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்த விலையில் BSNL 5ஜி

200-க்கும் மேற்பட்ட நகரங்களில் பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களின் 5ஜி சேவைகள் கிடைக்கும் என்று அமைச்சர் வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் 80-90 சதவீத மக்களுக்கு 5ஜி சேவையை வழங்க அரசு மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இலக்கு வைத்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், 2023 டிசம்பரில் நாடு முழுவதும் 5ஜி சேவைகளை வழங்குவதாக ஜியோ அறிவித்துள்ளது. அடுத்த வருடம் முதல் BSNL பயனர்களுக்கு 5ஜி மலிவு விலையில் கிடைக்க வாய்ப்புள்ளது.

The post பிஎஸ்என்எல் 5ஜி அறிமுகத் தேதி அறிவிப்பு first appeared on .

]]>