5G spectrum https://www.91mobiles.com/tamil Thu, 01 Dec 2022 10:27:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 5G – புரளியும் உண்மையும்! https://www.91mobiles.com/tamil/lies-about-5g-technology/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=lies-about-5g-technology Thu, 01 Dec 2022 08:45:05 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4026 இந்தியாவில் 5ஜி சேவைகள் விரிவடையத் தொடங்கியதில் இருந்து 5ஜி தொடர்பாக பலவகையான பொய்களும், கட்டுக்கதைகளும் கிளிப்பி விடப்பட்டு, மக்களை குழப்பம் அடைய செய்துள்ளன! அந்த பொய்களும், அதன் பின்னணியில் உள்ள உண்மைகளும் இதோ.. 5ஜி நெட்வொர்க் உடல்நல கேடுகளை ஏற்படுத்தும்! 4ஜி சேவைகள் அறிமுகமான போதும் கூட இதே பீதியைத் தான் கிளப்பினார்கள். அதே பீதி தற்போதும் கிளம்பி உள்ளது. அதாவது 5ஜி நெட்வொர்க்குகள் ஆனது உடல்நலக் கேடுகளை ஏற்படுத்தும் என்கிற தவறான கருத்து நிலவுகிறது. இது […]

The post 5G – புரளியும் உண்மையும்! first appeared on .

]]>

இந்தியாவில் 5ஜி சேவைகள் விரிவடையத் தொடங்கியதில் இருந்து 5ஜி தொடர்பாக பலவகையான பொய்களும், கட்டுக்கதைகளும் கிளிப்பி விடப்பட்டு, மக்களை குழப்பம் அடைய செய்துள்ளன! அந்த பொய்களும், அதன் பின்னணியில் உள்ள உண்மைகளும் இதோ..

5ஜி நெட்வொர்க் உடல்நல கேடுகளை ஏற்படுத்தும்!

4ஜி சேவைகள் அறிமுகமான போதும் கூட இதே பீதியைத் தான் கிளப்பினார்கள். அதே பீதி தற்போதும் கிளம்பி உள்ளது. அதாவது 5ஜி நெட்வொர்க்குகள் ஆனது உடல்நலக் கேடுகளை ஏற்படுத்தும் என்கிற தவறான கருத்து நிலவுகிறது. இது ஒரு கட்டுக்கதை என்று நாங்கள் சொல்லவில்லை, நார்வே மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் உட்பட உலகெங்கிலும் உள்ள பல சுகாதார அதிகாரிகளே கூறுகிறார்கள்.

5ஜி – உயிர்களை பாதிக்கும்

5ஜி-யின் எக்ஸ்போஷர் வரம்பானது (Exposure threshold) ஆண்டெனா இன்ஸ்டாலேஷனின் (Antenna installation) தேவையான தரத்திற்கு கீழே தான் உள்ளது, எனவே, 5ஜி சிக்னல்களின் ரேடியோ அலைகள் (Radio waves of 5G signals) எந்த உயிரையும் பாதிக்கப் போவதில்லை. அதுமட்டுமின்றி ரேடியோ அலைகள் மின்காந்த நிறமாலையின் அயனியாக்கம் அல்லாத மண்டலத்தில் (Non-ionizing zone of the electromagnetic spectrum) உள்ளன, ஆகையால் எந்தவொரு சேதத்தையும் செய்ய போதுமான ஆற்றலும் அவைகளிடம் இருக்காது!

4ஜி-க்கும் 5ஜி-க்கும் பெரிய வித்தியாசம் இல்லை!

தவறு! 4G-க்கும் 5G-க்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. லேடன்சி (Latency), பதிவிறக்க வேகம் (Download Speed), பேஸ் ஸ்டேஷன்ஸ் (Base Stations) மற்றும் செல் டென்சிட்டி (Cell Density) போன்றவைகளில் 5ஜி – ஒரு படி அல்ல பல படிகள் முன்னோக்கி இருக்கும். 5ஜி-யின் கீழ் வினாடிக்கு 20 ஜிபி வரையிலான ஸ்பீட்-ஐ கூட அணுகலாம்; ஹை ரெசல்யூஷன் ஸ்ட்ரீமிங் மற்றும் எச்டி வீடியோக்களை பார்க்கும் அனுபவம் புதியதொரு உச்சத்தை எட்டும். இப்படியாக 5G-யின் கீழ் வரம்பற்ற சாத்தியக்கூறுகளுடன் நீங்கள் பலவற்றையும் செய்ய முடியும்!

மொபைல் போன்களுக்கு மட்டுமே 5ஜி!

பெரும்பாலான மக்கள், 5G என்பது மொபைல் போன்களுக்கு மட்டுமான ஒரு தொழில்நுட்பம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல. 5ஜி என்பது இன்டர்நெட் செயல்படும் விதத்தை மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு தொழில்நுட்பம் ஆகும். இது மொபைல் போன்களில் மட்டுமின்றி கேமிங்கில் இருந்து வணிகங்கள் வரை அனைத்திலுமே ஒரு கடுமையான மாற்றத்தை கொண்டு வரப்போகிறது. எனவே 5ஜி-யின் சக்தியை ஒருபோதும் குறைத்து மதிப்பிட வேண்டாம்!

5ஜி வந்ததும் Wi-Fi காணாமல் போய் விடும்!

5ஜி நெட்வொர்க் ஆனது வைஃபை-க்கான மாற்று என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் – இந்த இரண்டுமே வெவ்வேறு தொழில்நுட்பங்கள் ஆகும் மற்றும் வெவ்வேறு வகையான தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. 5G ஆனது செல்லுலார் கனெக்டிவிட்டியை வழங்குகிறது, அதேசமயம் Wi-Fi ஆனது வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்குள் இருக்கும் டிவைஸ்களுக்கான கனெக்டிவிட்டியை வழங்குகிறது. ஆக 5ஜி தொழில்நுட்பம் ஆனது ஒருபோதும் Wi-Fi தொழில்நுட்பத்தை மாற்ற போவதில்லை!

5ஜி என்பது வெறும் தொழில்நுட்பம் மட்டுமல்ல, அது ஒரு முன்னேற்றம். அது ஒரு மைல்கல். இது நம்முடைய இண்டர்நெட் மற்றும் மொபைல் நெட்வொர்க்கை மட்டுமின்றி நம்மையும் மேம்படுத்தப்போகும் ஒரு தொழில்நுட்ப வரம் ஆகும்! அதனால் தயக்கம் இன்றி 5ஜியை அணுகலாம்.

The post 5G – புரளியும் உண்மையும்! first appeared on .

]]>
வாடிக்கையாளர்களை 5ஜி ஸ்மார்ட்ஃபோன் வாங்க அறிவுறுத்தும் ஏர்டெல்! https://www.91mobiles.com/tamil/airtel-is-urging-users-to-buy-5g-smartphones-to-launch-5g-services/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=airtel-is-urging-users-to-buy-5g-smartphones-to-launch-5g-services Mon, 12 Sep 2022 04:18:21 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2232 4ஜியை ஒப்பிடுகையில் 5ஜி சேவையானது அதிவேக இணைய சேவையை கொண்டிருக்கும். சுருக்கமாக சொன்னால் 4ஜியை ஒப்பிடுகையில் 5ஜி சேவை 100 மடங்கு வேகமானதாக இருக்கும். மத்திய அரசு சார்பில் 5ஜி அலைக்கற்றை ஏலம் அண்மையில் நடத்தி முடிக்கப்பட்டது. இதில் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் பங்கேற்று 5ஜி ஏலம் எடுத்திருந்தன. தொலைத்தொடர்பு துறையின் பரிணாம வளர்ச்சி அடிப்படையில் அறிமுகம் ஆகவுள்ள இந்த 5ஜி சேவைகள் என்பது மிக அதிவேகமான இண்டர்நெட் வசதி மற்றும் துல்லியமான […]

The post வாடிக்கையாளர்களை 5ஜி ஸ்மார்ட்ஃபோன் வாங்க அறிவுறுத்தும் ஏர்டெல்! first appeared on .

]]>

4ஜியை ஒப்பிடுகையில் 5ஜி சேவையானது அதிவேக இணைய சேவையை கொண்டிருக்கும். சுருக்கமாக சொன்னால் 4ஜியை ஒப்பிடுகையில் 5ஜி சேவை 100 மடங்கு வேகமானதாக இருக்கும்.

மத்திய அரசு சார்பில் 5ஜி அலைக்கற்றை ஏலம் அண்மையில் நடத்தி முடிக்கப்பட்டது. இதில் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் பங்கேற்று 5ஜி ஏலம் எடுத்திருந்தன. தொலைத்தொடர்பு துறையின் பரிணாம வளர்ச்சி அடிப்படையில் அறிமுகம் ஆகவுள்ள இந்த 5ஜி சேவைகள் என்பது மிக அதிவேகமான இண்டர்நெட் வசதி மற்றும் துல்லியமான வாய்ஸ் காலிங் உள்ளிட்ட சேவைகளை வழங்க இருக்கிறது.

ஆனால், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால், இந்தியாவில் தற்போது பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கையில் இருப்பது 4ஜி சேவை கொண்ட ஃபோன்கள் மட்டுமே. 5ஜி வசதி கொண்ட ஃபோன்கள் இப்போதுதான் சந்தைக்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், வாடிக்கையாளர்கள் அனைவரும் மிகச் சிறப்பான 5ஜி சேவையை பெற்றிடும் வகையில் 5ஜி ஃபோன்களை வாங்க வேண்டும் என்று ஏர்டெல் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக ஏர்டெல் நிறுவன முதன்மைச் செயல் அதிகாரி கோபால் விட்டல், தமது வாடிக்கையாளர்களுக்கு பொது கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், வாடிக்கையாளர்கள் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் பயன்படுத்தி, தாங்கள் சார்ந்த பகுதியில் 5ஜி சேவை கிடைக்குமா என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தீபாவளி முதல் 5ஜி சேவை

முன்னதாக, தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், அக்டோபர் மாதத்திற்குள் நாட்டின் பல பகுதிகளில் 5ஜி சேவையை தொடங்க இருப்பதாக ஏர்டெல் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஏர்டெல் நிறுவனத்திற்கு மிக பெரிய போட்டியாளராகக் கருதப்படும் ரிலையன்ஸ் ஜியோ சார்பிலும் இதே காலகட்டத்தில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட உள்ளன.

வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் நிறுவனத்தின் கோபால் விட்டல் எழுதியுள்ள கடிதத்தில், “இன்னும் ஒரு மாதத்திற்குள் 5ஜி சேவையை நாங்கள் தொடங்க இருக்கிறோம். டிசம்பர் மாதத்திற்குள் மிக முக்கிய மெட்ரோ நிறுவனங்களில் சேவை கிடைக்கும். அதற்கு பிறகு, நாடெங்கிலும் சேவையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக, 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டின் நகர்ப்புற பகுதிகள் அனைத்திற்கும் சேவையை கொண்டு சேர்ப்போம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “4ஜியை ஒப்பிடுகையில் 5ஜி சேவையானது மிக பெரிய அளவில் அதிவேக இணைய சேவையை கொண்டிருக்கும். சுருக்கமாக சொன்னால் 4ஜியை ஒப்பிடுகையில் 5ஜி சேவை 100 மடங்கு வேகமானதாக இருக்கும்.

லோ பேண்ட் 5ஜி சேவை என்பது 50 முதல் 250 எம்பிபிஎஸ் வேகத்திலும், நடுத்தர 5ஜி சேவை என்பது 100 முதல் 900 எம்பிபிஎஸ் வேகத்திலும், அதிவேக பேண்ட் என்பது அதிகபட்சம் 1.8 ஜிபிஎஸ் வரையிலும் இருக்கும்’’ என்று விட்டல் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

The post வாடிக்கையாளர்களை 5ஜி ஸ்மார்ட்ஃபோன் வாங்க அறிவுறுத்தும் ஏர்டெல்! first appeared on .

]]>
டில்லியில் விரைவில் Vi 5G! https://www.91mobiles.com/tamil/vi-5g-network-to-roll-out-in-delhi-soon-before-end-of-october/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vi-5g-network-to-roll-out-in-delhi-soon-before-end-of-october Wed, 24 Aug 2022 11:54:33 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1805 டெல்லியில் உள்ள வோடபோன் ஐடியா பயனர்களுக்கு அதன் 5ஜி சேவை விரைவில் கிடைக்கும் என்று அதிரடியாக அறிவித்துள்ளது. “குட் நியூஸ்! Vi நெட்வொர்க் 5G சேவைக்கு மேம்படுத்தப்படுகிறது! உங்கள் நெட்வொர்க் அனுபவம் இப்போது சிறப்பானதாக இருக்கும், விரைவில் எங்கள் Vi நெட்வொர்க் மூலம் டெல்லி-NCR இல் சிறந்த கவரேஜ் மற்றும் அதிவேக இணையச் சேவையை அனுபவிப்பீர்கள்” என்ற ஒரு அறிவிப்பு டில்லியில் உள்ள Vi பயனர்களுக்கு இன்று காலை அனுப்பப்பட்டு இருக்கிறது. 5ஜி சேவைக்காக Vi நீண்ட […]

The post டில்லியில் விரைவில் Vi 5G! first appeared on .

]]>

டெல்லியில் உள்ள வோடபோன் ஐடியா பயனர்களுக்கு அதன் 5ஜி சேவை விரைவில் கிடைக்கும் என்று அதிரடியாக அறிவித்துள்ளது.

“குட் நியூஸ்! Vi நெட்வொர்க் 5G சேவைக்கு மேம்படுத்தப்படுகிறது! உங்கள் நெட்வொர்க் அனுபவம் இப்போது சிறப்பானதாக இருக்கும், விரைவில் எங்கள் Vi நெட்வொர்க் மூலம் டெல்லி-NCR இல் சிறந்த கவரேஜ் மற்றும் அதிவேக இணையச் சேவையை அனுபவிப்பீர்கள்” என்ற ஒரு அறிவிப்பு டில்லியில் உள்ள Vi பயனர்களுக்கு இன்று காலை அனுப்பப்பட்டு இருக்கிறது.

5ஜி சேவைக்காக Vi நீண்ட காலமாக என்ன செய்து வருகிறது தெரியுமா?

உண்மையைச் சொல்லப் போனால், ஜியோ போல Vi நிறுவனமும் 5ஜி சேவையைச் சரியான நேரத்தில் அறிமுகப்படுத்தத் தேவையான அனைத்து வேலைகளையும் நீண்ட காலமாகச் செய்து வருகிறது. குறிப்பாக, சில காலத்திற்கு முன்பே, தொலைத்தொடர்பு நிறுவனம் அதன் 5G வெளியீட்டிற்கு தேவையான உபகரணங்களுக்காக நோக்கியா மற்றும் எரிக்சன் போன்ற நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. Vi நிறுவனம் பல்வேறு இடங்களில் பல சோதனைகளை நடத்தியது.

5ஜி சோதனையில் Vi எவ்வளவு வேகத்தை எட்டியது?

எரிக்சனின் சமீபத்திய சாப்ட்வேர்களைப் பயன்படுத்தி புனேவில் 5.92Gbps வேகத்துடன் நிறுவனம் சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இந்தியாவில் 5G ஏலம் முடிந்ததும், 5ஜி நெட்வொர்க் சேவைகள் இந்த மாதம் இறுதிக்குள் தொடங்கப்படும் என்று கூறப்பட்டது. அரசு அறிவிப்பின் படி 5ஜி சேவை அக்டோபர் மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்பட்டது.

டில்லியில் 5ஜி சேவையை எப்போது எதிர்பார்க்கலாம்?

அதேபோல், சுதந்திர தினத்தன்று வெளியான தகவல் படி, வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி நடைபெறும் இந்தியன் மொபைல் காங்கிரஸ் 2022 இல் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் 5G சேவைகளை அறிமுகம் செய்வார் என்று கூறப்பட்டுள்ளது. டில்லியில் 5ஜி சேவையை எப்போது எதிர்பார்க்கலாம் என்ற துல்லியமான தேதியை Vi அறிவிக்கவில்லை. ஆனால், இது விரைவில் அக்டோபர் இறுதிக்குள் தொடங்கப்படும் என்பது மட்டும் இப்போது உறுதியாகியுள்ளது.

12 நகரங்களில் 5ஜி சேவை விரைவில் அறிமுகம்

நம்முடைய கணிப்பின் படி, அக்டோபர் மாத இறுதிக்குள் இது வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியைத் தவிர, பெங்களூரு, சண்டிகர், காந்திநகர், அகமதாபாத், குருகிராம், மும்பை, புனே ஹைதராபாத், சென்னை, ஜாம்நகர், கொல்கத்தா மற்றும் லக்னோ போன்ற 12 நகரங்களிலும் 5ஜி சேவை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி பயன்படுத்த புது சிம் கார்டு தேவையா?

டெலிகாம் நிறுவனங்கள் அதன் 5ஜி சேவையை, NSA 5G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தான் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தில் 5ஜி சேவை செயல்படும் வரை, 5ஜி சேவையின் வேகத்தை அனுபவிக்க உங்களுக்கு ஒரு பிரத்தியேகமான 5G சிம் கார்டு தேவைப்படாது என்பதே உண்மை. இருப்பினும், இந்த புதிய 5வது தலைமுறை நெட்வொர்க்கை முழுமையான வேகத்தில் பயன்படுத்த உங்களுக்கு 5G மொபைல் / சாதனம் தேவைப்படும்.

The post டில்லியில் விரைவில் Vi 5G! first appeared on .

]]>
இந்த மாதமே துவங்குகிறது ஏர்டெல் 5G சேவை! https://www.91mobiles.com/tamil/airtel-5g-deployment-to-begin-this-august/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=airtel-5g-deployment-to-begin-this-august Thu, 04 Aug 2022 13:23:44 +0000 https://www.91mobiles.com/tamil/?p=1373 பார்தி ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் 5ஜி சேவை துவங்குவது பற்றிய முக்கிய தகவலை வெளியிட்டு இருக்கிறது. 5ஜி வெளியீட்டுக்காக ஏர்டெல் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துள்ளது. 5ஜி ரேடியோ அக்சஸ் நெட்வொர்க் சேவையை வழங்குவதற்காக பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் நோக்கியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. சமீபத்தில் தான் 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் நடந்து முடிந்த நிலையில், பல ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. ஏலத்தில் ஏர்டெல் நிறுவனம் ரூ. 43,084 கோடி மதிப்பிலான 5ஜி ஸ்பெக்ட்ரத்தை வாங்கி […]

The post இந்த மாதமே துவங்குகிறது ஏர்டெல் 5G சேவை! first appeared on .

]]>

பார்தி ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் 5ஜி சேவை துவங்குவது பற்றிய முக்கிய தகவலை வெளியிட்டு இருக்கிறது.

5ஜி வெளியீட்டுக்காக ஏர்டெல் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துள்ளது. 5ஜி ரேடியோ அக்சஸ் நெட்வொர்க் சேவையை வழங்குவதற்காக பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் நோக்கியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. சமீபத்தில் தான் 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் நடந்து முடிந்த நிலையில், பல ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. ஏலத்தில் ஏர்டெல் நிறுவனம் ரூ. 43,084 கோடி மதிப்பிலான 5ஜி ஸ்பெக்ட்ரத்தை வாங்கி இருக்கிறது. இது மட்டுமின்றி 5ஜி நெட்வொர்க் தொடர்பாக எரிக்சன் மற்றும் சாம்சங் நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் போடப்பட்டு இருப்பதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே 5ஜி சேவையை வெளியிட ஏர்டெல் நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. இந்த ஆண்டு சாம்சங் நிறுவனத்துடனான ஒப்பந்தம் துவங்க இருக்கும் நிலையில், எரிக்சன் நிறுவனத்துடன் சேர்ந்து நாடு முழுக்க கனெக்டிவிட்டி சார்ந்த சேவைகளை ஏர்டெல் நீண்ட காலமாக வழங்கி வருகிறது.

மத்திய தொலைத்தொடர்புத் துறை சார்பில் 5ஜி ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கீடு செய்தற்கான ஏலம் நடத்தப்பட்டது. இதில் ஏர்டெல் நிறுவனம் 19 ஆயிரத்து 867.8 மெகாஹெர்ட்ஸ் வரையிலான ஸ்பெக்ட்ரத்தை 900 மெகாஹெர்ட்ஸ், 1800 மெகாஹெர்ட்ஸ், 2100 மெகாஹெர்ட்ஸ் மற்றும் 3300 மெகாஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் பேண்ட்களில் வாங்கி இருக்கிறது.

ஏர்டெல் மற்றும் எரிக்சன் நிறுவனங்கள் இடையே 25 ஆண்டு கால தொடர்பு இருக்கிறது. எரிக்சன் சார்பில் நாடு முழுக்க பல தலைமுறை மொபைல் தகவல் பரிமாற்றத்தை செயல்படுத்த வைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. சமீபத்திய 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் நிறைவு பெற்றதை அடுத்து இந்த இரண்டு நிறுவனங்களுக்கிடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. ஏர்டெல் நிறுவனம் எரிக்சன் ரேடியோ சிஸ்டம், எரிக்சன் மைக்ரோவேவ் மொபைல் டிரான்ஸ்போர்ட் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சீரான 5ஜி ரேடியோ அக்சஸ் நெட்வொர்க் சார்ந்த சேவைகளை வழங்க இருக்கிறது. எரிக்சன் சார்பில் நாட்டின் 12 வட்டாரங்களில் ஏர்டெல் நிறுவனத்திற்கு 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்பட இருக்கிறது.

இதனிடையே இந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 24 ஆயிரத்து 740 மெகாஹெர்ட்ஸ் வரையிலான ஸ்பெக்ட்ரத்தை ரூ. 88 ஆயிரத்து 078 கோடி செலவில் விலைக்கு வாங்கியது. வோடபோன் ஐடியா நிறுவனம் 3 ஆயிரத்து 300 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை வாங்கி இருக்கிறது.

இதனையடுத்து ஒவ்வொரு டெலிகாம் நிறுவனமும் இந்தியாவில் 5ஜி சேவையை வெளியிட துவங்க இருக்கும் நிலையில், பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். இந்தியாவில் 2023 முதல் 5ஜி சேவையை வழங்கும் என மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்து இருக்கிறார்.

மத்திய டெலிமேடிக்ஸ் துறை சார்பில் NSA கோர் நெட்வொர்க் உருவாக்கப்பட்டு வருகிறது. இது ஆகஸ்ட் மாதத்திற்குள் இது தயார் நிலைக்கு வந்து விடும். இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு டிசம்பர் வரை சோதனை நடைபெறும். அதன்பின், “அடுத்த ஆண்டு வாக்கில் இந்திய 5G ஸ்டாக் தயாராகிவிடும். அப்போது பி.எஸ்.என்.எல். மூலம் 5ஜி சேவைகள் வழங்கப்படும்.” என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post இந்த மாதமே துவங்குகிறது ஏர்டெல் 5G சேவை! first appeared on .

]]>