airtel 5G https://www.91mobiles.com/tamil Fri, 10 Feb 2023 12:16:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ஏர்டெல் 5ஜி சேவையை முழுமையாக அனுபவிக்க 5 திட்டங்கள்! https://www.91mobiles.com/tamil/5-airtel-5g-data-packs/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=5-airtel-5g-data-packs Fri, 10 Feb 2023 12:16:57 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5745 உங்கள் ஊரில் ஏற்கனவே ஏர்டெல் 5ஜி (Airtel 5G) சேவைகள் அறிமுகமாகி இருந்தாலும் சரி, அல்லது கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்றாலும் சரி.. “நீங்கள் ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவைகளை பெற ஸ்பெஷலாக எந்த திட்டத்தையும் ரீசார்ஜையும் செய்ய வேண்டிய அவசியமில்லை” என்று கூறுவார்கள். அது உண்மை தான்.. ஆனால் ஒரு சின்ன சிக்கல்! உங்களிடம் ஒரு ஆக்டிவ் பிளான் இருந்தால் மட்டுமே போதும், உங்களால் ஏர்டெல் 5ஜி நெட்வொர்க்கை பெற முடியும் / […]

The post ஏர்டெல் 5ஜி சேவையை முழுமையாக அனுபவிக்க 5 திட்டங்கள்! first appeared on .

]]>

உங்கள் ஊரில் ஏற்கனவே ஏர்டெல் 5ஜி (Airtel 5G) சேவைகள் அறிமுகமாகி இருந்தாலும் சரி, அல்லது கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்றாலும் சரி.. “நீங்கள் ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவைகளை பெற ஸ்பெஷலாக எந்த திட்டத்தையும் ரீசார்ஜையும் செய்ய வேண்டிய அவசியமில்லை” என்று கூறுவார்கள். அது உண்மை தான்.. ஆனால் ஒரு சின்ன சிக்கல்!

உங்களிடம் ஒரு ஆக்டிவ் பிளான் இருந்தால் மட்டுமே போதும், உங்களால் ஏர்டெல் 5ஜி நெட்வொர்க்கை பெற முடியும் / பயன்படுத்த முடியும் என்பது உண்மை தான். ஆனால் டெய்லி 1ஜிபி அல்லது டெய்லி 1.5ஜிபி டேட்டாவை வழங்கும் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துக்கொண்டு உங்களால் எப்படி உண்மையான 5ஜி ஸ்பீடை அனுபவிக்கவோ அல்லது பரிசோதிக்கவோ முடியும்?

5 திட்டங்கள்!

ஏர்டெல் 5ஜி நெட்வொர்க்கின் கீழ் கிடைக்கும் உண்மையான இன்டர்நெட் ஸ்பீடை அனுபவிக்க விரும்பினால்.. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஏர்டெல்லின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் 5 டேட்டா திட்டங்களில் (Data Packs) ஏதேனும் ஒன்றை ரீசராஜ் செய்வதே ஆகும்! எனவே, இது வீண் செலவு அல்ல.. ஒரு முடிவுக்கு வர உதவும் செலவாகும்! ஏர்டெல் டேட்டா-ஒன்லி பேக்குகளை ரீசார்ஜ் செய்வதன் மூலம் உங்கள் ஊரில் அல்லது உங்கள் 5ஜி போனில் கிடைக்கும் ஏர்டெல் 5ஜி நெட்வொர்க்கை முழுமையாக முயற்சி செய்து பார்க்கலாம். அதன் பின்னர் ஏர்டெல் 5ஜி-க்கு அப்கிரேட் ஆகலாமா? இதற்காக நம்பி செலவு செய்யலாமா? அல்லது 4ஜி சேவையிலேயே இருந்து விடலாமா? என்கிற முடிவுக்கு உங்களால் வர முடியும். எனவே கண்டிப்பாக இதுவொரு வீண் செலவாக இருக்காது!

முன்னரே குறிப்பிட்டபடி, ஏர்டெல்லின் கீழ் மொத்தம் 5 டேட்டா-ஒன்லி திட்டங்கள் உள்ளன. அவைகள் ஒரு நாள் முதல் முப்பது நாட்கள் வரையிலான வேலிடிட்டியை வழங்குகின்றன; கூடவே ஆக்டிவ் ரீசார்ஜ்ஜின் வேலிடிட்டி உடன் ஒற்று போகும் திட்டங்களும் உள்ளன! ஆகையால் கீழ்வரும் 5 திட்டடங்களில் – உங்கள் தேவைக்கும், பட்ஜெட்டிற்கும் ஏற்ற – ஏதேனும் ஒரு திட்டத்தை தேர்வு செய்து ஏர்டெல் 5ஜி நெட்வொர்க்கை பயன்படுத்திப் பாருங்கள்.

  1. ஏர்டெல் ரூ.19 டேட்டா பேக்

விலை: ரூ.19

வேலிடிட்டி: ஒரு நாள்

மொத்த டேட்டா: 1 ஜிபி

 

  1. ஏர்டெல் ரூ 98 டேட்டா பேக்

விலை: ரூ.98

வேலிடிட்டி: உங்களுடைய ஆக்டிவ் ரீசார்ஜிஜின் வேலிடிட்டி உடன் ஒற்றுப்போகும்

மொத்த டேட்டா: 5 ஜிபி

கூடுதல் நன்மை: வின்க் ம்யூசிக் பிரீமியம்

 

  1. ஏர்டெல் ரூ.148 டேட்டா பேக்

விலை: ரூ.148

வேலிடிட்டி: உங்களுடைய ஆக்டிவ் ரீசார்ஜிஜின் வேலிடிட்டி உடன் ஒற்றுப்போகும்

மொத்த டேட்டா: 15 ஜிபி

கூடுதல் நன்மை: ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் வழியாக ஷார்க் டேங்க் 2 -வை பார்த்து மகிழலாம்.

 

  1. ஏர்டெல் ரூ 181 டேட்டா பேக்

விலை: ரூ.181

வேலிடிட்டி: 30 நாட்கள்

மொத்த டேட்டா: தினமும் 1ஜிபி டேட்டா; மொத்தம் 30 ஜிபி

 

  1. ஏர்டெல் ரூ.301 டேட்டா பேக்

விலை: ரூ.301

வேலிடிட்டி: உங்களுடைய ஆக்டிவ் ரீசார்ஜிஜின் வேலிடிட்டி உடன் ஒற்றுப்போகும்.

மொத்த டேட்டா: 50 ஜிபி

கூடுதல் நன்மை: வின்க் ம்யூசிக் பிரீமியம்.

The post ஏர்டெல் 5ஜி சேவையை முழுமையாக அனுபவிக்க 5 திட்டங்கள்! first appeared on .

]]>
மதுரை, திருச்சி, கோயமுத்தூர், ஓசூருக்கும் ஏர்டெல் 5ஜி வந்தாச்சு! https://www.91mobiles.com/tamil/list-of-areas-where-airtel-5g-introduced-and-coverage-available-in-coimbatore-madurai-trichy-hosur/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=list-of-areas-where-airtel-5g-introduced-and-coverage-available-in-coimbatore-madurai-trichy-hosur Tue, 24 Jan 2023 11:43:22 +0000 https://www.91mobiles.com/tamil/?p=5320 அந்த நகரங்கள் – 5கோயம்புத்தூர் (Coimbatore), ஓசூர் (Hosur), திருச்சி (Trichy) மற்றும் மதுரை (Madurai) ஆகும்! 5ஜி சேவைகளை அறிமுகம் செய்த கையோடு, மேற்கூறிய 4 நகரங்களில் எந்தெந்த பகுதிகளில் / ஏரியாக்களில் 5ஜி பிளஸ் சேவைகள் அணுக கிடைக்கும் என்கிற பட்டியலையும் ஏர்டெல் வெளியிடப்பட்டுள்ளது.   மொத்தம் 52.. தமிழ்நாட்டில் மட்டும் 5! கோவை, ஓசூர், திருச்சி மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தியதின் மூலம், தற்போது ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி […]

The post மதுரை, திருச்சி, கோயமுத்தூர், ஓசூருக்கும் ஏர்டெல் 5ஜி வந்தாச்சு! first appeared on .

]]>

Highlights

  • பார்தி ஏர்டெல் நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள 4 நகரங்களில் தனது 5ஜி சேவைகளை (Airtel 5G) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இதன் மூலம் இந்தியாவில் 52 நகரங்களில் ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கத்துவங்கி இருக்கிறது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 நகரங்களும் அடக்கம்.

அந்த நகரங்கள் – 5கோயம்புத்தூர் (Coimbatore), ஓசூர் (Hosur), திருச்சி (Trichy) மற்றும் மதுரை (Madurai) ஆகும்! 5ஜி சேவைகளை அறிமுகம் செய்த கையோடு, மேற்கூறிய 4 நகரங்களில் எந்தெந்த பகுதிகளில் / ஏரியாக்களில் 5ஜி பிளஸ் சேவைகள் அணுக கிடைக்கும் என்கிற பட்டியலையும் ஏர்டெல் வெளியிடப்பட்டுள்ளது.

 

மொத்தம் 52.. தமிழ்நாட்டில் மட்டும் 5!

கோவை, ஓசூர், திருச்சி மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தியதின் மூலம், தற்போது ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவைகளானது நாட்டின் 52 நகரங்களில் அணுக கிடைக்கின்றன. அதேபோல சென்னையையும் சேர்த்து, தமிழகத்தில் உள்ள 5 நகரங்களில் ஏர்டெல்லின் 5ஜி பிளஸ் சேவைகள் அணுக கிடைக்கிறது. ஒருவேளை நீங்கள் கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் ஓசூரில் வசிப்பவராக இருந்தால், எந்தெந்த பகுதிகளில் / ஏரியாக்களில் ஏர்டெல் 5ஜி பிளஸ் கவரேஜ் கிடைக்கும் என்கிற பட்டியல் இதோ..

 

திருச்சி

 

  • தில்லை நகர்
  • ராக் ஃபோர்ட்
  • கே.கே.நகர்
  • கருமண்டபம்
  • திருநகர்
  • சஞ்சீவி நகர்
  • ஸ்ரீரங்கம்,
  • வள்ளுவர் சாலை
  • செல்வபுரம்
  • மேலூர் சாலை
  • பி.ஹெச்.இ.எல்.

 

மதுரை

 

  • கே.கே.நகர்
  • கோச்சடை
  • எல்லீஸ் நகர்
  • பசுமலை
  • மாட்டுத்தாவணி
  • திருப்பரங்குன்றம்
  • சோலைஅழகுபுரம்
  • மீனாட்சி நகர்
  • விரகனூர்
  • நேதாஜி தெரு
  • அலங்காநல்லூர் சாலை
  • திருவள்ளுவர் நகர்
  • கடச்சனேந்தல் சாலை
  • பழங்காந்தம்

 

ஓசூர்

 

  • பாரதிதாசன் நகர்
  • மூகொண்டப்பள்ளி
  • கணபதி நகர்
  • சிப்காட் ஐ லேண்ட்
  • பெரியார் நகர்
  • அவலப்பள்ளி
  • சாந்தி நகர்
  • பழைய ஏஎஸ்டிசி ஹட்கோ
  • விஓசி நகர்.

 

கோயம்புத்தூர்

 

  • 100 அடி சாலை
  • டவுன் ஹால்
  • காந்திபுரம்
  • சாய்பாபா காலனி
  • ரத்தினபுரி
  • கவுண்டம்பாளையம்
  • டாடாபாத்
  • சரவணம்பட்டி
  • சத்தி சாலை
  • உப்பிலிபாளையம்
  • சேரன் மா நகர்
  • ஆர்.எஸ்.புரம்
  • போதனூர்

 

20x முதல் 30x முறை அதிக வேகம்!

ஏர்டெல்லின் கூற்றுப்படி, நிறுவனத்தின் 5ஜி பிளஸ் நெட்வொர்க் ஆனது தற்போதைய 4ஜி நெட்வொர்க்குகளை விட 20x முதல் 30x அதிக வேகத்தை வழங்கும். ரிலையன்ஸ் ஜியோ அளவிற்கு இல்லையென்றாலும் கூட, ஏர்டெல் முடிந்த வேகத்தில் அதன் 5ஜி பிளஸ் சேவைகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. மேலும் இந்நிறுவனம், வருகிற மார்ச் 2024 க்குள் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்துவிட வேண்டும் என்கிற இலக்கையும் வைத்துள்ளது.

The post மதுரை, திருச்சி, கோயமுத்தூர், ஓசூருக்கும் ஏர்டெல் 5ஜி வந்தாச்சு! first appeared on .

]]>
இந்த 16 ஒன்ப்ளஸ் போன்களுக்கும் இப்போ 5ஜி கிடைக்கும்! https://www.91mobiles.com/tamil/16-oneplus-phones-you-can-start-jio-airtel-5g-service-now/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=16-oneplus-phones-you-can-start-jio-airtel-5g-service-now Wed, 04 Jan 2023 07:58:19 +0000 https://www.91mobiles.com/tamil/?p=4692 2020 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து OnePlus ஸ்மார்ட்போன்களிலும் ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி சேவையை இயக்க முடியும் என அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தங்களின் 5ஜி சேவைகளை வழங்கி வருகின்றன. ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி சேவை தற்போது 16 ஒன்பிளஸ் போன்களில் கிடைக்கத் தொடங்கி இருக்கிறது. இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகமான காலம் முதல் வேகமாக அது கிடைக்கும் பகுதிகள் விரிவுப்படுத்தப்பட்டு […]

The post இந்த 16 ஒன்ப்ளஸ் போன்களுக்கும் இப்போ 5ஜி கிடைக்கும்! first appeared on .

]]>

2020 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து OnePlus ஸ்மார்ட்போன்களிலும் ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி சேவையை இயக்க முடியும் என அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தங்களின் 5ஜி சேவைகளை வழங்கி வருகின்றன. ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி சேவை தற்போது 16 ஒன்பிளஸ் போன்களில் கிடைக்கத் தொடங்கி இருக்கிறது.

இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகமான காலம் முதல் வேகமாக அது கிடைக்கும் பகுதிகள் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமாக இருக்கும் ஜியோ மற்றும் ஏர்டெல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 5ஜி சேவைகளை வழங்குகின்றன. அதேபோல் 5ஜியை பெறுவதற்கான அப்டேட்டை அந்தந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.

அதன்படி 2020 முதல் வெளியான அனைத்து ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கும் 5ஜி ஆதரவு கிடைக்கத் தொடங்கி இருக்கிறது. பெரும்பாலான ஒன்பிளஸ் 5ஜி போன்களில் அதிவேக 5ஜி சேவையை இப்போதே பயன்படுத்தத் தொடங்கலாம். ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி சேவைக் கிடைக்கும் பகுதியில் 5ஜி ஆதரவு கொண்ட ஒன்பிளஸ் போன்கள் உடன் இருந்தால் 5ஜி சேவையை பயன்படுத்தத் தொடங்கலாம்.

ஒன்பிளஸ் 8 தொடரில் இருந்து தொடங்கப்பட்ட பெரும்பாலான ஒன்பிளஸ் போன்களில் 5ஜி ஆதரவு இருக்கிறது. ஜியோ மற்றும் ஏர்டெல் மட்டுமில்லை புதுடெல்லியில் Vi 5G இன் சோதனைக் கட்டத்தின் ஒரு பகுதியாக அதன் சாதனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. விஐ (Vi) 5ஜி சேவை கிடைத்த உடன் உங்கள் ஒன்பிளஸ் போனில் அதன் 5ஜி சேவையையும் பெறலாம்.

16 ஒன்பிளஸ் போன்கள் பட்டியல்

  • Oneplus 8
  • Oneplus 8T
  • Oneplus 8 Pro
  • Oneplus 9
  • Oneplus 9R
  • Oneplus 9RT
  • Oneplus 9 Pro
  • Onplus 10 T
  • Oneplus 10T
  • Oneplus 10 Pro
  • Oneplus Nord
  • Oneplus Nord 2T
  • Oneplus Nord 2
  • Oneplus Nord CE
  • Oneplus Nord CE 2
  • Oneplus Ce 2 Lite

 

ஆக்டிவேட் செய்வது எப்படி?

உங்கள் பகுதியில் ஜியோ அல்லது ஏர்டெல் 5ஜி கிடைத்தால் உங்கள் ஒன்பிளஸ் போனில் அதிவேக 5ஜி இணையத்தை பயன்படுத்தலாம். உங்கள் ஸ்மார்ட்போனில் எப்படி 5ஜி ஆதரவை இயக்குவது என பார்க்கலாம்.

ஸ்டெப் 1:

உங்கள் ஸ்மார்ட்போனில் ‘செட்டிங்ஸ்’ பயன்பாட்டைத் திறக்கவும்.

ஸ்டெப் 2:

‘மொபைல் நெட்வொர்க்குகள்’ என்ற தேர்வுக்குள் செல்லவும்.

ஸ்டெப் 3:

இதில் ஜியோ சிம் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.

ஸ்டெப் 4:

இதில் ‘விருப்பமான நெட்வொர்க் வகை’ தேர்வைக் கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 5:

இதில் 5G நெட்வொர்க் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.

 

Jio True 5G தகுதியான ஒன்பிளஸ் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் 5ஜி சேவையை பயன்படுத்த முடியும். இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் True 5G சேவை கிடைக்கத் தொடங்கும் என ஜியோ அறிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் மார்ச் 2024க்குள் ஏர்டெல் 5ஜி ப்ளஸ் சேவை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என உறுதி செய்திருக்கிறது.

Jio 5G கிடைக்கும் பகுதிகள்

டெல்லி, மும்பை, வாரணாசி, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், சென்னை, நாத்வாரா, புணே, குருகிராம், நொய்டா, காஜிதாபாத், ஃபரிதாபாத் மற்றும் குஜராத்தின் அனைத்து 33 மாவட்ட தலைமையகங்களிலும் கிடைக்கிறது.

 

The post இந்த 16 ஒன்ப்ளஸ் போன்களுக்கும் இப்போ 5ஜி கிடைக்கும்! first appeared on .

]]>
இனி எல்லா ஒன்ப்ளஸ் மற்றும் ஒப்போ 5ஜி போன்களிலும் ஏர்டெல் 5ஜி வரும்! https://www.91mobiles.com/tamil/all-oneplus-and-oppo-5g-smartphones-will-work-on-airtel-5g-plus-in-india/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=all-oneplus-and-oppo-5g-smartphones-will-work-on-airtel-5g-plus-in-india Wed, 02 Nov 2022 13:35:45 +0000 https://www.91mobiles.com/tamil/?p=3378 ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் அதன் ஏர்டெல் 5ஜி பிளஸ் (Airtel 5G Plus) சேவையை அறிமுகம் செய்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் இந்த புதிய 5ஜி நெட்வொர்க் சேவை இதுவரை குறிப்பிட்ட சில 5G ஸ்மார்ட்போன்களில் மட்டுமே செயல்பட்டு வந்தது. ஆனால், இப்போது OnePlus மற்றும் Oppo நிறுவனத்திற்குச் சொந்தமான அனைத்து 5ஜி போன்களில் எடுக்கும் என்று ஏர்டெல் கூறியுள்ளது. ஒன்ப்ளஸ் தற்போது பல 5G போன்களை வெளியிட்டு இருக்கிறது. OnePlus இன் சமீபத்திய மாடலான OnePlus 10 […]

The post இனி எல்லா ஒன்ப்ளஸ் மற்றும் ஒப்போ 5ஜி போன்களிலும் ஏர்டெல் 5ஜி வரும்! first appeared on .

]]>

ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் அதன் ஏர்டெல் 5ஜி பிளஸ் (Airtel 5G Plus) சேவையை அறிமுகம் செய்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் இந்த புதிய 5ஜி நெட்வொர்க் சேவை இதுவரை குறிப்பிட்ட சில 5G ஸ்மார்ட்போன்களில் மட்டுமே செயல்பட்டு வந்தது. ஆனால், இப்போது OnePlus மற்றும் Oppo நிறுவனத்திற்குச் சொந்தமான அனைத்து 5ஜி போன்களில் எடுக்கும் என்று ஏர்டெல் கூறியுள்ளது.

ஒன்ப்ளஸ் தற்போது பல 5G போன்களை வெளியிட்டு இருக்கிறது. OnePlus இன் சமீபத்திய மாடலான OnePlus 10 Pro சிறிது காலத்திற்கு முன்பு 5G-க்கு ஆதரவைப் பெற்றது.
இது ஜியோ மற்றும் ஏர்டெல்லின் 5G இரண்டையும் ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஏர்டெல்லின் 5ஜியை ஆதரிக்காத ஒன்பிளஸின் சில போன்கள் 5ஜி அப்டேட்டைப் பெறாமல் இருந்தது.

OnePlus மட்டுமல்ல, Oppo வின் 5ஜி ஸ்மார்ட்போன் கூட ஏர்டெல் 5ஜி சேவையை இயக்காமல் இருந்து வந்தது. இப்போது நிலைமை மாறியுள்ளது. காரணம், இப்போது Oppo மற்றும் OnePlus நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போனகளின் பெரும்பாலான மாடல்கள் ஏர்டெல் 5ஜி சேவைக்கான அப்டேட்டை பெற்றுவிட்டன என்று கூறப்படுகிறது.

இதை அதிகாரப்பூர்வமாக OnePlus அறிவிக்கவில்லை, ஆனால் இதை பார்தி ஏர்டெல் இணையதளத்தில் நம்மால் காண முடிகிறது. சில நாட்களுக்கு முன், 5G-யை ஆதரிக்கும் மற்றும் ஆதரிக்காத OnePlus மற்றும் Oppo இன் சாதனங்களைப் பற்றி. பட்டியலை வெளியிட்டிருந்தோம்.

ஆனால் இப்போது, இந்தியாவில் உள்ள அனைத்து OnePlus மற்றும் Oppo 5G போன்களும் 5Gயை ஆதரிக்கின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த பிராண்டில் எந்தெந்த சாதனங்கள் 5ஜி ஆதரவைப் பெற்றுள்ளன என்பதை இப்போது பார்க்கலாம்.

ஏர்டெல் 5ஜியை ஆதரிக்கும் ஒன்பிளஸ் 5ஜி போன்கள்:

ஏர்டெல்லின் 5G சேவைக்கான சமீபத்திய அப்டேட்டை பெற்ற சாதனங்களில் OnePlus 8, OnePlus 8T, OnePlus 8 Pro, OnePlus Nord 2 மற்றும் OnePlus 9R போன்றவை அடங்கும்.

அதேபோல், ஏர்டெல்லின் 5G NSA நெட்வொர்க்குகளை ஆதரிக்கும் அனைத்து OnePlus ஸ்மார்ட்போன்களும் இப்போது 5ஜி சேவையுடன் செயல்படுகின்றன.
இதில் OnePlus 9 Pro, OnePlus Nord CE OnePlus Nord, OnePlus 9, OnePlus Nord CE Lite 2, OnePlus 10R, OnePlus 2, Nord, OnePlus 10 Pro 5G, OnePlus Nord 2T, OnePlus 10T, OnePlus 9RT, OnePlus 8, OnePlus 8T, OnePlus 8 Pro, OnePlus Nord 2 மற்றும் OnePlus 9R போன்ற மாடல்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் 5ஜியை ஆதரிக்கும் ஒப்போ 5ஜி போன்கள்

அனைத்து Oppo 5ஜி போன்களும் இப்போது பார்தி ஏர்டெல்லின் 5G நெட்வொர்க்குகளை ஆதரிக்கின்றன.
ஏர்டெல் 5G சேவைக்கான ஆதரவைப் பெற்ற சமீபத்திய Oppo சாதனங்கள் – Oppo F19 Pro Plus, Oppo Reno5G Pro, Oppo Reno 6, Oppo Reno 6 Pro, Oppo A53s, Oppo A74, Oppo Reno 7 Pro 5G, Oppo F21 Pro 5G, Oppo Reno 7, Oppo Reno 8, Oppo Reno 8 Pro, Oppo K10 5G மற்றும் Oppo F21s Pro 5G மாடல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

Oppo அதன் சாதனங்களுக்கான அப்டேட்களை விரைவாக வெளியிடுகிறது. இந்த ஒப்போ 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஏதேனும் உங்களிடம் இருந்தால் ஏர்டெல் 5ஜியை நீங்கள் பயன்படுத்தத் துவங்கலாம்.

The post இனி எல்லா ஒன்ப்ளஸ் மற்றும் ஒப்போ 5ஜி போன்களிலும் ஏர்டெல் 5ஜி வரும்! first appeared on .

]]>
உஷார்! 5G சேவை பெயரில் மோசடி https://www.91mobiles.com/tamil/5g-sim-upgrade-fraud-smartphone-user-be-alert/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=5g-sim-upgrade-fraud-smartphone-user-be-alert Tue, 11 Oct 2022 14:23:01 +0000 https://www.91mobiles.com/tamil/?p=2939 இந்தியாவில் கடந்த வாரம் இந்தியன் மொபைல் காங்கிரஸ் 2022 இல் 5G மொபைல் நெட்வொர்க் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வாரம், ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை தங்கள் வெளியீடு திட்டங்களையும், இந்தியா முழுவதும் 5G இன் ஆரம்ப வெளியீட்டிற்கு தகுதியான நகரங்களின் ஆரம்ப பட்டியலையும் அறிவித்துள்ளன. இந்தியா முழுவதும் 5ஜி போன்களை வைத்திருக்கும் மக்கள் தங்கள் போன்களில் 5ஜியின் ஆற்றலையும் வேகத்தையும் அனுபவிக்க ஆர்வமாக உள்ள நிலையில், ஹைதராபாத் சைபர் க்ரைம் பிரிவு ஒரு புதிய மோசடி […]

The post உஷார்! 5G சேவை பெயரில் மோசடி first appeared on .

]]>

இந்தியாவில் கடந்த வாரம் இந்தியன் மொபைல் காங்கிரஸ் 2022 இல் 5G மொபைல் நெட்வொர்க் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வாரம், ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை தங்கள் வெளியீடு திட்டங்களையும், இந்தியா முழுவதும் 5G இன் ஆரம்ப வெளியீட்டிற்கு தகுதியான நகரங்களின் ஆரம்ப பட்டியலையும் அறிவித்துள்ளன. இந்தியா முழுவதும் 5ஜி போன்களை வைத்திருக்கும் மக்கள் தங்கள் போன்களில் 5ஜியின் ஆற்றலையும் வேகத்தையும் அனுபவிக்க ஆர்வமாக உள்ள நிலையில், ஹைதராபாத் சைபர் க்ரைம் பிரிவு ஒரு புதிய மோசடி குறித்து எச்சரித்துள்ளது.

மோசடி

அறிக்கையின்படி, மோசடி செய்பவர்கள் அப்பாவி மக்களுக்கு அழைப்புகளை விடுத்து, அவர்களது போனை 4ஜி இணைப்பில் இருந்து 5ஜி இணைப்பிற்கு மாற்றித் தருவதாகக் கூறி அனுப்பப்படும் இணைப்புகளைக் கிளிக் செய்த பிறகு பயனர் தங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை இழந்ததற்காகப் பல புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது மிகவும் மோசமான மோசடியாக இருப்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆகையால், 5G மோசடியில் இருந்து விலகி இருங்கள்.

பாதிப்பு

சில மோசடி செய்பவர்கள் பயனர்களின் போன்களுக்கு ஆபத்தான இணைப்பை அனுப்புகிறார்கள். அதாவது ஒரு லிங்க்-ஐ அனுப்புகிறார்கள். இது பயனர்களுக்கு 4G இலிருந்து 5G நெட்வொர்க் அப்டேட் செய்ய உதவுவதாகக் கூறுகிறது. 5ஜியின் சுவையை ருசிக்கத் துடிக்கும் பொதுமக்கள், இது ஏதோ அதிகாரப்பூர்வ செய்தி என்று நினைத்து இந்த இணைப்பை கிளிக் செய்கிறார்கள்.
இந்த லிங்க் உங்கள் போனில் உள்ள டேட்டாவை ஹேக் செய்ய அனுமதிக்கிறது. இதன் மூலம் ஹேக்கர்கள் உங்கள் போனில் உள்ள தகவலைத் திருடுகிறார்கள். இணைப்பைக் கிளிக் செய்தவுடன், குற்றவாளிகள் வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணை அறிந்தவுடன், அவர்கள் தொலைப்பேசி எண்ணைத் தடுத்து, சிம்மை மாற்றிக்கொள்கிறார்கள். இதன் விளைவாக மக்கள் தங்கள் சொந்த சிம்மிற்கான அணுகலை இழக்கிறார்கள்.

கவனம் தேவை

இதன் காரணமாகப் பல பயனர்கள் சைபர் குற்றவாளிகள் தங்கள் தொலைப்பேசியின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டதாகப் புகார் அளித்துள்ளனர். அறிமுகமில்லாத எண் அல்லது அனுப்புநரிடமிருந்து “4G இலிருந்து 5G-க்கு மாறுங்கள்” என்று வரும் எந்த செய்தியையும் கிளிக் செய்ய வேண்டாம் என்று சைபர் பிரிவு பயனர்களை எச்சரித்துள்ளது. சிம் வழங்குநரின் அதிகாரப்பூர்வ தளத்தில் சரியான விவரங்களைப் பார்ப்பது எப்போதும் நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் 5ஜி மற்றும் ஜியோ 5ஜி

ஏர்டெல் 5ஜி பிளஸ் திட்டம் இப்போது இந்தியாவின் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாரணாசி ஆகிய 8 நகரங்களில் பயன்பாட்டில் உள்ளது. ஜியோ பயனர்களுக்கு, 5G சோதனைகள் டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் தொடங்குகிறது. இந்த நகரங்களில் உள்ள பயனர்கள் 5ஜி சேவைக்கு மாற நினைத்தால், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ ஸ்டோர்களுக்குச் சென்று மட்டும் விண்ணப்பிக்கவும். இதிலும் குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே 5ஜி சேவை வழங்கப்படுகிறது. மற்ற நகரங்களில் உள்ளவர்களுக்கு இன்னும் 5ஜி சேவை வழங்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.

The post உஷார்! 5G சேவை பெயரில் மோசடி first appeared on .

]]>